மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
27 minutes ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
27 minutes ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
38 minutes ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
39 minutes ago
மைசூரு: லோக்சபா தேர்தல் வியூகம் குறித்து, மைசூரு, சாம்ராஜ்நகர், மாண்டியா மாவட்ட பா.ஜ., தலைவர்களுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று மைசூரில் ஆலோசனை நடத்தினார். தேர்தலுக்கு தயாராவது குறித்து அறிவுரை கூறியதுடன், ம.ஜ.த.,வுடனான கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.லோக்சபா தேர்தலுக்கு, கர்நாடகாவில் உள்ள கட்சிகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. இந்நிலையில், பா.ஜ.,வின் தேர்தல் சாணக்யர் என்று அழைக்கப்படும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, லோக்சபா தேர்தல் வியூகம் வகுக்க, டில்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, மைசூரு வந்தார்.மைசூரில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்.நேற்று மதியம் மைசூரு, மாண்டியா, சாம்ராஜ்நகர் மாவட்டங்களை சேர்ந்த, பா.ஜ., தலைவர்கள், தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். மாநில பொறுப்பாளர் ராதாமோகன் தாஸ் அகர்வால், மாநில தலைவர் விஜயேந்திரா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக்.முன்னாள் முதல்வர்கள் பசவராஜ் பொம்மை, சதானந்த கவுடா, முன்னாள் அமைச்சர்கள் ஈஸ்வரப்பா, ரவி, ஸ்ரீராமுலு, முன்னாள் மாநில துணை தலைவர் நிர்மல்குமார் சுரானா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.* ம.ஜ.த.,வுக்கு வேண்டாம் இதில் அமித்ஷா பேசுகையில், ''கர்நாடக அரசு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது. அவர்களால், வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. இதுகுறித்து மக்களிடம் எடுத்து கூறுங்கள்.கடந்த 10 ஆண்டு ஆட்சியில், பிரதமர் மோடி செய்த சாதனைகளை பற்றி, வீடு, வீடாக சென்று மக்களிடம் எடுத்து சொல்லுங்கள். கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளிலும், நாம் வெற்றி பெறும் சூழ்நிலை உள்ளது,'' என்றார்.அப்போது, 'மாண்டியா, ஹாசன் தொகுதிகளை ம.ஜ.த.,வுக்கு விட்டுதர வேண்டாம். அந்த தொகுதிகளில், நமது கட்சி வேட்பாளர்களை நிறுத்தினால் கண்டிப்பாக வெற்றி பெறுவர். பழைய மைசூரு பகுதியில், நமது கட்சியை வளர்க்க நல்ல வாய்ப்பு கனிந்து உள்ளது' என்று, மாண்டியா, ஹாசன் மாவட்ட பா.ஜ., தலைவர்கள் கூறினர்.* கூட்டணி தர்மம் இதைக் கேட்டு கடும் கோபம் அடைந்த அமித்ஷா, ''யாருக்கு சீட் வழங்க வேண்டும் என்று, கட்சி மேலிடம் முடிவு செய்து கொள்ளும். ம.ஜ.த., குறித்து தேவையற்ற கருத்துகளை சொல்ல வேண்டாம். அவர்கள் நம்முடன் கூட்டணியில் இருக்கின்றனர். கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.''கடந்த தேர்தலில் காங்கிரசும், ம.ஜ.த.,வும் கூட்டணியில் இருந்தனர். கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்காமல் பேசியதால் தான், கடந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனால் ம.ஜ.த., தலைவர்களை விமர்சித்து பேச கூடாது. நாங்கள் யாருக்கு சீட் தருகிறோமா அவர்கள் வெற்றிக்காக அனைவரும் ஒற்றுமையாக உழைக்க வேண்டும்,'' என்று, கண்டிப்புடன் கூறினார்.தொடர்ந்து பிரசாரம் குறித்தும், பூத் கமிட்டி அமைப்பது பற்றியும், தலைவர்களுக்கு, அமித்ஷா ஆலோசனை வழங்கினார். இதையடுத்து, மாலை 5:00 மணிக்கு, விமானத்தில் டில்லி புறப்பட்டு சென்றார். அமித்ஷா வருகையால் பா.ஜ.,வினர் உற்சாகத்தில் உள்ளனர்.==========பாக்ஸ்....1அருண் யோகிராஜுக்கு கவுரவம்மைசூரு சுத்துார் மடத்தில், மூன்று நாட்கள் நடந்த திருவிழா நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். சுத்துார் மடத்திற்கு சென்று, மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர சுவாமிகளிடம் ஆசி பெற்றார்.சுத்துார் மடத்தில் 12 கோடி ரூபாய் செலவில், காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ., சாமனுார் சிவசங்கரப்பா குடும்பத்தினர் கட்டியுள்ள விருந்தினர் மாளிகையையும், அமித்ஷா திறந்து வைத்தார்.பின், அயோத்தி ராமர் கோவில் சிலையை வடிவமைத்த, மைசூரு சிற்பி அருண் யோகிராஜுக்கு சால்வை, மைசூரு தலைப்பாகை அணிவித்து, அமித்ஷா கவுரவித்தார். அதன்பின், மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்று, தரிசனம் செய்தார்.=========பாக்ஸ்... 2நாராயணகவுடா பங்கேற்புமாண்டியா கே.ஆர்.பேட் பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., நாராயண கவுடா. லோக்சபா தேர்தலில் மாண்டியா தொகுதியை, ம.ஜ.த.,வுக்கு கொடுக்க கூடாது என்று வலியுறுத்தி வருகிறார். எம்.பி., சுமலதாவுக்கு சீட் தர வேண்டும் என்றும் கூறுகிறார்.இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு, முதல்வர் சித்தராமையாவை, நாராயணகவுடா சந்தித்து பேசினார். அவர் காங்கிரசில் இணைய உள்ளதாக, தகவல் வெளியானது. அமித்ஷா தலைமையில் நடக்கும் ஆலோசனையில், நாராயண கவுடா பங்கேற்க மாட்டார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றைய ஆலோசனையில் அவரும் பங்கேற்றார். --------பாக்ஸ்... 3அமித்ஷாவுக்கு சித்தராமையா சவால்பெங்களூரில் நேற்று முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டி:கர்நாடகாவின் வாக்குறுதி திட்டங்களை எதிர்க்கும் பா.ஜ., தலைவர்கள், தங்கள் ஆட்சியில் உள்ள மாநிலங்களிலும் இதே வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்துவதாக உறுதி அளிக்கின்றனர்.ஏழை மக்களுக்காக செயல்படுத்தப்படும் எந்த திட்டத்தையும், பா.ஜ.,வும், சங்க்பரிவாரும் ஆதரித்ததாக வரலாறு இல்லை. நான் முதல்வராக இருந்தபோது செயல்படுத்திய அன்னபாக்யா, பால்பாக்யா, இந்திரா உணவகம் போன்ற ஏழைகளின் நலனுக்கான திட்டங்களை பார்த்து, பா.ஜ., தலைவர்கள் பொறாமை கொண்டனர்.ஏழைகளுக்கு அரிசி வழங்கும் அன்னபாக்யா திட்டத்துக்கு அரிசி வழங்க மறுத்த மத்திய அரசு, தற்போது அதே அரிசியை 'பாரத்' என்ற பெயரில் விற்பனை செய்கிறது. 'வாக்குறுதி திட்டங்களால், கர்நாடகா அரசின் கருவூலம் காலியாகி விட்டது என கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இது தொடர்பாக என்னுடன் விவாதிக்க தயாரா.வாக்குறுதி திட்டங்களுக்கு எதிராக பேசும் அமித் ஷா, கன்னட கொடியை எதிர்ப்பது, ஹிந்தியை திணிக்க முயல்வது, நந்தினி பாலுக்கு எதிராக அமுல் பாலை கர்நாடகாவுக்குள் கொண்டு வருவது தான் அவரின் சாதனைகள்.ஏழைகளின் கண்ணீரை துடைப்பதே உண்மையான கடவுள் பக்தி என்பதை உணர்ந்தவன் நான். ஏழைகளின் வயிற்றில் அடித்து எத்தனை முறை ராமநாமம் சொன்னாலும் வீண். ஏழைகளுக்கு உணவு கொடுக்காமல், கடவுளுக்கு பிரசாதம் கொடுத்து என்ன பலன்.வாக்குறுதி திட்டங்களை எதிர்ப்பவர்கள் மீது எந்த ராமனும் கருணை காட்ட முடியாது. அத்தகையவர்களுக்கு அன்னை சாமுண்டீஸ்வரியின் ஆசிர்வாதம் இருக்காது.இவ்வாறு அவர் கூறினார்.
27 minutes ago
27 minutes ago
38 minutes ago
39 minutes ago