உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதானிக்கு அமெரிக்க கோர்ட் பிடிவாரன்ட்!

அதானிக்கு அமெரிக்க கோர்ட் பிடிவாரன்ட்!

புதுடில்லி: தன் தொழில் திட்டங்களுக்கு அரசின் ஒப்புதலை பெறுவதற்காக இந்திய அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும், 2,000 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் கொடுக்க தயாரான தொழிலதிபர் கவுதம் அதானி, அந்த தகவலை மறைத்து, அமெரிக்கர்களிடம் கணிசமான முதலீடுகளை திரட்டியுள்ளார்; இது, தண்டனைக்குரிய குற்றம் என்று அமெரிக்க அரசு வழக்கு பதிவு செய்து உள்ளது. அதன்படி அதானியை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் வாரன்ட் பிறப்பித்துள்ளது. ---இந்தியாவின் இரண்டாவது பெரும் பணக்காரரான தொழிலதிபர் கவுதம் அதானி, பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் கடந்தாண்டு ஜனவரியில் அறிக்கை வெளியிட்டது.

மீண்டு வந்தார்

அப்போது அதானி பங்குகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன. ஆனால், ஓராண்டில் அந்த பாதிப்பில் இருந்து அவர் மீண்டு வந்தார். எனினும், ஹிண்டன்பர்க் சொன்ன குற்றச்சாட்டுகளில் இருந்து இந்த வழக்கு மாறுபட்டது. நியூயார்க் நீதிமன்றத்தில், அந்த நாட்டின் நீதித்துறை இந்த குற்ற வழக்கை தாக்கல் செய்துள்ளது. அமெரிக்க பங்குச் சந்தை கண்காணிப்பு நிறுவனத்தின் சார்பிலும், முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக தனி வழக்கு தொடரப்பட்டுள்ளது.அமெரிக்க சட்ட விதிகளின்படி, அந்த நாட்டின் பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள நிறுவனம் மற்றும் அந்த நாட்டின் பிரஜைகள் முதலீடு செய்துள்ள எந்த ஒரு நாட்டைச் சேர்ந்த நிறுவனமும், தங்களுடைய திட்டங்களுக்காக எவருக்கும் லஞ்சம் கொடுக்கக் கூடாது. கொடுத்தால், அது குறித்த தகவலை அமெரிக்க பங்குச் சந்தை நிர்வாக அமைப்பிடம் தெரிவிக்க வேண்டும். இல்லையேல் அந்த நிறுவனம் மீது அமெரிக்க சட்டங்களின் கீழ் வழக்கு தொடர முடியும்.அந்த அடிப்படையில், கவுதம் அதானி உள்ளிட்ட எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதற்காக சமர்ப்பித்த ஆவணங்களில், 'புகாரின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அவை நிரூபிக்கப்படும் வரை, அவர்கள் நிரபராதிகளாகவே பார்க்கப்படுவர்' என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ரூ.17,000 கோடி லாபம்

அதானியின் நிறுவனம் தயாரிக்கும் சூரிய சக்தி மின்சாரத்தை, மாநில மின் நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து வாங்குவதற்காக அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும், 2,100 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளனர். இதன் வாயிலாக அடுத்த 20 ஆண்டுகளில், 17,000 கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்கும். அதை மட்டும் சுட்டிக் காட்டியும், லஞ்சம் கொடுப்பதை மறைத்தும், அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடம் கணிசமான முதலீடுகளை அதானி குழுமம் பெற்றுள்ளதாக வழக்கு ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.அதானியின் உறவினரும், அதானி கிரீன் எனர்ஜி நிறுவன செயல் இயக்குனருமான சாகர் அதானி, அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரி வினீத் ஜெயின் ஆகியோர் மீது மோசடி, சதி குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

பங்கு விலை சரிந்தது

கனடாவில் பிரபலமான சி.டி.பி.பி., எனப்படும் ஓய்வூதிய நிதி நிறுவன முன்னாள் அதிகாரிகள் மூவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. மோசடி குறித்து தெரிந்தும், அதை இவர்கள் மறைத்ததாக கூறப்படுகிறது.இந்த செய்தி வெளியானதும், மும்பை பங்குச் சந்தையில் அதானி குழும பங்குகளின் விலை சரிந்தது. இதனால், முதலீட்டாளர்களுக்கு, 2.5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், 5,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்கள் வெளியிடும் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது. ஆப்ரிக்க நாடான கென்யா, அதானி நிறுவனத்துடன் செய்திருந்த மின் உற்பத்தி பரிமாற்றம் மற்றும் நைரோபி விமான நிலைய நவீனமயம் ஆகிய இரண்டு ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளது.

காங்கிரஸ் கோரிக்கை: பா.ஜ., பதிலடி

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியதாவது:அதானியை உடனடியாக கைது செய்து விசாரிக்க வேண்டும். அவருக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கும், 'செபி'யின் தலைவரை நீக்க வேண்டும்.அதானி பற்றி பார்லிமென்டின் கூட்டுக் குழு விசாரணை தேவை என்று வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.பா.ஜ., தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மால்வியா கூறியதாவது:அமெரிக்க மோசடி பணக்காரர் ஜார்ஜ் சோரஸ் நிதியுதவியுடன், நம் நாடு தொடர்பாக பொய் பிரசாரங்களில் காங்., ஈடுபட்டு வருகிறது. தற்போது இந்த விவகாரம் எழுந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதுவும், பார்லிமென்ட் கூட்டத் தொடர் துவங்க உள்ள நிலையில் இது வெளிவந்துஉள்ளது.அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் காலத்தில், அந்த மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் அதன் ஆதரவு கட்சிகளே ஆட்சியில் இருந்துள்ளன. தமிழகம், ஒடிசா, சத்தீஸ்கர், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அந்த காலத்தில் பா.ஜ., ஆட்சியில் இல்லை. லஞ்சம் கொடுத்தது உண்மையென்றால், லஞ்சம் வாங்கியது யார் என்பதை காங்., வெளிப்படுத்துமா?இவ்வாறு அவர் கூறினார்.

கைது செய்ய ராகுல் வலியுறுத்தல்

லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியதாவது:அதானியை உடனடியாக கைது செய்து விசாரிக்க வேண்டும். அவருக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கும், 'செபி'யின் தலைவர் மாதவியை நீக்க வேண்டும்.அதானி பற்றி பார்லிமென்டின் கூட்டுக் குழு விசாரணை தேவை என்று வலியுறுத்தி வருகிறோம். மோடி பிரதமராக இருக்கும் வரை, அதானி மீது விசாரணையோ, கைது நடவடிக்கையோ இருக்காது என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

அதானி குழுமம் மறுப்பு

அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கை:அமெரிக்க நீதித் துறை மற்றும் அமெரிக்க பங்குச் சந்தை கமிஷன் கூறியுள்ள புகார்கள் அடிப்படை ஆதாரமற்றவை; அவற்றை மறுக்கிறோம்.அதானி குழுமம் எப்போதும் சிறந்த நிர்வாக நடைமுறைகள், வெளிப்படைத் தன்மைகளை பின்பற்றுகிறது. தான் செயல்படும் நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டே செயல்படுகிறது. எப்போதும் சட்டங்களை மதித்து நடப்போம் என்பதை, முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள், ஊழியர்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்.எதற்கும் எப்போதும் நாங்கள் லஞ்சம் கொடுக்கவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

Vasoodhevun KK
நவ 25, 2024 10:47

அதானி மட்டும் அல்ல எந்த ஒரு தொழில் நிறுவனமும் இந்தியாவிலிருந்து வளர்ந்துட கூடாது அமெரிக்க முதலைகள் அவங்களை நம்பித்தான் இந்தியா இருக்கணும்னு எந்த நிலைக்கும் இரங்கி வேலை பார்ப்பானுங்க.


sankaranarayanan
நவ 22, 2024 21:16

இந்தியாவில் ஒரு தொழிலதிபர் தொழிலில் முன்னேற வேண்டுமானால் லஞ்சம் கொடுத்துதான் முன்னேறவேண்டும் இது உலக நியதி. இந்த பழக்கம் அமெரிக்காவிலும் உண்டு ஏன் உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் உண்டு அதற்காக இந்திய நாட்டில் நடந்த சம்பவத்திற்க்காக அமரிக்கா எப்படி ஒரு இந்தியா பிரஜைக்கு ஒருவருக்கு பிடி வாரண்டு போடமுடியும்.அதே போன்று இந்தியா இப்போது எலன் மாஸ்க் ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு பல மில்லியன் டாலர் கொடுத்ததற்காக இந்தியா அவருக்கு பிடி வாரண்டு போட முடியுமா? என்னய்யா இது? அரசியல் கோமாளித்தனமாகவே உள்ளது


S.Martin Manoj
நவ 22, 2024 16:41

மோடியின் வேலை அமெரிக்காவில் செட்டாகலையோ, மற்ற நாடுகளில் எல்லாம் நல்லாத்தானே வேலை பார்த்து தனது எஜமனருக்கு ஆர்டர் புடிச்சு கொடுத்தார், ஏம்பா அதானி, கமிசனை கரெக்டா கொடுத்தியா இல்லையா


Vazhga Bharatham
நவ 22, 2024 21:19

என்ன அறிவு


karupanasamy
நவ 22, 2024 14:13

ஜோ நம்மூர் கட்டுமரத்தவிட கெட்டவன் தனக்கு ரெண்டுகண்ணும் அவிஞ்சாலும் அடுத்தவனுக்கு கண்ணுவலி வந்தாக்கூட சந்தோசப்படுவான் இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ள உலகத்துக்கு எவ்வளவு கெடுதல் பண்ணமுடியுமோ அத்தனையும் பண்ணுவான். கெட்ட கட்டுமர புத்தி.


Indian
நவ 22, 2024 13:42

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்


அப்பாவி
நவ 22, 2024 12:29

நம்ம தொப்பை இ.டி, இன்கம்டாக்ஸ் ஆளுங்க மாச சம்பளக் காரன்கிட்டே நோட்டீஸ் அனுப்பி வீரத்தை காமிப்பாங்க. 90 வயசு முதியவர்கள் கிட்டே பெனால்டி போட்டு மொத்தத்தையும் எடுத்துக்க முயற்சி பண்ணுவாங்க. 2000 கோடி எங்கேன்னு கண்டு பிடிக்கத் தெரியாம திரு திருன்னு முழிப்பாங்க.


Sakthi,sivagangai
நவ 22, 2024 17:53

பல்லு போன வயசான காலத்துல கூட நீ பல் செட்டு கட்டிக்கிட்டு திரு திருன்னு முழிக்காம அந்த பாஞ்சி லட்சத்தை கேக்குற நீ விவரமான ஆளுதான்...


அப்பாவி
நவ 22, 2024 12:26

லஞ்சம் குடுத்ததை administrative expenses நு காமிக்கணும். டீ குடிக்க ஆன செலவுன்னு கணக்கு காமிச்சிருந்தா முதலீடு இன்னும் நிறையவே கிடைச்சிருக்கும்.


தஞ்சை மன்னர்
நவ 22, 2024 11:55

ஹி ஹி ஒரு திருட்டு குஜராதிகாரை காப்பாற்ற ஒரு ஊழல் குஜாரதிகாரர் குட்டி கரணை போட்டே ஆகவேண்டும்


ஆரூர் ரங்
நவ 22, 2024 13:42

அறப்போர் இயக்கம் இதே மின்வாரியம் மீது ஊழல் புகார் ஆதாரத்துடன் அளித்த போது அமைச்சர் உத்தமர் என்று கருத்துப் பதிவிட்டது உ.பி ஸ். இன்று வரை விசாரணை ஏதுமில்லை.


ராஜேந்திரன்,துறையூர்
நவ 22, 2024 17:57

அப்புறம் மன்னரே இன்னிக்கு வெள்ளிக் கிழமை விஷேசம் ஏதும் உண்டா? இன்னும் ஒரு சத்தத்தையும் காணோமே?


Anantharaman Srinivasan
நவ 22, 2024 11:46

அமெரிக்காயென்ன இந்தியாவா லஞ்சம் கொடுத்து மாட்டிக்கொண்டாலும் தப்பித்து மீண்டுவர..??


அப்பாவி
நவ 22, 2024 11:18

இதே மாதிரிதான் காக்னிசண்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம் இங்கே கட்டடம் கட்ட பர்மிஷன் வாங்கறதுக்காக 22 கோடி லஞ்சம்.குடுத்து மாட்டிக்கிச்சு. அடைக்க வேண்டியதை அடைச்சு இப்போ ஜாம் ஜாம்னு தொழில் பண்ணுது. சரிந்த அதானி பங்குகளை இப்போ வாங்கிப் போடுவது புத்திசாலித்தனம். அதானியை இந்த அரசு கைவிடாது. ட்ரம்ப் அரசும் இழுத்து மூடி காப்பாத்துரும். லஞ்சம் குடுப்பது, வாங்குவது தப்பில்லை. ஆனா, மாட்டிக்கக் கூடாது. அதானி பதவி விலகி இன்னொரு பொம்னையை நிர்வாக அதிகாரியாகப் போட்டால் பொழச்சுக்கலாம்.


சமீபத்திய செய்தி