உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வர சதி": அகிலேஷ் குற்றச்சாட்டு

"இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வர சதி": அகிலேஷ் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: 'பா.ஜ.,வினர் அமைதியையும், சகோதரத்துவத்தையும் சீர்குலைத்தார்கள். இட ஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வர சதி செய்தார்கள்' என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது: பா.ஜ.,வுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்க செய்தி சேனல்கள் முயற்சி செய்கிறது. அவர்களுக்கு சாதகமாக கருதுத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இண்டியா கூட்டணி வெற்றி பெறும். பா.ஜ.,வினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, மக்கள் கூட்டமின்றி தான் காணப்பட்டது.

சதி

பா.ஜ.,வினர் அமைதியையும் சகோதரத்துவத்தையும் சீர்குலைத்தார்கள். இட ஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வர சதி செய்தார்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. ஏழைகள் மேலும் ஏழைகளாக மாறுகிறார்கள். இவ்வாறு அகிலேஷ் யாதவ் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 04, 2024 00:47

பத்து வருடங்களுக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீடு சலுகை இவனை போன்ற சுயநல அரசியல் வியாதிகளால் 70 வருடங்கள் ஆனாலும் இன்னும் முன்னேறாமல் இருக்கிறார்கள். அவர்களும் இன்னும் மடத்தனமாய் இவன் மற்றும் பிளாஸ்டிக் சேர் குருமா போன்றோரின் பேச்சை கேட்டு தவறான வழியில் சென்று கொண்டு இருக்கிறார்கள்.


பாரதி
ஜூன் 03, 2024 22:26

எதுக்கு இன்னமும் இடஒதுக்கீடு? நாசமாகப் போவீங்க தகுதி உள்ளவர்கள் கஷ்டப்பட்டவர்களின் வயிற்றில் அடிச்சா...


sankaranarayanan
ஜூன் 03, 2024 21:34

இட ஒதுக்கீடு சதி, அரசியல் சாசனம் மாற்ற சதி, தேர்தல் எண்ணிக்கையில் சதி, இவைகளை வைத்துக்கொண்டே அரசியல் செய்பவர்கள் இனி தில்லு முல்லு செய்யவே முடியாது உலகிலேயே முதலில் பத்து ஆடுகளுக்கு மட்டுமே என்று கூறி கொண்டுவந்த அரசியல் சாசானத்தையே மாற்றி பிறகு எங்குமே இல்லாத இட ஒதுக்கிடு என்ற ஒரு துரு பிடித்த ஆயுதத்தை கையிலேன்தி வாழ்பவர்கள் அரசியல் செய்பவர்கள் இனி வாழ முடியாது எப்படி எல்லோரும் சமம் என்று காஷ்மீரில் ஆர்டிகில் முன்னுற்று எழுபது அமுலுக்கு வந்ததோ அதுபோன்றே இந்தியாவில் இட ஒதுக்கிட்டை முற்றிலும் அகற்றினால்தான் நாடு முன்னேறும் நம்மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள் எல்லரும் சமம் என்று நாடு எழுபது ஆண்டுகளுக்கு பிறகாவது நாடு முன்னேற வாய்ப்புகள் உண்டு


veeramani
ஜூன் 03, 2024 19:58

இந்தியா ஆந்திரம் அடைந்து எழுபத்தி ஐந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்னும் எதற்கு இ ட ஒதுக்கீடு, சிறுபான்மையினர்.. எதற்கு ஏ டுத்தாலும் அமெரிக்காவை பார் ..என குரல்கள். வேறு எந்த நாடுகளிலும் இட ஓதுக்கீடு இல்லை.


பேசும் தமிழன்
ஜூன் 03, 2024 18:11

நாட்டின் மக்களை மத ரீதியாக பிரித்து அரசியல் செய்வது நீங்கள் தான்....


Jai
ஜூன் 03, 2024 15:46

கிளம்பி வந்தவர்களில் இவரும் ஒருவர். இன்னொருத்தர் இருக்கிறார்


Lion Drsekar
ஜூன் 03, 2024 14:17

இந்த மன்னர் குடும்பத்துக்கு இவர்கள் நாடு மட்டும் இல்லை எல்லா நிலைகளிலும் மக்கள் கொந்தளித்து, அடிதடியில் இறங்கி, ஊரே அல்லோலப்படவேண்டும் என்பதுதான் ஆசை, ஆகையால் ஒற்றுமைக்கு எங்கெல்லாம் குந்தகம் ஏற்படுத்தமுடியுமோ அங்கெல்லாம் எதுவுமே நடக்கவில்லை என்றாலும் கொந்தளித்து, எல்லோரையும் கொந்தளிக்க வைத்து, இவர்கள் அதில் குளிர்காய்வார்கள். இது இவர்கள் மட்டும் இல்லை யார் யாருக்கெல்லாம் பதவி பறிபோகும் நிலையில் இருக்கிறார்களோ அந்த குடும்பங்கள் அனைத்துமே இப்படித்தான் செயல்படும். விதி யாரை விட்டது. இன்னமும் நாளைக்கு இருக்கு, யாருக்கு எதிராக வாக்குகள் வீழ்ந்து இருக்கிறதோ அவர்கள் அனைவரும் ஒவ்வொரு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்வார்கள், விடாது கருப்பு போல் நாடங்களை சில காலங்களுக்கு பார்க்கலாம். பிறகு 5 ஆண்டுகளுக்கு ஒரு அமைதி நிலவும், இவர்களும் இருக்கிறார்கள் என்று மக்கள் மறக்காமல் இருக்க அவ்வப்போது அவர்களால் முடிந்த நன்மைகளை இதே போன்று நாட்டுக்கும் மக்களுக்கும் செய்வார்கள், வாழ்த்துக்கள், வந்தே மாதரம்


naranm
ஜூன் 03, 2024 14:01

திஹார் சிறையை நிரப்ப மேலும் ஊழல்வாதிகள் தயார்.


Anand
ஜூன் 03, 2024 13:56

நீ இன்னும் திருந்தவில்லையா?


Anbuselvan
ஜூன் 03, 2024 13:48

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் இவருக்கு உடன்பாடு போலும். அதுதான் இப்பவே குய்யோ முய்யோன்னு கூவலிடுகிறார்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை