உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிக்கலான கோடிங் எழுதும் திறன் ஏஐக்கு இல்லை; கணித்து சொல்கிறார் பில்கேட்ஸ்!

சிக்கலான கோடிங் எழுதும் திறன் ஏஐக்கு இல்லை; கணித்து சொல்கிறார் பில்கேட்ஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஏ.ஐ.,க்கு சிக்கலான கோடிங் எழுதும் திறன் இல்லை' என மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்து உள்ளார்.ஐடி துறைக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏ.ஐ.,) மிகவும் பேருதவியாக இருக்கிறது. ஏ. ஐ., தொடர்பாக, மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் கூறியதாவது:எளிதாக இருப்பதை கோடிங் எழுதி மனிதர்களுக்கு உதவியாக இருக்கும் ஏ.ஐ.,க்கு சிக்கலான கோடிங் எழுதும் திறன் இல்லை. எளிதான கோடிங் எழுதுவதில், இன்றைய ஏ.ஐ., மனித வேலையை மாற்றும்.ஏ.ஐ.,யால் சிக்கலான கோடிங் எழுதுவதில் நிலவும் சிக்கல்களுக்கு அடுத்த ஓரிரு ஆண்டுகளில் அல்லது பத்து ஆண்டுகளில் தீர்வு கிடைக்குமா என்பது இந்த துறையில் உள்ளவர்களுக்கே தெரியவில்லை. ஆனால் ஏ. ஐ., என்னை ஆச்சரியப்படுத்தும் விகிதத்தில் மேம்பட்டு வருகிறது. குறிப்பாக ஆராய்ச்சி திறன் உள்ளிட்டவற்றில் முன்னேற்றம் கண்டு வருகிறது.ஏ.ஐ., ஒரு சிறந்த வேலையைச் செய்கிறது. அனைத்து தகவல்களையும் சேகரித்து பொருளை நன்கு அறிந்து, நான் தெரிந்து கொள்ள வேண்டியதை சுருக்கமாக கூறுகிறது. டெலிசேல்ஸ் வேலை அல்லது டெலிசப்போர்ட் வேலையை ஏ. ஐ., யால் செய்ய வைப்பது எப்போது மிகவும் நல்லது என்று நீங்கள் கூறலாம். அது மனிதர்களை விட மிகவும் துல்லியமானது. இவ்வாறு அவர் கூறினார்.தொழில்நுட்பத் துறையில் ஏ. ஐ., பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பதை கடினமாக்குமா என்பது குறித்த கேள்விக்கு பில்கேட்ஸ், 'உற்பத்தித்திறனை மேம்படுத்தும்போது, நீங்கள் அதிகமாக சம்பாதிக்கலாம். நீங்கள் குறைவான உற்பத்தித் திறனைப் பெற்றால், அது மோசமானது.மேலும் நீங்கள் அதிக உற்பத்தித்திறனைப் பெற்றால், அது நல்லது' என பதிலளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

SUBBU,MADURAI
ஆக 03, 2025 18:51

இந்த பில்கேட்ஸ் ஒரு நவரச நடிப்பு திலகம் நம் நாட்டை சூறையாட வந்த டீப் ஸ்டேட்டின் தலைவன் மூஞ்சியை அப்புராணியாக வைத்துக் கொண்டு இருக்கும் இவனை இந்தியர்கள் யாரும் நம்பக் கூடாது இவனை மட்டுமல்ல அமேசான் நிறுவன முதலாளி ஜெஃப் பெரோஸ் இவனையும் நம்பக் கூடாது இவர்கள் இருவரும் நம் நாட்டின் இயற்கை வளங்களை அழித்து செயற்கையாக மரபணு மாற்றப்பட்ட பயிர்களை அறிமுகம் செய்து நம் இயற்கை விவசாயத்தை அழிக்க வந்தவர்கள். அதுமட்டுமல்லாமல் பால் உற்பத்தியில் நம் இயற்கையான புல் உண்ணும் சைவ பசு மாட்டிற்கு பதிலாக அவர்கள் மீன் இறைச்சி மற்றும் பன்றி கொழுப்பில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டு எடுத்து அதை அவர்கள் மாட்டுக்கு செலுத்தி அதனால் வரும் கூடுதல் அசைவ பாலை நமக்கு விநியோகம் செய்ய நம்மை வற்புறுத்துகிறார்கள் அதுமட்டுமல்ல அந்த பாலை குடித்தால் சீக்கிரம் வயோதிக தன்மை அடைவது மட்டும் அல்லாமல பல் வேறு நோய்களுக்கும் ஆளாக நேரிடும் இதையெல்லாம் ஆராய்ந்து கணித்துதான் நம் மோடி அரசு அதற்கு நூறு சதவீதம் தடை விதித்து விட்டது. நம் இந்திய குடும்பங்களில் பசு என்றாலே அது புல்லை தின்று அது தரும் சுத்தமான இயற்கை பசும்பாலை நம் குழந்தைகளுக்கு கொடுப்பதுதான் மரபு அப்படி இருக்கும் போது மரபணு மாற்றப் பட்ட பசுக்களில் இருந்து கிடைக்கும் அசைவ பாலை நாம் வாங்க வேண்டும் என்று ஜோக்கர் ட்ரம்ப் வற்புறுத்துவது எந்த விதத்தில் நியாயம்?


புதிய வீடியோ