உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்: சொல்கிறார் ராகுல்

அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்: சொல்கிறார் ராகுல்

புதுடில்லி: '' அம்பேத்கர் குறித்த பேச்சுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும், '' என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.அரசியலமைப்பு சட்டத்தின் 75வது ஆண்டு விழா விவாதத்தின் போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி கடந்த இரு தினங்களாக இரு அவைகளையும் எதிர்க்கட்சியினர் முற்றுகையிட்டு வருகின்றனர். அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பார்லிமென்ட் வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தலைமையில் போராட்டம் நடந்தது. இவர்களுக்கு எதிராக ஆளுங்கட்சி எம்.பி.,க்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் இரண்டு எம்.பி.,க்களுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ எச்சரித்து உள்ளார்.இந்நிலையில் ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அம்பேத்கருக்கு எதிரான அமித்ஷாவின் கருத்தை நாட்டு மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். மறக்க மாட்டார்கள். இதற்காக அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.

பிரியங்கா வலியுறுத்தல்

வயநாடு தொகுதி எம்.பி., பிரியங்கா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாட்டின் அரசியல்சாசனத்தை கொடுத்தவரும், ஒவ்வொரு மக்களுக்கும் உரிமைகளை அளித்தவரும்,கோடிக்கணக்கான தலித்களின் வாழ்க்கையை மாற்றியவருமான அம்பேத்கரை பா.ஜ. தொடர்ந்து அவமதித்து வருகிறது. இதன் மூலம், தலித்கள், நாட்டின் பின் தங்கிய மக்களை அவமதித்து வருகிறது. இதற்காக பா.ஜ., மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.மற்றொரு அறிக்கையில், பார்லிமென்டிற்கு பா.ஜ., குச்சிகளுடன் வரும்.எங்களை பார்லிமென்டிற்குள் நுழைவதை தடுக்க வேண்டும் என எண்ணுகிறது. ஆனால், அம்பேத்கர் அவமதிக்கப்பட்டது முக்கியமான விஷயம். இதற்காக பா.ஜ., மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

ஆசாமி
டிச 20, 2024 17:32

என்ன


அப்பாவி
டிச 20, 2024 10:23

இந்தியாவின் சாபக்கேடா ஒண்ணு ரெண்டு ஆளுங்ககைப் புடிச்சிட்டு தொங்கறதுதான். அம்பேத்கார் இல்லேன்னா இன்னொருத்தர். பட்டேல். இல்லேன்னா இன்னொருத்தர் வந்திருப்பாங்க. செத்துப் போனவங்களை தோண்டி ஒப்பாரி வெச்சா நீங்கள்ளாம் நாட்டுக்கு எப்போ நல்லது செய்யறது? ட்ரம்ப் வாஷிண்டனையும், லிங்கனையும், ரீகனையும் வெச்சா அரசியல் செய்யறாரு? திருந்துங்க.


அப்பாவி
டிச 20, 2024 08:37

ரெண்டுபேரையும் எதிர் எதிரே நின்னுக்கிட்டு துணை ஜனாதிபதி ஒன்...டூ... த்ரி ந்னு சொன்ன உடன் மாஃப் கரோன்னு ரெண்டு பேரும் சொல்லிடணும். ஆளுக்கு ரெண்டு தோப்பிகரணமும் போட வெச்சா உடம்புக்கும் ஆரோக்கியம். அம்பேத்கார் ஆத்மாவும் அமைதியடையும். மாத்தி யோசிங்க.


Nallavan
டிச 20, 2024 07:48

அம்பேத்காரை இழிவு படுத்தி பேசியது அல்லாமல் ராகுல் மீது பொய் வழக்கு தொடுக்கும் இந்த அசுர, ஹிட்லர், அமிட்ஷா உடனே ராஜினாமா செய்ய வேண்டும்,


தாமரை மலர்கிறது
டிச 20, 2024 00:50

அமித் ஷா அம்பேத்கரை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லி திட்டவில்லை. அவரை வைத்து திருமா, மாயாவதி மற்றும் ராகுல் போன்றோர் ஓட்டுவங்கி அரசியல் செய்கிறார்கள் என்று தான் சொன்னார். இதற்கெல்லாம் மன்னிப்பு கேட்கமுடியாது. அனைவருக்கும் பொதுவான காந்தி மாதிரி இருந்த அம்பேத்கரை ஒரு தலித் தலைவராக மாற்றிய பெருமை திருமா, மாயாவாதியை தான் சேரும். காந்தி போட்டோ அனைவர் வீட்டிலும் உள்ளது. அம்பேத்கார் போட்டோவை யாரும் வைத்துக்கொள்ள முடியாதபடி எதிர்க்கட்சி தலைவர்கள் அவரை ஒரு தலித் தலைவராக சித்தரித்து விட்டார்கள்.


MN JANAKIRAMAN
டிச 20, 2024 16:20

மறுக்கமுடியாத உண்மை....


Bhakt
டிச 19, 2024 21:56

பப்புவுக்கும் பப்பிக்கும் முதல்ல அம்பேத்கர் யாருன்னு தெரியுமா?


Raj S
டிச 19, 2024 21:23

உங்களுக்கு எப்படி மக்களை ஏமாத்த அவரை தூக்கி புடிக்க உரிமை இருக்கோ அதே மாதிரி அவங்களுக்கும் அவரின் கருத்துக்களை பற்றி பேச முழு உரிமை இருக்கு... அவங்களும் இந்த சுதந்திர நாட்டின் பிரஜைகள் தான்... உங்களிடம் மன்னிப்பு கேக்க வேண்டிய அவசியம் இல்லை...


ngm
டிச 19, 2024 21:00

அதானி, அம்பேத்கர் அடுத்ததாக அந்த 15 லக்ஷம் போட சொல்லி வெளிநடப்பு. மன்னிப்பு கேட்க வலியுறுத்தும்.


ராமகிருஷ்ணன்
டிச 19, 2024 19:52

மன்னிப்பு கேட்க முடியாது. போடா டீ சர்ட் எங்கே?


Ramesh Sargam
டிச 19, 2024 19:20

அது என்ன அவதூறு கருத்து என்று கடைசிவரையில் கூறவில்லை.


முக்கிய வீடியோ