வாசகர்கள் கருத்துகள் ( 2 )
உருப்படாதுன்னு தெரிஞ்சே விடுக்கும் அழைப்பு. ஏதோ ரொம்ப நல்லவங்க மாதிரி பாவ்லா.
எப்படியும் கூட்டம் முழுமையாக நடக்கப்போவதில்லை அமளியிலேயே பாதிநாள் போய்விடும்
புதுடில்லி: ஜூலை 19ல் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரை வரும் ஜூலை 21 ல் முதல் ஆக., 21 வரை நடத்துவதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். சுதந்திர தினத்தை கருத்தில் கொண்டு ஆக., 13, 14 ஆகிய தேதிகளில் கூட்டத்தொடர் நடைபெறாது.வரும் 21ம் தேதி காலை 11 மணிக்கு பார்லிமென்ட் கூட உள்ள நிலையில் இந்த தொடரில் விவாதங்கள் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தொடரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் விவாதிக்க திட்டமிட்டுள்ளது.இந்நிலையில், ஜூலை 19ல் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜூலை 21ம் தேதி பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மழைக்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது.
உருப்படாதுன்னு தெரிஞ்சே விடுக்கும் அழைப்பு. ஏதோ ரொம்ப நல்லவங்க மாதிரி பாவ்லா.
எப்படியும் கூட்டம் முழுமையாக நடக்கப்போவதில்லை அமளியிலேயே பாதிநாள் போய்விடும்