உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி: இன்று வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி: இன்று வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புதுடில்லி: மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி குறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது என கூறியுள்ளார்.'நேஷனல் சென்சஸ்' எனப்படும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக, 2011ல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அடுத்ததாக, 2021ல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக கடந்த 2019ம் ஆண்டில் 8,754 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தேசிய மக்கள் தொகை பதிவேட்டை, 3,941 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.ஆனால், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, சென்சஸ் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன. மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தான், அரசுகளின் திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன என்பதால், தாமதமின்றி அதை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.அதோடு, ஜாதிவாரியான கணக்கெடுப்பும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்டவற்றில் பின்தங்கியுள்ள சமூகத்தினரின் வளர்ச்சிக்கு அது அவசியம் என எதிர்க்கட்சிகள் கூறி வந்தன.இந்த சூழ்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் வெளிப்படையான ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அமைச்சரவை ஏப்ரலில் ஒப்புதல் அளித்தது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு பணியும், 2027 மார்ச் 1ல் துவங்கும் என கடந்த 4ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை, வரும் 16ம் தேதி வெளியிடப்படும்.எனினும், பனிப்பொழிவுக்கு இலக்காகும் ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், லடாக் மாநிலங்களில் முதல் கட்டமாக 2026, அக்டோபர் 1ம் தேதியே கணக்கெடுப்பு பணி துவங்கும். நாட்டின் மற்ற மாநிலங்களில் இந்த வேலைகள் 2027, மார்ச் 1ல் துவங்கும்.இந்நிலையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். முதல்முறையாக, இந்த கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். 34 லட்சம் அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மற்றும் 1.3 லட்சம் பேர், அதிநவீன மொபைல் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி இந்த பணியை மேற்கொள்வார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தாமரை மலர்கிறது
ஜூன் 17, 2025 00:17

இந்து பெயரை மட்டும் வைத்துக்கொண்டு வேறு மதத்தில் இருப்பவர்களை, அந்தந்த மததிற்கு தள்ளி, அவர்களுக்குரிய கோட்டாவை கொடுக்க வேண்டும்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 16, 2025 09:53

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் போது மதத்தையும் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். அதே போல் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் போது அந்த குடுப்பத்ததை சார்ந்தவர்கள் அரசு பணியில் உள்ளார்களா அந்த குடும்பத்தில் ஒவ்வொருவருடைய மாத வருமானம் அவர்கள் வைத்திருக்கும் ரேஷன் கார்டு வகை அவர்களின் இருப்பிட அளவு அவர்களது சொத்துக்கள் போன்றவையும் சேர்த்து பதிவு செய்ய வேண்டும். இதனால் ஜாதி வாரி இட ஒதுக்கீட்டில் வசதியானவர்களை முன்னேறியவர்களாக கருதி அவர்களுக்கான இட ஒதுக்கீட்டினை அதே ஜாதியில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு கிடைக்க வழி வகை செய்ய முடியும். எம்எல்ஏ எம்பி கவுன்சிலர்கள் போன்ற அரசியலில் உள்ளோர்களை அவர்கள் எந்த ஜாதியை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் குடும்பத்தாரை பொது பிரிவுக்கு மாற்றம் செய்ய வேண்டும். ஜாதி வாரி இட ஒதுக்கீடு எம்பி எம்எல்ஏ கவுன்சிலர்கள் போன்றோருக்கு முற்றிலும் தடை செய்ய வேண்டும். பார்வேட் சமூகத்தில் பொருளாதார அடிப்படையில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு கோட்டாவை மற்ற பிரிவினர்களுக்கு தரக்கூடாது. பொதுப் பிரிவு இட ஒதுக்கீட்டை இட ஒதுக்கீடு கோட்டாவில் வரும் ஜாதியினருக்கு வழங்க கூடாது. கண்டிப்பாக ஒவ்வொருவருடைய மதம் அந்த மதத்தில் எந்த பிரிவு இந்து மதமாக இருந்தால் எந்த ஜாதி என்பதை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இந்து மதத்தில் இருந்து மற்ற மதங்களுக்கு மாறியோர் அந்த அந்த மதத்தை சேர்ந்தரவராகவே பதிவு செய்ய வேண்டும். அவர்களது முந்தைய இந்து ஜாதி பெயரில் பதிவு செய்ய கூடாது. அனைவரது மதமும் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். மதம் அதன் உட்பிரிவு இந்துவாக இருந்தால் ஜாதி ஆகியவற்றை உள்ளூர் கிராம அதிகாரி அல்லது அரசால் நியமனம் செய்யும் அதிகாரியை கொண்டு உறுதி செய்ய வேண்டும். அந்த அதிகாரி அதே மதத்தை சேர்ந்தவராக இருந்தால் வேறு அதிகாரியை கொண்டு உறுதி செய்ய வேண்டும். மதம் மாறியவர்களுக்கு உட்பிரிவு இல்லாவிட்டால் மதம் மாறியவர் என்ற புதிய பிரிவின் கீழ் தான் குறிப்பிட வேண்டும்.


தாமரை மலர்கிறது
ஜூன் 15, 2025 23:21

வடக்கே அதிகரித்த மக்கள் தொகைக்குஏற்றவாறு பாராளுமன்ற சீட்களை அதிகரிக்க கணக்கெடுப்பு அவசியம். இது மிகப்பெரிய வெற்றிவாய்ப்பை வடக்கே பலமாக உள்ள பிஜேபிக்கு கொடுக்கும். இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு பிஜேபியை துக்கடா மாநில கட்சிகளால் அசைக்க முடியாது. ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தாலும், கண்டிப்பாக வெளியிடப்பட கூடாது. காரணம் சாதிக்கட்சிகளை அது ஊக்குவிக்கும். திருமா, ராமதாஸ், தேவர் கட்சி, கவுண்டர் கட்சி என்று ஆளாளுக்கு கொம்பு முளைத்து ஆட ஆரம்பித்து விடுவார்கள். இந்திய சமுதாயம் ஒற்றுமையாக அனைத்து சாதிகளுடன் அமைதியாக வாழ சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிடக்கூடாது.


SUBBU,MADURAI
ஜூன் 15, 2025 22:58

ஒன்றிய அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஈனஸ்வரத்தில் முழங்கிய போது மத்திய அரசின் இந்த அறிவிப்பு ஸ்டாலினின் தலை மேல் விழுந்த இடியாகும் இனி ஒவ்வொரு ஜாதியாக கணக்கெடுத்து வரும் போது கட்டுமர கருணாநிதியின் சின்னமேளம் என்ற ஜாதி எத்தனை பேர் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வரும் அப்படி தெரிய வரும்போது ஓங்ஙோல் தெலுங்கு சின்னமேள கருணாநிதி எப்படி திராவிட போர்வையில் தமிழனாக மாறி இளிச்சவாய தமிழர்களை திராவிடர்களாக மாற்றினார் என்ற உண்மை இந்த உலகிற்கு தெரியவரும்


சமீபத்திய செய்தி