உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வக்பு வாரிய சீர்திருத்தம் காலத்தின் கட்டாயம்; அஜ்மீர் தர்கா தலைவர் அறிவிப்பு

வக்பு வாரிய சீர்திருத்தம் காலத்தின் கட்டாயம்; அஜ்மீர் தர்கா தலைவர் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த மசோதா, வக்பு நிர்வாகத்தில் நீண்ட காலமாக நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக உள்ளது. சீர்திருத்தங்களை ஏற்றுக்கொள்வது மற்றும் பொறுப்பேற்க வைப்பதன் மூலம், வக்பு வாரியம் ஏற்படுத்தப்பட்டதன் உண்மையான நோக்கங்கள் நிறைவேற நாம் பணியாற்ற முடியும்,'' என்று, அஜ்மீர் தர்கா ஷெரீப் அறக்கட்டளை தலைவரும், சிஸ்டி பவுண்டேசன் தலைவருமான ஹாஜி சையத் சல்மான் சிஸ்டி தெரிவித்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fhzek7tg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் கூறியிருப்பதாவது: வக்பு வாரிய சீர்திருத்தம் என்பது காலத்தின் கட்டாயம். வக்பு வாரியம் தற்போது தவறான நிர்வாகம், வெளிப்படையற்ற தன்மை, திறனற்ற செயல்பாடுகளால் முடங்கியுள்ளது.நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய நில உரிமையாளராக வக்பு வாரியம் உள்ளது. வக்பு வாரியம் உருவாக்கப்பட்டதன் நோக்கம், பள்ளிகள், மருத்துவமனைகள், நுாலகங்கள் போன்றவற்றை உருவாக்கி இஸ்லாமியர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதே.ஆனால் உண்மையில் இஸ்லாமிய சமுதாயத்தின் நன்மைக்கு இந்த சொத்துக்கள் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்பது பெரிய கவலையாக உள்ளது.மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள வக்பு திருத்தச் சட்டம், வக்பு வாரியத்தில் நீண்ட காலமாக இருக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக உள்ளது.இத்தகைய சீர்திருத்தங்கள் முக்கியமானவை. ஏனெனில், தற்போது வக்பு சொத்துக்களை நிர்வாகம் செய்வோர், நம்பகத்தன்மை இல்லாதவர்கள். அவர்கள் வக்பு சொத்துக்களை தவறாக பயன்படுத்துவதாக இஸ்லாமிய சமுதாயத்தினர் உறுதியாக நம்புகின்றனர். அவர்களது திறனற்ற செயல்பாடுகளால் வக்பு சொத்துக்களின் வருமானத்தை உயர்த்த முடியவில்லை.வக்பு சொத்து நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையற்ற நிலை இருப்பதால் ஊழல் மலிந்து விட்டது.இதற்கு, வக்பு சொத்துக்களின் வாடகை நிர்ணயமே மிகச்சிறந்த உதாரணம்.இந்த சொத்துக்கள் அனைத்தும், பல தலைமுறைகளுக்கு முன்னதாக வாடகைக்கு விடப்பட்டவை. 1950ம் ஆண்டுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட சொற்பமான தொகை வாடகையாக இருக்கிறது. அது கூட தொடர்ந்து வசூலிக்கப்படுவதில்லை.ராஜஸ்தான் மாநிலம், ஜெயப்பூரில் பிரதான இடத்தில் மிர்ஸா இஸ்மாயில் பெயரில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் மாதம் 25 ஆயிரம் ரூபாய் வாடகை வரக்கூடிய கடை, மாதம் 300 ரூபாய்க்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் இப்படி ஆயிரக்கணக்கான குறைபாடுகள் உள்ளன.இத்துடன், சட்ட விரோதமாக வக்பு சொத்துக்கள் விற்பனை செய்யப்படுவதும் நடக்கிறது. கடந்த 2006ம் ஆண்டு வெளியான சச்சார் கமிட்டி அறிக்கையின்படி, வக்பு சொத்துக்கள் மூலம் ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடியும். இப்போதைய சந்தை மதிப்பையும் சேர்த்து கணக்கில் கொண்டால், ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் வர வேண்டும்.ஆனால், வெறும் 200 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் வந்து கொண்டிருக்கிறது.எனவே நல்ல முறையில் நிர்வாகம் செய்தால், வக்பு சொத்துக்களின் வருவாயை பன்மடங்கு உயர்த்த முடியும். அதன் மூலம் உலகத்தரம் வாய்ந்த பள்ளிகள், பல்கலைகள், மருத்துவமனைகளை ஏற்படுத்த முடியும். அவற்றின் மூலம் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, ஒட்டு மொத்த இந்திய மக்களும் பயன் பெற முடியும்.வக்பு வாரியங்கள் மற்றும் மத்திய வக்பு கவுன்சில் ஆகியவற்றை மறு சீரமைப்பு செய்வதன் மூலம், புதிய சட்ட மசோதா, அதிக பொறுப்புணர்வும், மேம்பட்ட வெளிப்படைத்தன்மையும் கொண்ட நடைமுறையை ஏற்படுத்த முயற்சிக்கிறது. சீர்திருத்தங்களை ஏற்றுக்கொள்வது மற்றும் பொறுப்பேற்க வைப்பதன் மூலம், வக்பு வாரியம் ஏற்படுத்தப்பட்டதன் உண்மையான நோக்கங்கள் நிறைவேற நாம் பணியாற்ற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

nb
மார் 31, 2025 21:21

உண்மைய பேசர இவர் ஒரு சங்கி. திராவிட மாடல் இதை ஏத்துக்காது


Rasheel
மார் 31, 2025 20:34

ஆக்ரமிப்பு செய்தவன், வாள் எடுத்தவன் எல்லாம் தலையாரி என்பதுதான் இந்த கதை. துருக்கியில் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தவனுக்கு எப்படி இவ்வளவு நிலம்?


Ganesh
மார் 31, 2025 20:14

இவர் சொல்வதை வைத்து பார்க்கும் பொழுது இந்த அரசியல் வியாதிகள் இந்துக்களை மட்டும் ஏமாற்றவில்லை . எல்லா மத மக்களையும் ஏம்மாற்றி உள்ளார்கள்..


M Ramachandran
மார் 31, 2025 19:04

இங்கு தமிழ் கட்டிலில் உள்ளவர்கள் இதை கவனிக்கவும். உண்மையான நோக்கம் வஃஹபு வாரிய திருத்த மசோத. அவர்கள் தான் உண்மையான முஸ்லீம்கள். அவசிய மில்லாமல் தங்கள் சுய லாபத்திற்கு தூண்டிவிடும் தீ மு கா வை ஒதுக்கி வைக்க வேண்டிய காலமிது. உண்மையான அக்கறை இல்லாதவர்கள். இங்கு அவர்கள் அமைச்சரவையில் முக்கிய பொறுப்புள்ள அமைச்சராக இது வரை யாரையாவது நியமித்துள்ளார்களா . ஊரு காயாக தான் உபயோக படுத்தி தம்பட்டம் அடித்து கொண்டு திரிகிறார்கள்


PR Makudeswaran
மார் 31, 2025 19:04

உண்மையை யார் சொன்னாலும் எங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஒத்துக்கொள்ள மாட்டார். தி மு க விற்கு வோட்டு பொறுக்க வேண்டும்.


Jagan (Proud Sangi)
மார் 31, 2025 18:30

இந்து கோவில் நிலங்களும் ஆன்லைன் மூலம் சந்தை விலைக்கு குத்தகைக்கு விடப்பட்டு, வருட வருடம் விலைவாசி inflation ஏற்றாற்போல் மாற்றி அமைக்க வேண்டும். வக்ப் போலவே சீர் திருத்தம் வேண்டும் .


Vijaya Lakshmi
மார் 31, 2025 18:24

இவர் சொன்னவைகளில் பாதி மிக மிக பொய். இவர்களுக்கு இவ்வளவு சொத்து எப்படி வந்தது. இந்துக்கள் கோயில் இடங்கள் மற்றும் பொது இடங்களை எல்லாம் வஃப் வாரியத்தினுடையது என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள். உண்மையில் இந்த சட்டத்திருத்தம் வந்தால் இவர்கள் சொத்துக்கள் எல்லாம் உண்மையான உரிமையாளர்களைச் சேரும். வஞ்சப்புகழ்ச்சி போல் இருக்கிறது இவர் கருத்து.


என்றும் இந்தியன்
மார் 31, 2025 17:21

சில திருத்தங்கள் . 1 எல்லா வக்பு வாரிய சொத்துக்களும் மசூதி கட்டியிருக்கும் நிலம் தவிர்த்து இந்திய அரசு கருவூல சொத்துக்கு மாற்றம் செய்யப்படவேண்டும் 2 வக்பு வாரியம் கலைக்கப்படவேண்டும் 3 வெளிநாட்டிலிருந்து மசூதிகளுக்கு வரும் பணமாற்றம் சீர் செய்யப்படவேண்டும் அதன் தேவை காரணம் ஆய்வு செய்யப்பட்டு


Hindustani
ஏப் 23, 2025 22:39

Yes, you are correct. Entire wakf property should be taken over by government. Government is providing all assistance to Muslim community already. Common civil law should be implemented. The country should be d as Hindu country.


kalyan
மார் 31, 2025 16:57

தமிழக அரசின் திராவிடியத்தனமான செயலுக்கு , தமிழக மக்கள் குவார்ட்டரும் பிரியாணியும் 200 ருப்ப ரூபாயும் வாங்கிக்கொண்டு கட்சிகளின் தன்மை தெரியாமல் வாக்களித்தது தான் காரணம் . எப்போது தமிழக மக்கள் தங்கள் வாக்குகளை நல்ல வாக்காளர்களுக்கு அவர்கள் எந்த காட்சியானாலும் சரி அளிக்கிறார்களோ அன்று தான் தமிழகத்துக்கு விடியல் . அதுவரை இங்கு இருள் தான் .


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 31, 2025 16:53

ஹிந்துக்கள் இரண்டாந்தரமல்ல, மூன்றாந்தரக் குடிமக்களாக நடத்தப்படுவார்கள் .....


முக்கிய வீடியோ