உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிகாரிகளுக்கெல்லாம் கொடுக்கணும்: 6 லட்சம் ரூபாயை லபக் கிய கிராமத்தலைவர்

அதிகாரிகளுக்கெல்லாம் கொடுக்கணும்: 6 லட்சம் ரூபாயை லபக் கிய கிராமத்தலைவர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: அரசு தந்த நிவாரண தொகையில் ஒரு பகுதி அதிகாரிகளுக்கெல்லாம் தரணும் என கூறி ரூ.6 லட்சம் ரூபாயை லபக்கிய கிராமத்தலைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.உ.பி., மாநிலத்தில் உள்ள களு பங்காட் கிராமத்தில் வசித்து வந்த 7 வயது முதல் 13 வயதுடைய நான்கு சகோதரிகள் கடந்த ஜூன் மாதம் 18 ம் தேதி ஆற்றில் மூழ்கி பலியாயினர்.இச்சம்பவத்தை தொடர்ந்து மாநில முதல்வர் நிவாரண நிதியில் இருந்து சுமார் 16 லட்சம் ரூபாய் வரையில் ஜூலை மாதம் 16 ம் தேதி சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு நேரிடையாக வரவு வைக்கப்பட்டிருந்தது.இவ்வளவு பெரிய தொகையை சம்பந்தப்பட்டவர்கள் பெற்றதை தெரிந்து கொண்ட கிராமத்தலைவர் ஜாபிர் என்பவர் சகோதரிகளின் தாயாரை தொடர்பு கொண்டு அதிகாரிகளுக்கெல்லாம் தரணும் என கூறி சுமார் ரூ.6 லட்சம் வரையில் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.கிராமத்தலைவர் தங்களை ஏமாற்றியதை புரிந்து கொண்ட சம்பந்தப்பட்ட சகோதரிகளின் தாயார் மாவட்ட நீதிபதி பவன் அகர்வாலிடம் புகார் அளித்தார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கிராம தலைவரின் மீதான புகார் உறுதிப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அஜய்குமார்
ஆக 31, 2024 22:28

இவனை கல்லால் அடிச்சு சாவடிக்கலாமே...இல்லே புல்டோசர் ஏத்திப் போட்டுத் தள்ளலாம்.


அப்பாவி
ஆக 31, 2024 22:26

திருட்டு இந்தியன்களில் ஒருத்தன்.


Ramesh Sargam
ஆக 31, 2024 22:19

லபக்கிய கிராமத்தலைவர், மற்றும் பல லபக்கர்களையும் பிடித்து, சரியாக உதைத்து, சிறையில் பல ஆண்டுகள் அடைக்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை