உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி இந்தியாவிலேயே ஆய்வு: மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு தகவல்

ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி இந்தியாவிலேயே ஆய்வு: மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: விமான விபத்துகள் விசாரணை ஆணையத்திலேயே, விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி ஆய்வு செய்யப்படும் என மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் ஏர் இந்தியா' விமானம் விழுந்து நொறுங்கியதற்கான காரணத்தை அறிய, பைலட் அறையில் இருக்கும் கருப்புப் பெட்டியை தேடும் பணியை, ஏ.ஏ.ஐ.பி., எனப்படும், விமான விபத்து விசாரணை முகமை மேற்கொண்டது. பைலட் அறையில் இருக்கும் கருப்புப் பெட்டி என்ற கருவியில், விமானியின் குரல் உட்பட அனைத்து தரவுகளும் பதிவு செய்யப்படும்.பி.ஜே., மருத்துவக் கல்லுாரி விடுதி கட்டடத்தின் மேற்கூரையில், கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது. கருப்புப் பெட்டி ஆய்வு செய்ய வெளிநாட்டிற்கு, அனுப்பியதாக தகவல் பரவியது.இது குறித்து, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியதாவது: கருப்பு பெட்டி வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டதாக வெளியான தகவல்கள் வெறும் வதந்திகளே.விமான விபத்துகள் விசாரணை ஆணையத்திலேயே, விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி ஆய்வு செய்யப்படும். விசாரணை இந்திய அதிகார வரம்பிற்குள் உறுதியாக உள்ளது.கருப்புப் பெட்டி தரவுகளை மீட்பது மிகவும் தொழில்நுட்ப ரீதியான விஷயம். ஏ.ஏ.ஐ.பி., எனப்படும், விமான விபத்து விசாரணை முகமை ஆய்வு மற்றும் விசாரணை நடத்தி முடித்த பிறகு, விபத்திற்கான காரணம் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
ஜூன் 25, 2025 09:48

ஆய்வு இந்தியாவிலே. ஆய்வு செய்யத் தெரிஞ்சவங்க இங்கே இருக்காங்களா? விமானங்களை தூசி துடைக்கவே துருக்கி கம்பெனிக்கு காண்டிராக்ட் குடுத்தோமே..


கொங்கு தமிழன் பிரசாந்த்
ஜூன் 24, 2025 18:17

அப்பத்தான் என்ன வேணும்னாலும் சொல்லிக்கலாம்.


சேகர்
ஜூன் 24, 2025 17:25

வெற்றி வெற்றி வெற்றி... கருப்பு பெட்டியை இந்தியாவிலேயே ஆய்வு செய்யும் இந்திய அரசுக்கும் , மோடி ஜிக்கும் நன்றி நன்றி நன்றி ....உலகையே இந்தியா திரும்பி பார்க்க வைத்து .. உலகத்தில் முன்னணி நாடு எனஉலகமே வியந்து பார்க்கிறது ... எதிலும் வெற்றி ...வெற்றி வெற்றி


Senthoora
ஜூன் 24, 2025 17:33

இப்போ கறுப்பு பெட்டி அமெரிக்காவில், இந்தியா கொண்டுவந்தால் அதானி நிறுவனம் தப்பு செய்திருந்தால் மறைக்கப்படும்.பாவம் அந்த ஆத்மாக்கள்.


Nada Rajan
ஜூன் 24, 2025 17:16

ஒன்றா இரண்டா 200மேற்பட்ட உயிர் போனது மறக்க முடியாது


புதிய வீடியோ