உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியல் ஆயுதமாக மாறிய அமலாக்கத் துறை டில்லி அமைச்சர் அதிஷி சிங் குற்றச்சாட்டு

அரசியல் ஆயுதமாக மாறிய அமலாக்கத் துறை டில்லி அமைச்சர் அதிஷி சிங் குற்றச்சாட்டு

புதுடில்லி:“மத்திய பா.ஜ., அரசின்அரசியல் ஆயுதமாக அமலாக்கத் துறை மாறி விட்டது,” என, டில்லி அமைச்சர் அதிஷி சிங் குற்றம் சாட்டியுள்ளார்.டில்லி கல்வி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் அதிஷி சிங், நிருபர்களிடன் நேற்றுகூறியதாவது:டில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்வதைத் தடுக்க பா.ஜ., திட்டம் தீட்டி வருகிறது.அதற்காகவே, அமலாக்கத் துறை வாயிலாக கைது செய்ய முனைப்பு காட்டுகிறது. தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா கடந்த வாரம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.இதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறை தாக்கல் வெளியிட்ட அறிக்கையில், டில்லி அரசின் மதுபானக் கொள்கையில், சலுகைகளைப் பெறுவதற்காக அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் 100 கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.வழக்கு தொடர்பான விசாரணை விபரங்களை, செய்திக்குறிப்பாக ஏன் அமலாக்கத் துறைவெளியிட வேண்டும். ஏனென்றால், மத்திய பா.ஜ., அரசின் அரசியல் ஆயுதமாக அமலாக்கத் துறை மாறிவிட்டது. டில்லி மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலை விரும்புகின்றனர். எனவே, அவர் லோக்சபா தேர்தலில்பிரசாரம் செய்வதைத் தடுக்க பா.ஜ., திட்டமிடுகிறது.அதற்காகவே,அமலாக்கத்துறை வாயிலாக கைது செய்து சிறையில் அடைக்க பா.ஜ., விரும்புகிறது.டில்லி மக்களுக்கு இலவச மின்சாரம், மொஹல்லா கிளினிக்குகள் போன்ற வசதிகளை வழங்கிய அரவிந்த் கெஜ்ரிவாலை குறிவைத்து பா.ஜ., காய் நகர்த்தி வருகிறது.அதேபோல, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சத்யேந்தர் ஜெயின் மீதான பணமோசடி வழக்கும் அரசியல் சதிதான். ஜெயினுக்கு ஜாமின் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. உச்ச நீதிமன்றத்தையும், சட்ட நடைமுறைகளையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மரியாதையுடன் ஏற்கவில்லை. இயக்குனராக இல்லாத ஒரு நிறுவனத்தில் எடுத்த முடிவுக்காக ஜெயின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சில பிரபல ஹவாலா ஆப்பரேட்டர்கள் கொடுத்த அறிக்கைகளின் அடிப்படையில் ஜெயின் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.ஜெயின் உடல்நிலை மிக மோசமாக இருக்கிறது. அவரால் ஒரு படி கூட ஏற முடியவில்லை. கடந்த சில மாதங்களில் அவருக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. அதையும் மீறி அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. இன்று இல்லை என்றாலும் நாளை எங்களுக்கு நீதி கிடைக்கும்.

ஜாமின் தான் கிடைத்துள்ளது: பா.ஜ.,

புதுடில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில், நிருபர்களிடன் சம்பித் பத்ரா கூறியதாவது: டில்லி அரசின் 2021 -2022ம் ஆண்டின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவை மீட்க ஆம் ஆத்மி கடும் முயற்சி செய்து வருகிறது.கடந்த 6 மாதங்களில் கெஜ்ரிவாலுக்கு ஒன்பது முறை அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், அவற்றையெல்லாம் அவர் நிராகரித்து விட்டார்.இதுபோல நீண்ட காலத்துக்கு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது. எவ்வளவு துாரம் ஓடுவார்? முறைகேடுக்கான ஆதாரங்களே இறுதியில் அவரை சுற்றி வளைக்கும். கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை கெஜ்ரிவால் கொலை செய்துள்ளார். அதற்கான ஆதாரங்கள் விசாரணை அமைப்புகளிடம் தெளிவாக இருக்கின்றன. அதனால்தான் அமலாக்கத் துறை விசாரணைக்கு அழைக்கிறது. கெஜ்ரிவாலின்செயலுக்கு லோக்சபா தேர்தலில் மக்கள் தகுந்த பதில் அளிப்பர்.அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் ஜாமின்தான் வழங்கி இருக்கிறது. ஆனால், நீதிமன்றத்தில் இருந்து விடுதலை கிடைத்தது போல்பிரசாரம் செய்து வருகிறார். ஜாமினில் வெளியே இருப்பது ஒரு தகுதி அல்ல. அது ஒரு குறைபாடு. அதேபோலத்தான், நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் ஜாமினில் உள்ளனர். அந்த வரிசையில் இப்போது கெஜ்ரிவாலும்நிற்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ