உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அம்மாடியோவ்... அரண்மனை ஹோட்டல்களில் புத்தாண்டு கட்டணம் எப்படின்னு பாருங்க...!

அம்மாடியோவ்... அரண்மனை ஹோட்டல்களில் புத்தாண்டு கட்டணம் எப்படின்னு பாருங்க...!

புதுடில்லி: பிரபல ஹோட்டல்களில் ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாடுவதற்கான கட்டணம் விவரம் வெளியாகி, மலைப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம், இன்று மாலை களை கட்டத் தொடங்கும். நாளை அதிகாலை வரை இடைவிடாத கொண்டாட்டம் இருக்கும். வசதி படைத்தவர்கள், ஹோட்டல்களில் அறைகள் புக் செய்து, கொண்டாடுவது வழக்கம். இதனால் டில்லி மற்றும் மும்பையில் உள்ள ஆடம்பர ஹோட்டல்கள் , கடற்கரை ரிசார்ட்டுகளின் புத்தாண்டு கொண்டாட்ட கட்டணம் தாறுமாறாக உயர்ந்துள்ளது.காசு ஒரு பக்கம் அதிகமாக இருந்தாலும், நட்சத்திர ஹோட்டல்களிலும், அரண்மனை ஹோட்டல்களிலும் தங்கி புத்தாண்டை கொண்டாடவே மக்கள் விரும்புகின்றனர். இந்த சூழலிலும் இந்தியாவில் 'டாப்' 10 புத்தாண்டு கட்டணம் கொண்ட ஹோட்டல்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.அதன் விபரம் பின்வருமாறு:* தாஜ் ஏரி அரண்மனை 1ம் இடத்தில் உள்ளது. இந்த ஹோட்டல் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ளது. இங்கு 2 பெரியவர்களுக்கு காலை உணவுடன் கட்டணம் ரூ.14,27,000* தாஜ் பேலஸ் ஹோட்டல் 2ம் இடத்தில் உள்ளது. இது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அமைந்துள்ளது. இங்கு 2 பெரியவர்களுக்கு காலை உணவுடன் கட்டணம் ரூ. 4,10,000* ஓபராய் உடை விலாஸ் ரிசார்ட் 3ம் இடத்தில் உள்ளது. இது ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அமைந்துள்ளது. இந்த ரிசார்ட் 50 ஏக்கர் பரப்பரபளவைக் கொண்டுள்ளது. இங்கு 2 பெரியவர்களுக்கு காலை உணவுடன் கட்டணம் ரூ.4,67,000 (இரண்டு தினங்களுக்கு மட்டும்)* உமைத் பவன் அரண்மனை 4ம் இடத்தில் உள்ளது. இது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அமைந்துள்ளது. இங்கு 2 பெரியவர்களுக்கு காலை உணவுடன் கட்டணம் ரூ.10,17,120* லீலா அரண்மனை கோவளம் 5ம் இடத்தில் உள்ளது. இது கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. இங்கு 2 பெரியவர்களுக்கு காலை உணவுடன் கட்டணம் ரூ.2,75,440* தாஜ்மஹால் அரண்மனை 6ம் இடத்தில் உள்ளது இது மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அமைந்துள்ளது. இங்கு 2 பெரியவர்களுக்கு காலை உணவுடன் கட்டணம் ரூ.1,27,440* ஓபராய் அமர்விலாஸ் ஹோட்டல் 7ம் இடத்தில் உள்ளது. இது உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ளது. இங்கு 2 பெரியவர்களுக்கு காலை உணவுடன் கட்டணம் ரூ. 8,40,000* ஓபராய் ராஜ்விலாஸ் ஹோட்டல் 8ம் இடத்தில் உள்ளது. இது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அமைந்துள்ளது. இங்கு 2 பெரியவர்களுக்கு காலை உணவுடன் கட்டணம் ரூ. 1,29,800.* தாஜ் பலக்னுமா அரண்மனை 9ம் இடத்தில் உள்ளது. இது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அமைந்துள்ளது. இங்கு 2 பெரியவர்களுக்கு காலை உணவுடன் கட்டணம் ரூ. 7,08,000* ஓபராய் வன்யா விலாஸ் 10ம் இடத்தில் உள்ளது. இது ராஜஸ்தான் மாநிலம் ரன்தம்போர் இடத்தில் அமைந்துள்ளது. இங்கு 2 பெரியவர்களுக்கு காலை உணவுடன் கட்டணம் ரூ1,98,000


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Matt P
ஜன 01, 2025 00:03

அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வருபவர்கள் கூட இவ்வளவு பணம் கொடுத்து வாழ்க்கையை அனுபவிப்பார்களா என்றால் சந்தேகம் தான். இந்தியாவில் திருட்டு தனமா எளிதில் சமபாதிப்பவர்கள் தான் இப்படி செலவழிக்க முடியும். அதுவும் அரசியல்வாதிகள் தான். உண்மையா உழைத்து சம்பாதிப்பவர்கள் சிந்தித்து தஆன் செயல்படுவார்கள்.


Matt P
ஜன 01, 2025 00:03

அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வருபவர்கள் கூட இவ்வளவு பணம் கொடுத்து வாழ்க்கையை அனுபவிப்பார்களா என்றால் சந்தேகம் தான். இந்தியாவில் திருட்டு தனமா எளிதில் சமபாதிப்பவர்கள் தான் இப்படி செலவழிக்க முடியும். அதுவும் அரசியல்வாதிகள் தான். உண்மையா உழைத்து சம்பாதிப்பவர்கள் சிந்தித்து தஆன் செயல்படுவார்கள்.


rama adhavan
டிச 31, 2024 20:07

புத்தாண்டு என்பதே போலி. அந்நிய கலாச்சாரம். இனி நமது பாரம்பரிய புத்தாண்டு தொடக்க நாளை நமது வீட்டில், நமது சுற்றம், நட்புகளுடன் நமது கலாச்சார முறைப்படி மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். அதுவே நமக்கும் நமது நாட்டுக்கும் சிறப்பு.


rama adhavan
டிச 31, 2024 20:01

இந்த கட்டணத்தில் எத்தனை ஏழை மக்களுக்கு, குழந்தைகளுக்கு உணவு, உடை, படிப்பு, மருத்துவ உதவி வழங்க முடியும். எதற்கு இந்த ஆடம்பர செலவு. சிந்தியுங்கள் வாசகர்களே.


Kasimani Baskaran
டிச 31, 2024 17:50

காலை உணவுடன் ஒரு இரவு தங்குவதற்கான கட்டணம்.


அப்பாவி
டிச 31, 2024 16:49

ஜீ ஐ வெச்சு சம்பாரிச்சவங்க மட்டுமே போகமுடியும்.


Palanisamy Sekar
டிச 31, 2024 15:59

இந்திய மக்களின் பொருளாதார வளர்ச்சி அபாரமானது, நினைத்துக்கூட பார்க்க முடியாதது. வறுமை என்பது கிட்டத்தட்ட இல்லாமலே போய்விட்டது. வேறு நாட்டில் கூட இந்த அளவுக்கு கொண்டாட்ட கட்டணங்கள் இருக்க முடியாது போல. சூப்பர்.


அப்பாவி
டிச 31, 2024 18:21

ஆமாமா. நான் கூட ரெண்டு ரூம் போட்டிருக்கேன். அந்த பாஞ்சி லட்சத்த வெச்சுதான்.


MARI KUMAR
டிச 31, 2024 15:56

பணம் பத்து செய்யும் பணம் இல்லாதவங்களை வச்சு செய்யும் இதுக்கு இதுதான் ஒரு உதாரணம்


MARI KUMAR
டிச 31, 2024 15:56

விலைய பார்த்தாலே நெஞ்சு வலிக்குது


Svs Yaadum oore
டிச 31, 2024 15:52

இந்த விலையெல்லாம் சாதாரண தமிழனுங்களுக்குதான் மலைப்பு ........ஆனால் விடியல் திராவிடனுங்களுக்கு இதெல்லாம் பிச்சை காசு ....அவனுங்களுக்குத்தான் இந்த கொண்டாட்டம் ....


தமிழன்
டிச 31, 2024 18:22

ஆரியனாகிய நீ ,ஒரு நாளைக்கு எங்க தமிழர்களை ஒரு ஆயிரம் முறை நினைப்பாயா???? பாவம் இது உன் பூர்வ ஜென்ம பாவம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை