உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தியில் ரூ.14 கோடிக்கு நிலம் வாங்கிய அமிதாப்

அயோத்தியில் ரூ.14 கோடிக்கு நிலம் வாங்கிய அமிதாப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அயோத்தி: அயோத்தியில் ரூ. 14 கோடிக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நிலம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உ.பி. மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கும்பாபிஷேக விழா 22-ம் தேதி நடைபெறுகிறது.இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அயோத்தியில் ராமஜென்பூமி பகுதியில் 10 ஆயிரம் சதுரடி பரப்பளவுள்ள நிலத்தை ரூ. 14.5 கோடிக்கு வாங்கியுள்ளார். இங்கு பிரம்மாண்ட கட்டடம் கட்ட மும்பை கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார். இது குறித்து அமிதாப் கூறுகையில், அயோத்தி நகரும், சராயுவும், இதயத்தில் சிறப்பான இடம் பிடித்தவை. இங்கு எனது பயணம் இனிதே துவங்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ