உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதித்துறை செயல்முறையை எளிமையாக்கிய புதிய சட்டங்கள்: அமித் ஷா பெருமிதம்

நீதித்துறை செயல்முறையை எளிமையாக்கிய புதிய சட்டங்கள்: அமித் ஷா பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குருக்ஷேத்ரா:“நம் நாட்டில் அமல்படுத்தப்பட்ட மூன்று புதிய சட்டங்கள், நீதித்துறை செயல்முறையை எளிமையாக்குவதுடன், வழக்குகளை விரைந்து முடிக்க உதவும்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட, ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனைச் சட்டம், சி.ஆர்.பி.சி., எனப்படும் குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக மூன்று புதிய சட்டங்கள், நம் நாட்டில் கடந்த ஆண்டு ஜூலை 1ல் அமல்படுத்தப்பட்டன. 'பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷ்ய அபினியம்' ஆகிய இந்த மூன்று புதிய சட்டங்கள் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஹரியானாவின் குருக்ஷேத்ராவில் நடைபெற்ற கண்காட்சியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா துவக்கி வைத்தார். இதன்பின், அந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: வரும் 2026க்கு பின், எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவான எந்தவொரு வழக்குகளிலும், மூன்று ஆண்டுகளுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். புதிய சட்டங்கள், இதை உறுதிப்படுத்தும். கடந்த ஓராண்டில், நாடு முழுதும் புதிய சட்டங்களின் கீழ், 53 சதவீத குற்ற வழக்குகள் பதிவானதுடன், 60 நாட்களுக்குள் அவற்றுக்கான குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. புதிய சட்டங்களின் கீழ், வழக்குகளில் அடிக்கடி வாய்தா வழங்கப்படுவது தடுக்கப்படுவதுடன், நீதி விரைந்து கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Yasar Arafat Yasar Arafat
அக் 05, 2025 09:44

அமித்ஷா பெருமையே நிராகரிக்கிறது.


Krishna
அக் 05, 2025 06:33

WHY NOT Sack& Punish All 95%Judges Misusing Courts/Laws for Not Giving UnBiased Quality Fast CheapCost Judgements on Peoples Direct-Simple Petitions AND Not Punishing Power-Misusing MegaLoot RulingParty Men- Stooge Officials esp Police, Judges, PowerHungry Bureaucrats, Vested Case/News/Vote/ Power Hungry Groups incl FalseComplaint Gangs


தாமரை மலர்கிறது
அக் 05, 2025 03:38

வாய்தா அரிதாகவே கொடுக்கப்படவேண்டும். ஒரு வாரத்தில் குறைந்தது நூறு கேஸ்கள் ஒரு நீதிமன்றத்தில் முடிக்கப்பட வேண்டும். அதற்கான வகையில் நேரம், நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். அனாவசிய நீதிபதிகளின் லீவை ரத்து செய்ய வேண்டும். எந்த ஒரு கேசும் ரெண்டு வருடங்களுக்கு மேல் தேங்க கூடாது.


Sun
அக் 05, 2025 03:26

அப்படியே அந்த வெளிப்படை தன்மை அற்ற கொலிஜியம் முறையிலும் மாறுதல் கொண்டு வந்து காலத்திற்கு ஏற்ற புதிய நடைமுறை வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை