உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வான் பாதுகாப்பு கவச சோதனை வெற்றி: விஞ்ஞானிகளுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு

வான் பாதுகாப்பு கவச சோதனை வெற்றி: விஞ்ஞானிகளுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்: ஒடிசா கடற்கரையில் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகளுக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து உள்ளார்.போர்க்காலங்களில் எதிரி நாடுகள் ஏவும் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் முறியடிக்க வான் பாதுகாப்பு கவசம் மிகவும் முக்கியமானது. இந்தியாவுக்கான பிரத்யேக வான் பாதுகாப்பு கவச அமைப்பை உருவாக்க டி.ஆர்.டி.ஓ., எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் முயற்சி மேற்கொண்டுள்ளது.இந்த நிறுவனம் உருவாக்கிய வான் பாதுகாப்பு கவசத்தின் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=avvprrct&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒடிசா சந்திப்பூர் கடற்கரையிலிருந்து ஒருங்கிணைந்த வான்பாதுகாப்பு அமைப்பின் திறனை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.இந்த சாதனைக்காக, டிஆர்டிஓ, ராணுவம் மற்றும் இந்திய பாதுகாப்புத் துறைக்கு வாழ்த்துக்கள். இந்த தனித்துவமான சோதனை நமது நாட்டின் பல அடுக்கு வான் பாதுகாப்பு திறனை வெளிப்படுத்துகிறது. எதிரி ட்ரோன்களின் அச்சுறுத்தலை முறியடிக்க, பாதுகாப்பை பலப்படுத்த உதவும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

R. SUKUMAR CHEZHIAN
ஆக 24, 2025 15:24

வாழ்த்துகள் பெருமை படுகிறோம், அமெரிக்கா சீனா போன்ற நாடுகளை ஒரே நேரத்தில் போட்டு தள்ளும் அளவுக்கு நாம் பொருளாதார இராணுவ வல்லரசாக வேண்டும். ஜெய் ஹிந்த்.


Ramasamy
ஆக 24, 2025 12:08

இந்தியா விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் . ஜெய் ஹிந்த்


முக்கிய வீடியோ