உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தானுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது கடவுளுக்கே வெளிச்சம்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

பாகிஸ்தானுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது கடவுளுக்கே வெளிச்சம்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாகிஸ்தானின் தற்போதையை சூழலை பார்க்கும் போது எதிர்காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.புதுடில்லியில் பாஜ பிரமுகரும், முன்னாள் அமைச்சருமான எம்ஜே அக்பர் எழுதிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அவர், புதிய புத்தகத்தை வெளியிட்டு நிகழ்ச்சியில் பேசினார்.அப்போது ராஜ்நாத் சிங் பேசியதாவது; தற்போதைய சூழலில் உலகின் 4வது மிக பெரிய பொருளாதார நாடாக இந்தியா விளங்குகின்றது. விரைவில் 3வது நாடாக இந்தியா மாறும். தெற்காசியாவில் உள்ள நாடுகளை நீங்கள் உற்று பார்த்தீர்கள் என்றால், இந்தியா எப்படி ஸ்திரத்தன்மையுடன் உள்ளது என்பதை காணலாம். பாகிஸ்தானின் தற்போதையை சூழலை பார்க்கும் போது எதிர்காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். எதிர்காலத்தைப் பற்றி பேச நான் விரும்பவில்லை.இவ்வாறு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
அக் 07, 2025 01:18

பாகிஸ்தானின் தற்போதையை சூழலை பார்க்கும் போது எதிர்காலத்தில் அங்கு என்ன நடக்கும் என்று அவர்களுக்கே தெரியாது. முதலில் எதிர்காலத்தில் பாகிஸ்தான் என்கிற நாடு இருக்குமோ என்றே யாருக்கும் தெரியாது. அழிந்துவிடும் என்று பலர் நினைக்கிறார்கள்.


naranam
அக் 06, 2025 22:11

பாகிஸ்தான் எப்படியோ நாசமாகப் போகட்டும். மத்திய அரசு இப்படி சைக்கலாஜிகல் போர் நடத்துவதை நிறுத்திவிட்டு முதலில் நாட்டில் பாதுகாப்பை உறுதி செய்யலாம். தினம் ஒரு அமைச்சர் இப்படி பேசுவதை விடுத்து சீனா செய்வது போல் ரகசியமாக திட்டங்களை வகுத்துத் திறம்படச் செயல் படுத்த வேண்டும். போரில் எலிமென்ட் ஆஃப் சர்ப்ரைஸ் மிகவும் அவசியம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை