உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 82 வயது மூதாட்டிக்கு வீல் சேர் தரவில்லை: குற்றச்சாட்டுக்கு ஏர் இந்தியா மறுப்பு

82 வயது மூதாட்டிக்கு வீல் சேர் தரவில்லை: குற்றச்சாட்டுக்கு ஏர் இந்தியா மறுப்பு

புதுடில்லி: விமான பயணம் மேற்கொண்ட மூதாட்டிக்கு வீல் சேர் தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டை ஏர் இந்தியா மறுத்துள்ளது.கடந்த மார்ச் 4ம் தேதி டில்லியில் இருந்து பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா விமானத்தில், முன்பதிவு செய்யப்பட்ட வீல் சேர் மறுக்கப்பட்டதால், 82 வயது மூதாட்டி ஒருவர் தவறி விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஒரு மணி நேரம் காத்திருந்தும் சக்கர நாற்காலி தரப்படாததால், குடும்பத்தினர் உதவியுடன் நடந்து சென்றபோது அந்த மூதாட்டி தவறி விழுந்து தலையில் அடைந்தார்.மூதாட்டியின் கணவர் ராணுவ லெப்டினன்ட் ஜெனரலாக இருந்தவர். இந்த சம்பவம் தொடர்பாக மூதாட்டியின் பேத்தி பருல் சமூக வலைதளத்தில் பிரச்னை குறித்து பதிவிட்டார்.அந்த பதிவிற்கு ஏர் இந்தியா விமானம் பதிலளித்து கூறியதாவது:எந்த நிலையிலும் வீல்சேர் மறுக்கப்படவில்லை. வயதான மூதாட்டி, தனது குடும்பத்தினருடன் வந்தார். அவருக்கு முன்பே வீல்சேர் புக் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் வந்தடைந்தபோது உதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், வீல் சேருக்கான அதிக தேவை மற்றும் பணியாளர் பற்றாக்குறை காரணமாக சேவையில் தாமதம் ஏற்பட்டது.வயதான அந்த மூதாட்டி, குடும்பத்தினருடன் நடந்து செல்ல முடிவு செய்தார், அப்போது அவர் துரதிர்ஷ்டவசமாக விழுந்தார். இந்த சம்பவத்திற்கு ஏர் இந்தியா வருத்தம் தெரிவித்து, இத்தகைய தாமதங்கள் எதிர்காலத்தில் ஏற்படாதவாறு தங்கள் நடைமுறைகளை மறுபரிசீலனை செய்து வருவதாகக் கூறியது. வயதான பயணிகளுக்கு உதவி வழங்குவதில் ஏர் இந்தியா அர்ப்பணிப்புடன் செயல் படுகிறது.இவ்வாறு ஏர் இந்தியா விமானம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Rajendran Arunachalam
மார் 09, 2025 13:14

நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் மறுப்பதற்கு இல்லை. ஆனால் மொழி தெரியாதவர்களும், முதல் முறை டிரான்சிட் செய்து பயணம் செய்வதாலும் நல்ல ஆரோக்கியமாக இருக்கும் போது கூட வீல் சேர் புக் செய்கிறார்கள். தாங்கள் பயணம் செய்கின்ற போது பார்த்தால் தெரியும். ஒரு விமானத்திற்கு 15-20 பேர் வீல் சேர் இல் வருவதும் அதில் 75%உடல் ஆரோக்கியமாக இருந்தும் வீல் சேர் உபயோகிப்பதை பார்க்க முடியும். நாமும் ஒத்துழைத்தால் கண்டிப்பாக எல்லோராலும் நல்ல சேவை செய்ய முடியும்


soundar
மார் 08, 2025 17:19

இது போல எனது தாய் கும் நடந்து உள்ளது chennai airport ல ஒன்று அல்லது இரண்டு வண்டி வைத்து 7 and 8 பேரையும் அழைத்து நடு வழியில் உட்கார வைத்து வந்தனர் எனது தாய் கு அதுவும் இல்லை இதற்கு நாங்கள் france இல் இருந்து வந்தேன் சர்வீஸ் செய்யக் ஆட்கள் இல்லை என்றால் ஏன் வீல் சேர் பாசஞ்சர் எதுக்கு ஏற்க வேண்டும்


Senthoora
மார் 08, 2025 17:02

இது மும்பாய் ஏர் போர்டில் நடகும் சாதாரண விடயம், ஒரு சர்வதேச விமானம் வந்தால், குறைந்தது 3 பேரையாவது, லக்கேஜ் வைத்து தள்ளும் வண்டியில் வைத்து தங்கள் உறவுகளை, அல்லது சக பயணிகள் தள்ளிக்கொண்டு போவதை பார்க்கலாம். என்ன இந்த கிழடுகளை எதுக்கு வைத்து தள்ளனும் என்ற எண்ணம், இதுக்கு ஒரே வலி, நேர்முக தெரிவு கடுமையாக்கப்படணும், பணத்துக்காகவும், சிபாரிசும் தடை செய்யப்படணும்.


சமீபத்திய செய்தி