பாலக்காடு எஸ்.பி.,யாக அஜித்குமார் நியமனம்
பாலக்காடு; பாலக்காடு மாவட்ட எஸ்.பி.,யாக அஜித்குமாரை நியமனம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.கண்ணூர் சிட்டி போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வரும் அஜித்குமார், பாலக்காடு மாவட்ட எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். பொறியியல் பட்டதாரியான இவர், 2017 ஐ.பி.எஸ்., பிரிவு தேர்வாகி, வயநாடு மாவட்டம், கல்பற்றை ஏ.எஸ்.பி.,யாக போலீஸ் பணியை துவங்கினார். இவர், பாலக்காடு கேரள ஆயுதப்படை போலீஸ் பட்டாலியன்- 2ன் கமாண்டராக இருந்தார்.தற்போதுள்ள, பாலக்காடு மாவட்ட எஸ்.பி., ஆனந்த் வி.ஐ.பி., பாதுகாப்பு எஸ்.பி.,யாக திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு கேரள ஆயுதப்படை போலீஸ் பட்டாலியன் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.