உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி தரவுகள் மீட்பு; விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி தரவுகள் மீட்பு; விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

புதுடில்லி: ''ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி தரவுகள் மீட்கப்பட்டது'' என மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் ஏர் இந்தியா' விமானம் விழுந்து நொறுங்கியதற்கான காரணத்தை அறிய, பைலட் அறையில் இருக்கும் கருப்புப் பெட்டியை தேடும் பணியை, ஏ.ஏ.ஐ.பி., எனப்படும், விமான விபத்து விசாரணை முகமை மேற்கொண்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ln79voog&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பி.ஜே., மருத்துவக் கல்லுாரி விடுதி கட்டடத்தின் மேற்கூரையில், கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது. விமான விபத்துகள் விசாரணை ஆணையத்திலேயே, விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி ஆய்வு செய்யப்படும் என மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியிருந்தார்.இந்நிலையில், ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி தரவுகள் மீட்கப்பட்டு உள்ளது என மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் தரவுகள் மீட்கப்பட்டு உள்ளது. ஜூன் 25ம் தேதி வெற்றிகரமாக மீட்கப்பட்டது. தரவுகள் விமான விபத்துகள் விசாரணை ஆணையத்தில் பதவிறக்கம் செய்யப்பட்டது. கருப்புப் பெட்டி தரவுகளின் பகுப்பாய்வு நடந்து வருகிறது. CVR மற்றும் FDR தரவுகளின் பகுப்பாய்வு செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. விபத்துக்கு வழிவகுத்த நிகழ்வுகள் மற்றும் விமானப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் ஆய்வுக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முயற்சிகள் எதிர்காலத்தில் இது போன்று நிகழ்வுகள் நடக்காமல் தடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளன. இவ்வாறு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
ஜூன் 27, 2025 08:29

தரவுகள் எல்லாம் இங்கிலீஷில் இருக்குமே. இங்கிலுஷ் படிக்க வெக்கப்படணுமே.


pmsamy
ஜூன் 27, 2025 07:10

இன்னும் பத்து வருஷம் கூட ஆகல அதுக்குள்ள ஏன் விமானத்தை பற்றி தகவல் வெளியே சொல்ற புதுசா இருக்கு


VSMani
ஜூன் 26, 2025 18:18

புறப்பட்ட ஒருசில நிமிடம்களில் விபத்து நடந்திருக்கிறது . ஒரு சில நிமிட உரையாடலை தரவுகளை ஆய்வதற்கு பல நாட்களா? விமானத்தின் கோளாறு என்றால் விமானம் தயாரித்த கம்பனிக்கு வியாபாரம் நஷ்டம். விமானியின் தவறு என்று சொன்னால் விமானம் தயாரித்த கம்பனிக்கு வியாபாரம் நஷ்டம் ஆகாது. கடைசியில் விமானியின் தவறு என்று சொல்லி கதையை முடிக்கலாம். இறந்த விமானிகள் வந்து சாட்சியா சொல்லப்போகிறார்கள்?


sasikumaren
ஜூன் 26, 2025 16:11

எந்த தகவலும் இருக்கப் போவதில்லை விமானத்தில் ஏதோ தொழில்நுட்ப கோளறு அவ்வளவு தான்


cpv s
ஜூன் 26, 2025 15:32

must be send ragul in that flight