உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சரமாரியாக பேசுனீங்களே! சாரி கேளுங்க! அ.தி.மு.க., மாஜி அமைச்சரை கண்டித்த சுப்ரீம்கோர்ட்

சரமாரியாக பேசுனீங்களே! சாரி கேளுங்க! அ.தி.மு.க., மாஜி அமைச்சரை கண்டித்த சுப்ரீம்கோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தமிழக அரசையும், முதல்வரையும் விமர்சித்த விவகாரத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஏன் மன்னிப்பு கேட்கக்கூடாது என்று சுப்ரீம்கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.தமிழகத்தில் மதுபான விற்பனை, கஞ்சா புழக்கம், வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு சென்றது என பல விஷயங்கள் குறித்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சி.வி. சண்முகம் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசி இருந்தார். அவரது பேச்சுகள் தமிழக அரசுக்கும், முதல்வரின் பெயருக்கும் களங்கம் விளைவிப்பது போல் இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, சி.வி. சண்முகத்துக்கு எதிராக 4 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சி.வி. சண்முகம் மனு தாக்கல் செய்தார். 2 வழக்குகளை மட்டும் ரத்து செய்ய உத்தரவிட்ட ஐகோர்ட், மற்ற 2 வழக்குகளை ரத்து செய்ய மறுத்துவிட்டது. கோர்ட் உத்தரவை எதிர்த்து சி.வி. சண்முகம் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.இந் நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது; ஒரு மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு எப்படி இவ்வாறு பேசமுடிகிறது? இவ்வளவு மோசமாக பேசிய பேச்சுக்கு ஏன் சி.வி. சண்முகம் மன்னிப்பு கேட்கக்கூடாது? முதல்வரை விமர்சித்த விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அதுதொடர்பான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மன்னிக்க முடியாத குற்றம் என்று கருதுவதால் வழக்கை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கு விசாரணை அக்டோபர் 15ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Anantharaman Srinivasan
செப் 23, 2024 22:58

சொல்லவேண்டிய விஷயங்களை கௌரவமான வார்த்தைகளில் பேசியிருந்தால் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலைமை வந்திருக்காது. மைக்கை பிடித்தவுடன் கைதட்டல் பெறவேண்டி திமிர் வந்து விட்டதால் அறிவு மழுங்கி விட்டது..


subramanian
செப் 23, 2024 21:43

அவர் பயன்படுத்திய வார்த்தையில் தவறு இருக்கலாம்.... அவர் சொன்ன விவரம் தவறு என்று நிரூபிக்க வேண்டும். சண்முகம் இப்படியே பிரமாணம் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.


Ganapathy
செப் 23, 2024 21:33

திமுக கொத்தடிமைகள்


Ganapathy
செப் 23, 2024 21:32

திமுக கிளை.


S.L.Narasimman
செப் 23, 2024 20:19

ஏன் இந்த சுடாலினும் ,ஆ.ராசா மற்ற மந்திரிகள், மேடை பேச்சாளர்கள் எடப்பாடியார் மோடி அவர்களையெல்லாம் இழிவாக பேசாத பேச்சா.


வைகுண்டேஸ்வரன்
செப் 23, 2024 18:40

முதல்வரை விமர்சித்த விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அதுதொடர்பான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மன்னிக்க முடியாத குற்றம் என்று கருதுவதால் வழக்கை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.


nagendhiran
செப் 23, 2024 18:38

ஆர்எஸ்.பாரதி ராஜா பேசியதை விட இவண் தவறா பேசிட்டான்?


ஆரூர் ரங்
செப் 23, 2024 18:07

கருணாநிதி பேசிய அராஜக அருவருக்கத்தக்க பேச்சுகளுக்குப் பின்னும் நடு இரவில் சமாதிக்கு அனுமதி அளித்தது யார் ?


அஸ்வின்
செப் 23, 2024 17:08

மனுசன்யா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை