உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கை கொடுத்தது ஏ.ஐ., தொழில்நுட்பம்; 60 யானைகள் உயிரை காப்பாற்றிய ரயில் டிரைவர்

கை கொடுத்தது ஏ.ஐ., தொழில்நுட்பம்; 60 யானைகள் உயிரை காப்பாற்றிய ரயில் டிரைவர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திஸ்புர்: அசாம் மாநிலத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) தொழில்நுட்பம் உதவியால், தண்டவாளத்தை கடந்த 60 யானைகளின் உயிரை ரயில் டிரைவர் காப்பாற்றி உள்ளார்.

யானைகள் பலி

நாட்டின் பல மாநிலங்களில் யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இது போன்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு மத்திய அரசு தொழில்நுட்பம் உதவியுடன் சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கஜ்ராஜ் திட்டம்

அதன்படி, செயற்கை நுண்ணறிவு என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மேற்கு வங்கம், அசாம், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும், தமிழகத்தில் கோவையிலும் கஜ்ராஜ் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. இதன்படி, தண்டவாளங்கள் அருகே செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) சென்சார்கள், கேமிராக்கள் பொருத்தப்படும்.

வீடியோ

இந்த கேமிராக்களில் சாதாரண வீடியோ, தெர்மல் வியூ எனப்படும் வெப்ப காட்சி என இருவகையான வீடியோ காட்சிகளை பார்க்கலாம். தண்டவாளம், அதன் இருபக்கம் 100 அடி வரையில் யானைகள் வந்தால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது வேலை செய்யும்.

மெசேஜ்

யானை எங்கிருக்கிறது என்பது கண்டறியப்பட்டு, அருகில் உள்ள ரயில் நிலையம், அங்கு பணியில் இருக்கும் அதிகாரி, வனத்துறை ஊழியர்களுக்கு மெசேஜ் அனுப்பப்படும். அதாவது, யானை எந்த டிராக்கில் எத்தனையாவது மைல் கல் அருகே நிற்கிறது என்ற விவரங்கள் அந்த மெசேஜ் மூலம் தெரிவிக்கப்படும்.

ஹாரன்

அடுத்த நொடியே இதே மெசேஜ், ரயில் டிரைவர், உதவி டிரைவர் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டு படிப்படியாக ஹாரன் அடித்துக் கொண்டே ரயிலானது மிக மெதுவாக இயக்கப்படும். யானைகள் மட்டுமின்றி எந்த வனவிலங்குகள் தண்டவாளம் அருகில் வந்தாலும் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் செயல்படும்.

60 யானைகள்

இப்படியான நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தான் அசாமில் தண்டவாளத்தை கடந்த 60 யானைகளின் உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. அதன் விவரம் வருமாறு: கவுகாத்தியில் இருந்து லும்டிங் பகுதிக்கு காம்ரூப் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. ஹபாய்பூர், லம்சக்ஹாங் ரயில் நிலையங்கள் இடையே இந்த ரயில் வந்தபோது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் யானைகள் தண்டவாளத்தை கடக்கும் எச்சரிக்கை அறிவிப்பு இயங்கியது.

தண்டவாளத்தை கடந்தன

உடனடியாக சுதாரித்த ரயில் டிரைவர் தாஸ், உதவி ரயில் டிரைவர் உமேஷ் குமார் இருவரும் எமர்ஜென்சி பிரேக்குகளை பயன்படுத்தி ரயிலை நிறுத்தி உள்ளனர். அப்போது 60க்கும் மேற்பட்ட யானைகள், தங்கள் குட்டிகளுடன் தண்டவாளத்தை கடந்து மறுபுறம் சென்றன.

உறுதி

ரயிலில் இருந்து இறங்கிய டிரைவர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் யானைகள் கூட்டம் தண்டவாளத்தை கடந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டதா என்பதை நேரிடையாக சென்று உறுதிப்படுத்தினர். அதன் பின்னர் ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

குவியும் பாராட்டுகள்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் 60க்கும் மேற்பட்ட யானைகளின் உயிர் காப்பாற்றப்பட்டு உள்ளது. சரியான நேரத்தில் சுதாரித்து, சமயோசிதமாக நிலைமையை கையாண்டு, யானைகள் உயிரை காப்பாற்றியதில் முக்கிய பங்கு வகித்த ரயில் டிரைவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

கிஜன்
அக் 19, 2024 21:18

இதை கண்டுபிடித்தவர்களுக்கு கோடி நமஸ்காரங்கள் ... இங்கு கோவை ரயில் என்ஜின்களிலும் பொருத்த முடியுமா ?


Venkatesh
அக் 19, 2024 19:23

வாய்ப்பில்லிங்கோ....... 200 ரூபாய் வாங்க கையையும், மானங்கெட்ட பொழப்புல கிடைக்கும் சோற்றை தின்ன வாயையும் தான் பயன்படுத்த தெரியும்....


நிக்கோல்தாம்சன்
அக் 19, 2024 18:45

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்


Narayanan Sa
அக் 19, 2024 18:02

இந்தியாவில் ஆக்க பூர்வமான AI தொழில் நுட்பம் கையாளப்படும் விதம் மிகவும் வரவேற்க தக்கது. இதை பார்த்து உலக நாடுகள் வியக்கின்றன. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் செயல்பாடுகள் பிராமிப்பை தருகிறது. ஜெயஹிந்த்


Narayanan Sa
அக் 19, 2024 18:02

இந்தியாவில் ஆக்க பூர்வமான AI தொழில் நுட்பம் கையாளப்படும் விதம் மிகவும் வரவேற்க தக்கது. இதை பார்த்து உலக நாடுகள் வியக்கின்றன. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் செயல்பாடுகள் பிராமிப்பை தருகிறது. ஜெயஹிந்த்


RAMAKRISHNAN NATESAN
அக் 19, 2024 15:05

எங்க டுமீலு நாட்டுல வந்தேறிகளிடம் அறிவை அடகு வெச்ச ஊ ஊ பீ யி கும்பலு அதிகம் ..... அதுங்களுக்கு ஏ ஐ மூலமா மண்டையில அறிவை ஏத்த முடியுங்களா ????


பிரேம்ஜி
அக் 19, 2024 15:00

நல்ல செயல். ஓட்டுநர்கள் நீடூழி வாழ்க!


Krishna Gurumoorthy
அக் 19, 2024 14:02

ஓட்டுநர் குழுவின் மனிதாபிமான நடவடிக்கைக்கு பணிவான வணக்கங்கள் ???


Suppan
அக் 19, 2024 13:41

தண்டவாளங்களில் நாச வேலைகளை செய்யும் திவீரவாதிகளை அடையாளம் காட்டும் தொழில்நுட்பம் வேண்டும். சமீபத்தில் பல ரயில் விபத்துக்கள் இந்த நாசவேலைகளினால்தான் ஏற்பட்டன .


Pandi Muni
அக் 19, 2024 20:21

பரவி கிடக்கும் தீவிரவாத கும்பலை இனம் கண்டு சுட்டு தள்ளாத வரை AI தொழில் நுட்பத்தை கொண்டு ரயில் பயணிகளை காப்பாற்றுவது இயலாது.


முக்கிய வீடியோ