உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆமதாபாத் விபத்து - விமானம் கிளம்பும் வரை எந்த பிரச்னையும் இல்லை: ஏர் இந்தியா விளக்கம்

ஆமதாபாத் விபத்து - விமானம் கிளம்பும் வரை எந்த பிரச்னையும் இல்லை: ஏர் இந்தியா விளக்கம்

புதுடில்லி: '' ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா போயிங் 787- 8 ட்ரீம் லைனர் விமானத்தின் வலது பக்க இன்ஜீன் கடந்த மார்ச் மாதம் மாற்றப்பட்டது. விமானம் கிளம்பி செல்லும் வரை எந்த பிரச்னையும் தென்படவில்லை,'' என அந்த நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார்.குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து கடந்த 12ம் தேதி பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் 30 வினாடிகளில் கீழே நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்தவர்கள் உட்பட 274 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து விமானங்களின் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்த டிஜிசிஏ உத்தரவிட்டு உள்ளது. விபத்து நடந்த இடத்தில் இருந்து கறுப்பு பெட்டி மீட்கப்பட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ga7br1me&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விபத்தைத் தொடர்ந்து ஏர் இந்தியா விமானங்கள் குறித்தும், விபத்து குறித்தும் பல்வேறு தகவல் வெளியாகிவருகிறது.இந்நிலையில் ஏர் இந்தியாவின் சிஇஓ கேம்ப்பெல் வில்சன் கூறியதாவது: விமானம் குறித்து, முக்கிய தகவல்களை உங்களிடம் பகிரந்து கொள்ள விரும்புகிறோம். இந்த விமானம் நன்கு பராமரிக்கப்பட்டது. கடைசியாக 2023 ஜூன் மாதம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. அடுத்த சோதனை 2025 டிச., மாதம் நடைபெற இருந்தது. விமானத்தின் வலது பக்க இன்ஜின் 2025 ல் பழுது கண்டறியப்பட்டு மாற்றப்பட்டது. இடது இன்ஜின் ஏப்., மாதம் ஆய்வு செய்யப்பட்டது.இரண்டு இன்ஜின்களும் தொடர்ச்சியாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. விமானம் கிளம்பும் முன்னர் வரை எந்த பிரச்னையும் தென்படவில்லை. இன்றைய தேதி வரை நாங்கள் அறிந்த உண்மை இதுவாகும். அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுக்காக, நாங்களும், விமான போக்குவரத்து துறையும் காத்திருக்கிறோம்.விமான விபத்தைத் தொடர்ந்து கடந்த 14 ம் தேதி டிஜிசிஏ பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், எங்களின் 33 போயிங் 787 வகை விமானங்களிலும் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் 26 விமானங்கள் பறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற விமானங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. பறப்பதற்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்னர், கூடுதல் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.இந்த ஆய்வைத் தொடர்ந்து, போயிங் 787 விமானத்தை டிஜிசிஏ உறுதி செய்துள்ளதுடன், பறப்பதற்கு தேவையான பராமரிப்பை கொண்டுள்ளது என தெரிவித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

கறுப்பு பெட்டி சேதமா

இதனிடையே, விமானத்தின் கறுப்பு பெட்டி சேதம் அடைந்துள்ளதாகவும், வெளிநாட்டுக்கு அனுப்பி தகவல்களை பெற முயற்சி நடப்பதாகவும் தகவல் வெளியானது.இது தொடர்பாக மத்திய அரசு அளித்த விளக்கத்தில் கூறியுள்ளதாவது:விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கறுப்புப் பெட்டியை அமெரிக்காவில் டிகோடிங் செய்யும் முடிவை இந்திய புலனாய்வுக் குழு தான் எடுத்துள்ளது. சர்வதேச சிவில் விமான போக்குவரத்து விதிகளின் படியே விசாரணை நடைபெறுகிறது எனத் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

புரொடஸ்டர்
ஜூன் 20, 2025 09:16

"ஆபரேஷன் சிந்தூர்" விளைவாக தடை செய்யப்பட்ட விமான நிலையங்கள் கிரவுண்ட் சேவைகள் ஒப்பந்ததாரர் ஏர் இந்தியா விமானங்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் சிலருடன் செய்துள்ள சதி செயல் என்ற உண்மை எப்போது கண்டுபிடிக்கப்படும்?


Rt
ஜூன் 19, 2025 22:56

விமானி வேண்டுமென்று விபத்தை ஏற்படுத்திருக்க வேண்டும்


ஆரூர் ரங்
ஜூன் 19, 2025 22:34

கறுப்புப் பெட்டியை அமெரிக்காவில் சோதித்து விமானி கடைசியாக போயிங்தான் சிறந்த விமானம் எனக் கூறியதாக அறிக்கை கொடுப்பாங்க. அவங்க தயாரிப்பாச்சே.விட்டுக் கொடுக்க முடியுமா?.


JaiRam
ஜூன் 19, 2025 21:08

இந்த விமானத்தில் உள்ள மென்பொருள் விமானம் தரையில் இறங்குவதாக நினைத்து இன்ஜினை ஆப் செய்து விட்டது அவ்வளவுதான் வேறு எந்த பிரச்சினையும் கிடையாது


தாமரை மலர்கிறது
ஜூன் 19, 2025 20:32

பைலட் கவனமாக இருக்க வேண்டும். அவர் தான்தோன்றிதனமாக இருந்தால், பொதுமக்கள் அவதிப்பட நேரிடும்.


Ramesh Sargam
ஜூன் 19, 2025 20:20

கிளம்பியதற்கு பிறகு ஏன் பிரச்சினை, எப்படி பிரச்சினை, எதற்காக பிரச்சினை என்பதையும் அறிந்து கூறவும். இனி அறிந்து என்ன பயன்? போன உயிர்கள் திரும்ப வருமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை