உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமானப்படைக்கு 3 அதிநவீன உளவு விமானங்கள்: மத்திய அரசு முடிவு

விமானப்படைக்கு 3 அதிநவீன உளவு விமானங்கள்: மத்திய அரசு முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய விமானப்படைக்கு 3 அதிநவீன உளவு விமானங்களை வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: இந்த போர் விமானங்களின் மதிப்பு ரூ.10 ஆயிரம் கோடி. எதிரிகளின் ரேடார் நிலையங்கள், வான் பாதுகாப்பு மையங்கள் உள்ளிட்டவற்றை வானில் இருந்து துல்லியமாக கண்டறிந்து தாக்கி அழிக்க உதவும்.ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த Intelligence, Surveillance, Target Acquisition and Reconnaissance (I-STAR) திட்டம் குறித்து அடுத்த வாரம் நடக்கும் உயர் மட்ட பாதுகாப்பு அமைச்சக கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட உள்ளது. இந்த உளவு விமானங்களை டிஆர்டிஓ., உருவாக்கி வருகிறது. போயிங் மற்றும் பாம்பர் டையர் நிறுவனங்களிடம் இருந்து போர் விமானங்களை வாங்கியதுடன், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சாதனங்களை அதில் பொருத்த முடிவு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சாதனங்கள் அனைத்தும் பரிசோதனை செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி