உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா மீது போர் தொடுக்க பாக்.,கிற்கு அழைப்பு விடுத்த அல் - குவைதா ஆதரவு பெண்

இந்தியா மீது போர் தொடுக்க பாக்.,கிற்கு அழைப்பு விடுத்த அல் - குவைதா ஆதரவு பெண்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: அல் - குவைதா அமைப்புடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் பெண், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, இந்தியா மீது போர் தொடுக்க பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனிருக்கு அழைப்பு விடுத்தது தெரியவந்துள்ளது. அல் - குவைதா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த நான்கு பேரை, குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினர் கடந்த மாதம் 22ம் தேதி கைது செய்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k5h3nkeo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கைது இவர்களிடம் நடத்திய விசாரணையில், ஜார்க்கண்டைச் சேர்ந்த ஷாமா பர்வீன் அன்சாரி, 30, என்ற பெண்ணுக்கு, அல் - குவைதா அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. கர்நாடக மாநிலம், பெங்களூரில் தன் சகோதரருடன் வசித்து வந்த அவரை, கடந்த மாதம் 31ம் தேதி குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்தனர். அல் - குவைதாவின் செயல்பாடுகள் அடங்கிய, 'வீடியோ'வை, சமூக வலைதளத்தில் பகிர்ந்ததுடன், பயங்கரவாத ஆதரவு கருத்துகளை வெளியிட்டதும் விசாரணையில் தெரியவந்தது. ஷாமா பர்வீனிடம் இருந்து, மொபைல் போன், மடிக்கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினர் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஷாமாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட மடிக்கணினியை சோதித்ததில், பயங்கரவாத செயல்களை அவர் ஊக்குவித்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக, கடந்த மே மாதம், பாகிஸ்தானுக்கு எதிராக நம் ராணுவம் மேற்கொண்ட, 'ஆப்பரேஷன் சிந்---------------துார்' நடவடிக்கையின் போது, இந்தியா மீது போர் தொடுக்க அந்நாட்டிற்கு இவர் அழைப்பு விடுத்துள்ளார். பாக்., ராணுவ தளபதி அசீம் முனிரை இணைத்து ஷாமா வெளியிட்ட பதிவில், 'உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. இஸ்லாமை செயல்படுத்த கிலாபத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்; முஸ்லிம் நிலங்களை ஒன்றிணைத்து, ஹிந்துத்துவா மற்றும் சியோனிசத்தை ஒழிக்க முன்னேறுங்கள்' என, குறிப்பிட்டுள்ளார். மற்றொரு வீடியோவில், அல் - குவைதா தலைவர் ஒருவர் பேசும் வீடியோவை ஷாமா பகிர்ந்துள்ளார். களங்கம் அதில் அவர், இந்தியாவுக்கு எதிராகவும், ஹிந்து சமூகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் கருத்துகளை பேசியுள்ளார். இந்த வீடியோக்கள் தொடர்பாக, ஷாமாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அல் - குவைதா அமைப்புடன் அவருக்கு ஏற்பட்ட தொடர்பு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Palanisamy T
ஆக 09, 2025 22:09

இவளைப் போன்று மற்றவர்கள் இந்திய நாட்டில் இன்னும் எத்தனைப் பேர்கள் மக்களோடு மக்களாக நல்லவர்கள் போல் வேடமிட்டு வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றார்களோ? இந்த தீவிரவாதிகளை அடையாளம் காண்பது எப்படி? கர்நாடகத்தில் பிடி பட்டது போன்று தமிழகத்திலும் இவர்கள் இருப்பதற்கு நிறைய வாய்ப்புக்களுண்டு. இவ்விவகாரத்தில் தமிழக அரசும் கடுமையாக போக்கை கண்டிப்பாக கடைப் பிடிக்க வேண்டும்.


James
ஆக 08, 2025 12:14

விசாரணை முடிந்தவுடன் இவளை சுட்டு கொல்லுங்கள்.


theruvasagan
ஆக 08, 2025 11:13

விசுவாசமில்லாத இந்த கொடூர ஜென்மங்களை பக்கி ராணுவத்தினர் எல்லையில் நம்மை தாக்க வரும்போது இதுகள் கைளை கட்டி எல்லைக் கோட்டில் எதிரியின் தாக்குதலுக்கு நமது முன்னணி கவசமாக நிறுத்தி வைக்க வேண்டும்.


நிக்கோல்தாம்சன்
ஆக 08, 2025 08:04

காட்டிக்கொடுக்கும் வம்சம்


Siva Balan
ஆக 08, 2025 08:03

ஹிந்து நாடு என்று அறிவித்து தேச துரோகிகளை வெளியேற்ற வேண்டும்.


Varadarajan Nagarajan
ஆக 08, 2025 07:31

தீவிரவாத இயக்கங்கள வெளிநாடுகளிலிருந்துமட்டும் செயல்படவில்லை. உள்நாட்டில் அவர்களுக்கு உதவிசெய்பவர்கள் இல்லாமல் அவர்களால் இவ்வளவுதூரம் தாக்குதல்கள் நடத்த முடியாது என்பதை புல்வாமா தாக்குதல் எடுத்துக்காட்டியது. எனவே அவர்களுக்கு எதிராகமட்டும் நடவடிக்கை எடுப்பது போதாது. உள்நாட்டில் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவோர்களை அடையாளம்கண்டு களையெடுக்கவேண்டியது மிகமிக அவசியம். மாநிலங்களில் இயங்கும் நுண்ணறிவு போலீசாரை மத்திய அரசின் செயல்பாடுகளோடு இணைக்கவேண்டியது மிக மிக அவசியம்.


Sridhar
ஆக 08, 2025 07:26

Kill her the Islamic way of stoning to death


ramani
ஆக 08, 2025 06:03

இந்தியா மீது போர் தொடுக்க பாக்கிஸ்தானுக்கு தைரியம் உள்ளதா? இனி வாலாட்டினால் பாக்கிஸ்தான் என்ற நாடே இல்லாமல் இந்தியா செய்துவிடும்


Kasimani Baskaran
ஆக 08, 2025 04:03

மூளைச்சலவை செய்யப்பட்டு இன்னும் பலர் இந்தியாவுக்குள் சுற்றித்திரிகிறார்கள். அவர்களை அடையாளம் காணுவது மிக அவசியம். அது தவிர சமய இலக்கியங்கள் சில இன்னும் அதே மண்டையை உடை போன்ற வாசகங்களுடன் இருக்கத்தான் செய்கிறது.


Krish N
ஆக 08, 2025 03:26

பாக்கிஸ்தான் க்கு ஓடு பிடரி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை