உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., வென்ற இடங்களை கூட தாண்டாத ஒட்டுமொத்த இண்டியா கூட்டணி

பா.ஜ., வென்ற இடங்களை கூட தாண்டாத ஒட்டுமொத்த இண்டியா கூட்டணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: லோக்சபா தேர்தல் முடிவுகளில் பா.ஜ., தனியாகவே 240 இடங்களில் வென்ற நிலையில், அந்த எண்ணிக்கையை கூட பெற முடியாமல் எதிர்க்கட்சிகளின் 'இண்டியா' கூட்டணி குறைவான இடங்களிலேயே (232) வெற்றி பெற்றுள்ளன.நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற லோக்சபா தேர்தல் முடிவுகள், நேற்று (ஜூன் 4) வெளியானது. இதில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களை விட கூடுதலாக பெற்று 3வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. இதில் பா.ஜ., மட்டும் தனியாக 240 இடங்களில் வென்றுள்ளது. கடந்த இரு லோக்சபா தேர்தலிலும் தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக இருந்த பா.ஜ., இந்தமுறை பெரும்பான்மை பெறவில்லை.இந்த கூட்டணியை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து 'இண்டியா' என்ற கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்தித்தது. இக்கூட்டணி ஒட்டுமொத்தமாக 234 தொகுதிகளில் வென்றுள்ளது. இது பா.ஜ., மட்டும் பெற்றிருந்த இடங்களை விட குறைவு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 58 )

Ramesh Sargam
ஜூன் 08, 2024 20:26

சிங்கம் சிங்குலாத்தான் வரும். வெற்றிவாகை சூடும். மற்றவைகள்...??


Rahulakumar Subramaniam
ஜூன் 06, 2024 18:59

பா .ஜா .க . தனித்து 240 சீட் பெற்றுள்ளது . காங்கிரஸ் வெறும் 99 சீட் பெற்றுள்ளது , ஆனால் ஏன் ? துள்ளுகிறார்களோ தெரியவில்லை .


MADHAVAN
ஜூன் 06, 2024 18:04

இந்த ஊடகங்கள்தான் காங்கிரசுக்கு ஒற்றைஇலக்கு ஒற்றைஇலக்கு னு சொல்லி சொல்லி மாக்களை ஏமாற்ற ஆக்கப்பார்த்தார்கள், ஆனால் மக்கள் இந்த ஊடகங்களை மூடர்கள் என்று தெளிவுபடுத்திவிட்டார்கள்,


MADHAVAN
ஜூன் 06, 2024 12:12

400 கும் மேல 420 கும் மேல ன்னு கூவு கூவுன்னு கூவிவிட்டு இப்போ இடிச்சபுளிமாதிரி உக்காந்துஇருக்குறது யாரு ? கவலைப்பட வேண்டாம் மோடிக்கு தெரியும் இன்னும் சில மாதங்களில் ஆட்சி அழிந்துவிடும் என்று


T. Ravichandiran
ஜூன் 06, 2024 10:18

ஆம் நண்பரே நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை திமுக தன்னுடைய எம்பிக்களை வைத்துக்கொண்டு ஒன்றும் தமிழ்நாட்டுக்கு செய்ய முடியாது ஆனால் சந்திரபாபு நாயுடு குறைவான எம்பிகளை வைத்துக்கொண்டு ஆந்திராவுக்கு நல்ல நல்ல திட்டங்களை மத்திய அரசிடம் இருந்து பெற்றுக் கொள்வார் திமுகாவினால் தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு பயனும் கிடையாது ஆட்சி மாற்றம் வேண்டும் நல்ல படித்தவர்கள் பதவிக்கு வர வேண்டும்


Murali Dharan
ஜூன் 06, 2024 08:13

இண்டி கூட்டணி ஒரு கூட்டம் மோடி எதிர்ப்பார்ளர்களின் கூட்டுத்தொகை மட்டுமே தவிர கூட்டணி ஏதும் கிடையாது. இந்த கூட்டம் ஒன்று கூடி ஒரு நாள் கூட ஒரு அறையில் ஒன்றாக இருக்க முடியாது.


சித்தறஞ்சன்
ஜூன் 06, 2024 00:29

சந்திரபாபு நாயுடு ,பிஜேபி இற்கு ஆதரவு கொடுத்துக்கொண்டு, அதே நேரத்தில் தன்னுடைய மாநிலத்துக்கு தேவையான காரியங்களையும் சாதித்துக் கொள்வர். அதில் எந்த தவறும் இல்லை . ஆனால் இந்த தீய திராவிட கும்பல் திமுக இந்த seat செனட் வைத்துக்கொண்டு. ஒன்றுக்கும் உதவாத காங்கிரசுக்கு ஆதரவை கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இதனால் தமிழ்நாட்டுக்கு ஒரு வித நன்மையும் இல்லை. இந்த இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் தங்களுடைய சமூக நன்மைக்காகத்தான் திமுக விற்கு ஓட்டளித்திருக்கிறார்களே தவிர தமிழ்நாட்டுக்கு அல்லது நாட்டின் நன்மைக்கோ அல்ல


Muralidharan raghavan
ஜூன் 07, 2024 11:51

நூறு சதவீதம் உண்மை


சித்தறஞ்சன்
ஜூன் 06, 2024 00:19

விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் இருக்கின்றது உங்களின் கதை.400 கிடைக்கவில்லை, ஆனால் ஆட்சி அமைக்க கூடிய அளவுக்கு அதாவது மற்ற கூட்டணி சேர்ந்து அமைக்கக்கூடியதாக இருக்கின்றதே.


theruvasaga
ஜூன் 05, 2024 22:22

தமிழன் சாமர்த்தியம் வேற எவனுக்காவது வருமா. மறுபடியும் 40 வெட்டிகளை தேர்ந்தெடுத்து விட்டு சொந்தக் காசில சூனியம் வச்சுக்கிற திறமை வேற யாருக்காச்சும் இருக்கா.


Ramesh Sargam
ஜூன் 05, 2024 19:44

புள்ளிவைத்த கூட்டணியினரின் ஆட்சி அமைக்கும் கனவுக்கு முற்று புள்ளி வைக்கப்பட்டது.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ