உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாக்கடை சுத்தம் செய்ய ரூ.169 கோடி ஒதுக்கீடு

சாக்கடை சுத்தம் செய்ய ரூ.169 கோடி ஒதுக்கீடு

புதுடில்லி,:புதுடில்லி முனிசிபல் கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது.பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு, வீடுகளுக்கு குடிநீர் மற்றும் காற்று மாசுபாடு உள்ளிட்ட 15 தீர்மானங்களில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்குப் பின், கவுன்சில் உறுப்பினர் குல்ஜீத் சாஹல் கூறியதாவது:லோக்சபா தேர்தலுக்கு முந்தைய கூட்டம் நடந்தது. 'ஹர் கர் ஜல் யோஜனா' திட்டம் வாயிலாக ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படும். அதேபோல குப்பையை சேகரித்து எடுத்துச் சென்று கொட்டுவதற்கு 52.79 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 8,000 பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு தயாரிக்க சமையலறை நிறுவவும் முடிவு செய்யப்பட்டது. குஷாக் கழிவுநீர் கால்வாயை உயர் தொழில் நுட்பம் வாயிலாக சுத்தம் செய்ய 169.57 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ