உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏர் இந்தியா விமான விபத்து; ஐ.நா., விசாரணையை நிராகரித்தது இந்தியா

ஏர் இந்தியா விமான விபத்து; ஐ.நா., விசாரணையை நிராகரித்தது இந்தியா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணைக்கு உதவ ஐ.நா., விமான போக்குவரத்து ஆணையம் முன்வந்தது. ஆனால், இதனை மத்திய அரசு நிராகரித்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.குஜராத் ஆமதாபாத்தில் கடந்த ஜூன் 12ம் தேதி ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது குறித்து விமான விபத்துகள் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. பி.ஜே., மருத்துவக் கல்லுாரி விடுதி கட்டடத்தின் மேற்கூரையில், கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=u5c1esfi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன் தரவுகள் விமான விபத்துகள் விசாரணை ஆணையத்தில் பதவிறக்கம் செய்யப்பட்டது. கருப்புப் பெட்டி தரவுகளின் பகுப்பாய்வு நடந்து வருகிறது. CVR மற்றும் FDR தரவுகளின் பகுப்பாய்வு செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. இதனிடையே, ஜூன் 13ம் தேதி முதல் கருப்புப் பெட்டியும், ஜூன் 16ம் தேதி 2வது கருப்புப் பெட்டியும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விசாரணை குறித்து எந்த தகவலும் இல்லாதது பற்றி கேள்வி எழுந்து வருகிறது. தரவுகளை பகுப்பாய்வு செய்யும் பணிகள் இந்தியாவில் நடக்கிறதா? அல்லது அமெரிக்காவில் நடக்கிறதா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.இந்த நிலையில், ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணைக்கு உதவ ஐ.நா., விமான போக்குவரத்து ஆணையம் முன்வந்தது. ஆனால், இதனை மத்திய அரசு நிராகரித்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் விதிகளை பின்பற்றி, உள்நாட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான விமான விபத்துக்களின் முதற்கட்ட அறிக்கைகள், விபத்து நடந்த 30 நாட்களுக்குள் வெளியிடப்படும். அந்த வகையில், கருப்பு பெட்டியில் இருக்கும் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் ஏர் இந்தியா விமான விபத்துக்கான முதற்கட்ட அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

AaaAaaEee
ஜூன் 27, 2025 23:45

UN முதல்ல இஸ்ரேல் பிரச்சினையை சரி பண்ணுங்க அப்புரம் இங்க வாங்க


Senthoora
ஜூன் 27, 2025 17:20

சசி குமார் ஜி , அப்போ அந்தஅணியின் கோல்மால் வேலைக்கு சப்போர்ட் பண்ணுவோமா?


Senthoora
ஜூன் 27, 2025 17:16

மடியில் கணம் இல்லை என்றால் , எந்த விஷாரணையையும் எதிர்கொள்ளலாம் யாரும்.


இந்திக்காரன்
ஜூன் 27, 2025 15:48

தரவுகளை நீங்களே செய்யுங்க. ஆனா இங்கிலுஷ் தெரிஞ்சவங்களை உட்டு செய்யுங்க.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 27, 2025 16:52

ஏன் இங்கிலீஷ் தெரிஞ்சவங்க....இளமை புகுத்தி விடும் என்று குறளை சொன்ன நம்ம தமிழ் புலவரை அனுப்பலாம்.....!!!


அப்பாவி
ஜூன் 27, 2025 15:46

நாம ஐ.நா வுக்கு போறதே வேஸ்ட். ஓட்டு போடாம சாப்புட்டு வந்துருவோம்.


N Sasikumar Yadhav
ஜூன் 27, 2025 16:28

பாரதம் எதை செய்தாலும் எதிர்ப்பதையே கோபாலபுர கொத்தடிமைகள் தொழிலாக வைத்து கொண்டிருக்கிறார்கள்


Thravisham
ஜூன் 27, 2025 17:19

பாவி அண்ணே நீங்க சொல்றது நாப்பது தமிழக அலிபாபாக்களைத்தானே சேம் சைடு கோலா


Kalyan Singapore
ஜூன் 27, 2025 15:21

ஐ நா வை அனாதைப்பிணம் என்று அறிவிக்காவிட்டாலும் அதற்கு நிதி கொடுப்பதை டிரம்ப் நிறுத்தியுள்ளார் . இதை பார்க்கும்போது அமெரிக்கா ஐ நாவை கருதவில்லை ,


Thravisham
ஜூன் 27, 2025 15:08

ஐ நா ஓர் பத்து பைசாவுக்கும் ப்ரயோஜனமில்லா அமைப்பு. வேல வெட்டியில்லா நாடுகள் நிறைய புகுந்து விட்டன. தர்போதுள்ள நிலையில் ஐ நா ஓர் அனாதை பிணம் என்று அமெரிக்கா அறிவித்தாலும் ஆச்சரியமில்லை.


முக்கிய வீடியோ