உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி முதல்வராக ஆதிஷி இன்று பதவியேற்பு

டில்லி முதல்வராக ஆதிஷி இன்று பதவியேற்பு

புதுடில்லி: டில்லி ஆம் ஆத்மி கட்சி புதிய முதல்வராக ஆதிஷி இன்று பதவியேற்க உள்ளார்.இக்கட்சி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான சி.பி.ஐ., வழக்கில், கடந்த 15ல், உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து, சிறையில் இருந்து வெளியே வந்தார். எனினும், முதல்வர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது போன்ற பல்வேறு நிபந்தனைகளால் அவர் அதிருப்தி அடைந்தார்.இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டத்தை கூட்டி முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதன்படி ராஜினாமா செய்து டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். அப்போது அவருடன் சென்ற ஆதிஷி, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு கடிதத்தை, துணைநிலை கவர்னர் சக்சேனாவிடம் அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.இதையடுத்து டில்லி புதிய முதல்வராக ஆதிஷி பதவியேற்கிறார். அவருடன் சில அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். அவர்களுக்கு துணை நிலை கவர்னர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kumar Kumzi
செப் 21, 2024 10:49

அங்கு ஒரு டம்மி வேறு ஒன்றுமில்லை


Sridhar
செப் 21, 2024 10:41

மொதல்ல அந்த வீட்ட காலிபண்ரானான்னு பாப்போம். அதிசி அந்த வீட்டுக்குள்ள போய் சுகம் கண்டுடிச்சுனா அப்புறம் பதவியை விட்டுக்கொடுக்க மனசே வராது. பிராடு பயலுக்கு அப்புறம் திண்டாட்டம் தான். என்னென்ன நடக்கப்போவுதுனு நினைச்சாலே ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும்போல. இவுனுக தேர்தல்ல ஜெயிக்கறானுங்களானு பாக்கணும். இத்தனை செஞ்சதுக்கப்புறமும் மக்கள் இவனுக்கு வோட்டு போட்டாங்கன்னா டெல்லிக்கு விடிவுகாலம் கிடையாதுன்னு முடிவுபண்ணிடலாம்.


Duruvesan
செப் 21, 2024 09:34

கெஜ்ரி தவறு செய்து விட்டர்கள். இந்த பொம்பள சசிகலா 2


M.S.Jayagopal
செப் 21, 2024 08:58

ஆதிஷி அம்மா மம்தாபானர்ஜீயைவிட அதிகமாக வாயாடுவார்.


Rajasekar Jayaraman
செப் 21, 2024 07:01

இதுக்காகதான் அவள் பேயாட்டம் ஆடினால் போல.


Kasimani Baskaran
செப் 21, 2024 06:58

கட்சியை அடுத்த கோஷ்டி அபகரித்து விட்டது. கேஜ்ரிவாள் பற்றிய சுவையான தகவல்கள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கலாம்.


ஆதிகுடி கொற்கை
செப் 21, 2024 05:26

ரகுவரனுக்கு சுடிதார் போட்டா மாதிரி இருக்கும் இந்த அம்மா அடுத்து என்னவெல்லாம் பண்ணப்போகுதோ !!!


புதிய வீடியோ