உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதுகெலும்பு இல்லாதவர்கள்; மலையாள பட உலகை மட்டையடி அடித்தார் சேரன் பட நடிகை

முதுகெலும்பு இல்லாதவர்கள்; மலையாள பட உலகை மட்டையடி அடித்தார் சேரன் பட நடிகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: 'மலையாள நடிகர் சங்கத்துக்கு முதுகெலும்பே கிடையாது' என்று பிரபல நடிகை பத்மபிரியா விமர்சித்துள்ளார்.

தினம் ஒரு புகார்

மரங்கள் ஓய்ந்தாலும் காற்று விடுவதில்லை போலும். அப்படித்தான் கேரள சினிமாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நித்தம், நித்தம் ஒரு புகார், வழக்குப்பதிவு என மல்லுவுட் உலகம் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

குபீர் குற்றச்சாட்டு

பிரபல நடிகர்கள் பலரும் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி பெரும் சர்ச்சைக்கு ஆளாகி இருக்கும் நிலையில் முன்னணி நடிகை பத்மபிரியா ஒரு குபீர் குற்றச்சாட்டை எழுப்பி திரையுலகை மீண்டும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். மலையாள நடிகர் சங்கத்துக்கு முதுகெலும்பே இல்லை என்று போட்டு தாக்கி உள்ளார்.

முதுகெலும்பு

இது குறித்து அவர் கூறி உள்ளதாவது; ஹேமா கமிட்டி அறிக்கை ஏன் 4 ஆண்டுகள் தாமதமாக வெளியிடப்பட்டது என அரசு விளக்கம் அளிக்க வேண்டும். நடிகர்கள் சங்கத்துக்கு சங்கத்துக்கு முதுகெலும்பே கிடையாது. ராஜினாமா என்பதே பொறுப்பற்ற நடவடிக்கை. எல்லாரும் மொத்தமாக ராஜினாமா என்றால், யாரிடம் அதை ஒப்படைக்கப் போகிறார்கள்? எதுவுமே தெரியாதது போல் பேசும் மோகன்லால், மம்முட்டி ஆகிய இருவரின் கருத்துகள் எனக்கு ஏமாற்றத்தையே தருகின்றன.

போதை

மலையாள திரையுலகில் அதிகார மையம் என்று ஒன்று இருக்கிறது. அதிகாரம் இருப்பதால் தான் அவர்கள் நடவடிக்கைகள் இவ்வாறு உள்ளது. நடிகைகளை அவர்கள் ஒரு போதையாகவே பார்க்கின்றனர். எனக்கு இப்போது அதிக படங்கள் கையில் இல்லை, வாய்ப்புகள் குறைந்துவிட்டன. அதற்கு என்ன காரணம் என்று எனக்கு நன்றாக தெரியும்.

பேச்சு

26 வயதில் நான் இருக்கும்போது, 'உங்களுக்கு வயதாகிவிட்டது, நடிப்பதை நிறுத்துங்கள்' என்று தயாரிப்பு நிர்வாகி ஒருவர் கூறினார். அவரின் இந்த பேச்சு பெரும் அதிர்ச்சியாக எனக்கு இருந்தது.இவ்வாறு பத்மபிரியா கூறினார்.பத்மப்பிரியா தமிழில், சேரன் இயக்கிய தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் படங்களிலும், 'சத்தம் போடாதே' படத்திலும் நாயகியாக நடித்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

spr
செப் 04, 2024 14:52

திரை அது சின்னத்திரையாக இருந்தாலும் பெரிய திரையாக இருந்தாலும் உணர்ச்சிகளை மையமாக வைத்து மக்களைக் கவரும் ஒரு உத்தியே அதன் மூலம் பெரும் புகழும் பணமும் பெற வாய்ப்பு அவ்வளவே. அதனாலேதான் பண்பாடு குறித்து அக்கறை கொண்ட அக்காலம் பெண்களை திரையுலகில் ஏன் கலைத்துறையிலேயே பங்கேற்க விட்டதில்லை அதில் அவர்களாக விரும்பும் வரையில் நடப்பது எதுவும் தவறில்லை அண்மையில் ஒரு தொலைகாட்சி விழாவொன்றில் தொகுப்பாளர் ஒருவருக்கு விருது வழங்கியதும் அவர் அங்கு மேடையிலிருந்து கம்பத்தைக் கூட விடவில்லை கட்டித்தழுவி ஆரவாரித்தார் ஒரு பெண் பலர் அறிய பிற ஆடவரைக் காட்டித் தழுவுதல் இந்திய பண்பாடல்ல ஆனாலும் எவரும் அதைத் தடை செய்யவில்லை நாம் கேட்கவில்லையே அவராகத்தானே செய்கிறார் என்ற நினைப்பில் வாய்ப்பு கிடைத்த எவரும் தழுவலிலிருந்து விலகவும் இல்லை இப்படியெல்லாம் பலர் அறிய செய்பவர்கள் பின் திரையுலகம் கெட்டுப் போய்விட்டது பெண்கள் அவமதிக்கப்படுகிறார்கள் என்று கூக்குரல் இடுவார்கள் அவரவர் மதிப்பை அவரவர் காப்பாற்றிக் கொண்டால் இப்படியெல்லாம் நடக்குமா வாய்ப்பு, அதைப் பெற விளம்பரம் அதனால் வரும் காசு புகழ் இவற்றால் மயங்குபவர்கள் அனுபவிக்க வேண்டியதுதான்


Sivak
செப் 04, 2024 14:17

தன் பெயரும் பப்லிசிட்டி ஆக வேண்டும் என்று.. தானும் ஒன்று சொல்லி வைப்போம் என்று ஏதாவது சொல்லிவிட்டு போவது ... எட்டு ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்றால் அப்போது தப்பாக தெரியவில்லை ஏனென்றால் காசு பணம் துட்டு மணி வேண்டும் இல்ல?? இப்போ காசு வந்திருக்கும் ஆனால் விளம்பரம் தேவை ... இப்படி ஒரு பிட் போடுவோம் ... காசுக்கு பேயாய் அலையும் பேமானிகள்.. ஹீரோக்கள் 60 வயது வரை சம்பாதிக்கிறார்கள் ... ஹீரோயின்கள் 40க்கு மேல அம்மா அக்கா வேஷம் தான் ... அந்த பொறாமை என்னிக்குமே உண்டு .... ஒரு பொண்ணுக்கு அநியாயம் நடக்குதுன்னு சொன்ன உடனே மக்கள் எல்லாம் நரம்பு புடைத்து டென்சன் ஆகி ஹீரோ ஆயிடுவாங்க...


Sivak
செப் 04, 2024 13:58

பெண்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டு ஏதோ பிளான் செய்கிறார்கள் ... போகிற போக்கில் எல்லார் மேலும் புகார் குடுத்து விட்டு செல்கின்றனர் .... திரையுலகில் எல்லாரும் உத்தமிகள் மற்றும் பத்தினிகள் போல... காசுக்காக எதையும் கழற்றி காட்ட தயாராக வந்தவர்கள் தானே ... நல்லவர்கள் போல வேஷம் போடுகிறார்கள் ... சமூகம் சீர்கெட்டது இந்த சினிமா நாதாரிகளால் தான் ....


Sampath Kumar
செப் 04, 2024 09:39

கடவுளின் தேசமின்று சாத்தானின் தேசமாக மாறி விட்டது போலாய்யோ ஏன் அய்யப்ப காப்பது அப்பா


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 04, 2024 09:31

ஜொள் விடும் ஆண்களே கூச்சப்படும் அளவுக்கு உங்கள் கவர்ச்சிப்படங்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன பத்மப்ரியா .... .


Venkatesh Lakshminarayanan
செப் 04, 2024 10:51

appadi padam இருந்தால் அழைப்பீர்களா ? முறையா? அடக்க முடியவில்லை என்றால் வேறு வழிகள் இருக்கு


Venkatesh Lakshminarayanan
செப் 04, 2024 10:51

appadi padam இருந்தால் படுக்கைக்கு அழைப்பீர்களா ? முறையா?


vbs manian
செப் 04, 2024 09:18

தமிழ் பட உலகை பற்றி கமிட்டி அறிக்கை ஏதேனும் உண்டா .


Venkatesan
செப் 04, 2024 11:05

நம்ம கேள்வி படாத 4 பேர் பெரு வெளில வரும் அம்புட்டுதேன். நமக்கே தெரிஞ்ச உட்டாலக்கடி வேல பாத்த யாரும் அதுல இருக்க மாட்டாங்க. கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி ஸ்ரீ ரெட்டி இதே குற்றச்சாட்டை தெலுகு பட உலகிலும் பல தமிழ் நடிகர்கள் மேலயும் வச்சாங்க ? என்ன நடந்தது ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. எதுவும் நடக்காதுன்னு தப்பு பண்ணறவனுக்கு நல்லா தெரியும்.


panneer selvam
செப் 04, 2024 18:14

Tamil cine field is filled with holiest people as they mind own business . Their objective is only to become Chief Minister if not make enough money for next two generations by hook or crook.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை