உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை கோவிலுக்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் புனித பயணம் செல்வார்கள். அங்கு இயற்கையாக உருவாகும் பனிலிங்கம் சிவபெருமானின் வடிவமாக வணங்கப்படுவதே அதற்கு காரணம். யாத்திரைக்காக லட்சக்கணக்கானோர் முன்பதிவு செய்து வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=30rrxha1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தற்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக இம்முறை அமர்நாத் யாத்திரை நடக்குமா என்பது பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந் நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது; பயங்கரவாத தாக்குதல் இருந்த போதிலும் ஜம்மு காஷ்மீரில் விரைவில் சுற்றுலா தொடங்கும். அந்த நம்பிக்கையை மக்கள் கொண்டு உள்ளனர்.காஷ்மீரை அதன் வளர்ச்சி பாதையில் இருந்து யாராலும் ஒருபோதும் தடுக்கவே முடியாது. அமர்நாத் யாத்திரை இம்முறை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

thehindu
ஏப் 26, 2025 13:19

இப்படிப்பட்ட சூளுரைகளின் பிறப்பிடம் மோடி கும்பல். தினமும் இப்படி ஒன்றை கேட்டு புளித்துப்போய்விட்டது


m.arunachalam
ஏப் 26, 2025 12:21

சவடால் / சவால் விடுவது போன்ற அறிக்கைகள் தேவையற்றது . செயல் மட்டுமே முக்கியம் . தெளிதல் நலம் .


xyzabc
ஏப் 26, 2025 12:19

தாஜ் ஹோட்டல், புல்வாமா, பஹ்லகாம் மறந்து விட வேண்டாம். அனுபவம் வாய்ந்த தீவிரவாதிகள். பக்தர்களுக்கு நல்ல பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும்.


NALAM VIRUMBI
ஏப் 26, 2025 10:23

ஆமாம், அமர்நாத் யாத்திரையை உறுதியோடு வெற்றிகரமாக நடத்தி காட்டுவோம். தீவிரவாதத்தை கூண்டோடு வேரறுப்போம் பாரத் மாதா கி ஜெய்


பிரேம்ஜி
ஏப் 26, 2025 10:03

இன்னும் பத்து பேரை சாகக் கொடுத்து கண்டனம் தெரிவித்து விடுவார் இவர்! முதலில் தீவிரவாதத்தை ஒழித்து விட்டு நீங்களும் யாத்திரை போகலாமே!


ஆரூர் ரங்
ஏப் 26, 2025 14:43

சார் .முந்தைய ஆட்சியில் காஷ்மீர் தலைநகரில் தேசீயக்கொடியை கூட ஏற்ற முடியவில்லை. இனப் படுகொலை காரணமாக 4 லட்சம் ஹிந்துக்கள் அகதிகளாக விரட்டப்பட்டது வரலாறு. அதையெல்லாம் பார்க்கும்போது இப்போது பாதுகாப்பு நிலைமை எவ்வளவோ தேவலாம்.


Svs Yaadum oore
ஏப் 26, 2025 09:05

இந்தியாவில் இருந்து கொண்டு இங்குள்ள உப்பை தின்று இந்தியாவுக்கு எதிராக பேசும் விடியல் மதம் மாற்றி திராவிடனுங்களை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் ... அவர்கள் பாகிஸ்தான் சென்று அந்த நாட்டை ராமசாமி மண்ணாக மாற்றி விடுவார்கள் ....பிறகு பாகிஸ்தான் தமிழ் நாட்டை போல நாத்திக சமூக நீதி முன்னேறிய நாடாக மாறி விடும் ....


अप्पावी
ஏப் 26, 2025 08:58

இந்த மாதிரி சவடால்.பேச்சை நிறுத்திட்டு பக்தர்களுக்கு பாதுகாப்பு குடுப்பதில் கவனம் செலுத்துங்க. காஷ்மீர் அமைதிப் பூங்காவா இருக்குன்னு ஆளாளுக்கு பேசியே கோட்டை உட்டீங்க.


vivek
ஏப் 26, 2025 12:18

உன்னை போல கீழ்ப்பாக்கம் கிறுக்கன் எல்லாம் கருத்து போடுறது கொடுமை