உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிந்தி தெரியாததால் ரூ.1 லட்சம் கோடியை இழந்தேன் ஏர்செல் சிவசங்கரன் வருத்தம்

ஹிந்தி தெரியாததால் ரூ.1 லட்சம் கோடியை இழந்தேன் ஏர்செல் சிவசங்கரன் வருத்தம்

புதுடில்லி: 'ஹிந்தி தெரிந்திருந்தால், நாடு முழுதும் உள்ள இந்தியர்களை ஈர்த்து, தற்போது 1 லட்சம் கோடி ரூபாய்க்கு சொந்தக்காரனாகி இருப்பேன்' என, ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன், 68, தெரிவித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன், சமூக ஊடக பிரபலம் ரன்வீர் அலபாடியா நடத்திய, 'பாட்காஸ்ட்' எனப்படும், 'ஆன்லைன்' ஒலி வடிவ பேட்டியில் தன் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது தன், 24 வயதில் தொழில் துவங்கியது முதல் தற்போது வரையிலான பயணத்தை விவரித்தார். அவர் மேலும் கூறியதாவது:இளம் வயது முதல் பல்வேறு துறைகளில் காலுான்றி வாழ்க்கையின் பல ரகசியங்களை நான் கற்றுக் கொண்டேன். முக்கியமான இரண்டு விஷயங்களை செய்யாததால் பெரிய இழப்பை சந்தித்துள்ளேன். அது ஹிந்தி கற்றுக்கொள்ளாததும், நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடம்பெயராததும் தான். நான் ஹிந்தி கற்றுக் கொண்டிருந்தால், 140 கோடி இந்தியர்களையும் ஈர்த்திருப்பேன். அதுபோல், டில்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களுக்கு இடம் பெயர்ந்திருந்தால் தற்போது 1 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிபதியாகி இருப்பேன். வாழ்க்கையில் கடன் வாங்குவதைவிட, பணத்தை ஈர்க்கும் திறனே வெற்றிக்கு அடிப்படை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Bahurudeen Ali Ahamed
மே 13, 2025 13:47

உங்களுடைய கருத்து நகைப்புக்குரியதாக இருக்கிறது ஹிந்தி தெரியாமல் இருந்தபோதுதான் ஏர்செல் கம்பெனியை உருவாக்கினீர்கள், வணிகத்தை பெருக்க வியாபார யுக்தி இருந்தால் போதும். ஹிந்தி தெரிந்த ஆட்களை நியமித்திருந்தாலே போதும், தமிழ்நாட்டில் வடஇந்திய கம்பெனிகள் மற்றும் பன்னாட்டுக்கம்பெனிகள் அமைத்திருக்கின்றனவே தமிழ் தெரிந்துகொண்டா வணிகம் நடக்கிறது தகுந்த ஆட்களை நியமித்தாலே போதுமானது அப்புறம் ரொம்ப சிம்பிள் விஷயம் நீங்கள் மும்பைக்கோ அல்லது டெல்லிக்கோ இடம்பெயர்ந்திருந்தால் தானாகவே 6மாதத்தில் கற்றுக்கொண்டிருந்திருக்கலாம் பத்தாவது கூட தாண்டாத நம் தமிழ்நாட்டு சகோதரர்கள் அயல்நாட்டில் பணிபுரியும்போது வேலை செய்யும் இடத்திற்க்கேற்ப எளிதாக ஹிந்தி, மலையாளம், அரபி,ஆங்கிலம் மற்றும் பல மொழிகளை கற்றுக்கொள்கிறார்கள்


Krishnamurthy Venkatesan
மே 10, 2025 19:47

Honestly speaking, if anyone has the thirst for learning, he can learn any language. You have to put some hard work and enthusiasm.


Chand
மே 10, 2025 16:26

Go ask Stalin. He will give you. He has got more the money you lost


சுந்தரம் விஸ்வநாதன்
மே 10, 2025 10:21

மாதம் ஐம்பதாயிரம் சம்பளம் மற்றும் போனஸ் கொடுப்பதாக சொல்லி இருந்தால் நானே உங்களுக்கு கூட இருந்து மொழிமாற்றி உதவியாளராக இருந்திருப்பேன் .அழைக்காதது யார் குற்றம்? மொழி தெரிந்த யாரையாவது கூட வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு என்ன ரகசிய பிசினஸ் செய்தீர்கள் ?


chennai sivakumar
மே 10, 2025 13:49

சூப்பர் சார். நேத்து அடி. இது ஒரு பப்ளிசிட்டி ஸ்டண்ட்


Rajan A
மே 10, 2025 09:23

யார் தடுத்தார்கள் என்றும் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏர்செல்லை எப்படி, யார் ஏமாற்றினார்கள் என்றும் சொல்லியிருக்கலாம்


chennai sivakumar
மே 10, 2025 09:11

Unwanted and uncalled statement for the present situation.


Palanisamy T
மே 10, 2025 08:22

மொத்தத்தில் நீங்கள் என்னச் சொல்ல வருகிண்றீர்கள். உங்கள் கணக்குப்படி பார்த்தால் இன்று இந்தியாவில் ஹிந்தி பேசுகின்ற அனைவரும் ஒருலட்சம் கோடிப் பணக்காரர்களாக இன்று இருக்க வேண்டுமே இது உண்மையா? நீங்கள் திடீரென்றுப் பேசியதைப் பார்த்து ஏதோ நீங்கள் சேர்த்து வைத்த பணத்தை இந்திமொழி தெரியாமல் ஏமார்ந்து இழந்ததைப் போல் பேசியுள்ளீர்கள் வருத்தமாகவுள்ளது .


K V Ramadoss
மே 10, 2025 21:19

இவர்களுக்கு எப்படி சொன்னாலும் புரியாது.. தூங்குபவர்களை எழுப்பலாம்.. எழுந்திருக்க முடியாது என்று அடம் பிடிப்பவர்களை எப்படி எழுப்புவது.. அப்படியே கிட என்று விட்டுவிட வேண்டயதுதான்.


sambaivelan
மே 10, 2025 08:05

முயற்சி செய்யாதது யாருடைய குறை? இந்தி தெரியவில்லை என்றாலும் தெரிந்தவர்களை கூட வைத்திருக்கலாமே. பிறகு என் இந்த புலம்பல்? இந்தி தெரிந்தால் 140 கோடி மக்களை ஈர்த்திருப்பாராம் - அப்படியானால் இங்கே 140 கோடி மக்களுக்கு இந்தி தெரியுமா? இது அவருடைய தவறான செய்தியா ள்ளது செய்தியாளரின் உள்குத்தா?


Durai Rajangam
மே 10, 2025 07:13

டியர் சார், நீங்கள் ஹிந்தி படிப்பதை தடுத்தது யார் ?


Palanisamy T
மே 10, 2025 08:57

சரியாக சொல்லியுள்ளீர்கள். ஒருப் புறம் பார்த்தால் தமிழக அரசின் மொழிக் கொள்கையை மனதில் வைத்துப் பேசியதைப் போல் தெரிகின்றது. இவர் வேறு மொழிப் படிக்காமல் வெறும் இந்தியைமட்டும் இன்று படித்து ஒருலட்சம் கோடி திரட்ட முடியுமா? நாடு சுதந்திரம் அடைவதற்க்கு முன்னும் பின்னும் ஒன்றிய அரசு நிறைய இந்தமொழி வளர்ச்சிக்கு இன்றும் அள்ளிக் கொடுத்துதான் வருகின்றார்கள். இன்று இந்தியா மற்ற வளர்ச்சிப் பெற்ற நாடுகள் போன்று இந்த அளவிற்கு வளர்ச்சிப் பெற்றது எந்த மொழியால் என்பது இவருக்கு தெரியாதா? பணம் சம்பாதிக்க அறிவு தேவை , வெறும் மொழி மட்டும் இல்லை


Ramanujam Veraswamy
மே 10, 2025 05:09

I too lost my career growth due to not knowing Hindi, thanks to Tamilnadu political parties during 1960s - my school days.


Durai Rajangam
மே 10, 2025 07:21

No excuses ப்ளீஸ். Anybody can learn any language.nobody prevents.i know hindi but dont know how to earn one lakh crore rupees.


Bahurudeen Ali Ahamed
மே 13, 2025 13:52

உங்களுக்கு ஆங்கிலம் நன்றாக தெரிகிறதே


புதிய வீடியோ