உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியை குப்பை கிடங்காக மாற்றிவிட்டார்; கெஜ்ரிவால் மீது அமித் ஷா குற்றச்சாட்டு

டில்லியை குப்பை கிடங்காக மாற்றிவிட்டார்; கெஜ்ரிவால் மீது அமித் ஷா குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியை குப்பை கிடங்காக கெஜ்ரிவால் மாற்றிவிட்டார். யமுனை நதியை மாசுபடுத்தி விட்டார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். டில்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா பேசியதாவது: ஆம் ஆத்மி அரசு தவறான நிர்வாகத்தை நடத்தி வருகிறது. தலைநகரின் மோசமான நிலைக்கு கெஜ்ரிவால் நிர்வாகமே காரணம். டில்லியை குப்பை கிடங்காக கெஜ்ரிவால் மாற்றிவிட்டார். யமுனையை மாசுபடுத்தி விட்டார். நகரின் உள்கட்டமைப்பு சிதைந்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r6qh5bxy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டில்லியில் சரியான கழிவுநீர் வசதிகள் இல்லாததால் மழைக்காலத்தில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. கடந்த சில ஆண்டுகளில், டில்லியில் மழையால் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இது வேறு எங்கும் நடக்கவில்லை, ஆனால் ஆம் ஆத்மி கட்சி பொறுப்பை ஏற்காமல் சாக்குப்போக்குகளை தொடர்ந்து கூறுகிறது. ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் தனது தோல்விகளை மறைக்க அற்ப அரசியலை கெஜ்ரிவால் செய்து வருகிறார். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக யமுனையில் விஷம் கலந்திருப்பதாக கெஜ்ரிவால் பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். டில்லி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதில் ஆம் ஆத்மி அரசு தவறிவிட்டது. யமுனை நதி முன்னெப்போதையும் விட மாசுபட்டுள்ளது. மேலும் மக்கள் அசுத்தமான தண்ணீரை குடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.மக்கள் தன்னை நிராகரிப்பார்கள் என்று கெஜ்ரிவால் சாக்குப்போக்கு கூறுகிறார். டில்லி வாக்காளர்கள் பிப்ரவரி 5ம் தேதி ஆம் ஆத்மி கட்சியை அகற்றி பா.ஜ.,வை ஆட்சிக்கு கொண்டு வர வாய்ப்பு உள்ளது. பா.ஜ., வெற்றி பெற்றால் மாற்றம் ஏற்படும். டில்லியை உலகின் முதல் தலைநகராக மாற்றுவோம். இவ்வாறு அமித்ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kanns
ஜன 31, 2025 12:37

Cheap & False Propaganda Politicians


Barakat Ali
ஜன 31, 2025 09:16

அரசியலையே குப்பையாக ஆக்கிய பெருமை உங்களுக்கும் உண்டே ????


Barakat Ali
ஜன 31, 2025 07:46

பங்களாதேஷில் இருந்து குப்பைகளை இன்னமும் அனுமதித்து வருகிறீர்கள் சேட்டு ஜி ????


அப்பாவி
ஜன 31, 2025 07:11

அங்கே கிடந்த ஒரே ஒரு குப்பையை எடுத்துப் போட்டு தூய்மையான நகரமா மாத்தினாரே ஒரு ஜீ. மறந்துடுச்சா கோவில்?


Petchi Muthu
ஜன 31, 2025 07:04

அனைவரது கவனம் கெஜ்ரிவால் பக்கம் திரும்பியது


புதிய வீடியோ