உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 170 கி.மீ., ஆன்மிக பாத யாத்திரையை நிறைவு செய்தார் அனந்த் அம்பானி!

170 கி.மீ., ஆன்மிக பாத யாத்திரையை நிறைவு செய்தார் அனந்த் அம்பானி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துவாரகா: தமது 170 கி.மீ., பாத யாத்திரையை அனந்த் அம்பானி இன்று துவாரகாவில் நிறைவு செய்தார்.உலக பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரும்,ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவருமான முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி. இவர் தமது 30வது பிறந்த நாளை முன்னிட்டு குஜராத் மாநிலம் ஜாம் நகரில் இருந்து 170 கி.மீ., ஆன்மிக பாத யாத்திரை மேற்கொண்டார். இந்த பயணம், ஜாம் நகரில் இருந்து துவாரகாதீஷ் கோவிலுக்கு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டு இருந்தது. கடந்த மார்ச் 29ம் தேதி தனது பாதயாத்திரையை அனந்த் அம்பானி தொடங்கினார். தினமும் 12 கி.மீ., முதல் 15 கி.மீ., வரை நடந்தார். பெரும்பாலும் அவரின் பயணம் இரவு நேரங்களில் தான் இருந்தது.அனந்த் அம்பானியின் பாத யாத்திரை பயணம், இந்து நாட்காட்டியின் படி அவரது பிறந்த நாளான இன்று நிறைவு பெற்றது. ராமநவமி நாளான இன்று (ஏப்.6) துவாரகாதீஷ் கோவிலுக்கு சென்று பயணத்தை பூர்த்தி செய்தார். அங்கு அவரது தாயார் நீடா அம்பானி, மனைவி ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோர் அனந்த் அம்பானியை சந்தித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Iniyavan SK
ஏப் 07, 2025 11:40

நாட்டுக்கு ரொம்ப முக்கியம்


Apposthalan samlin
ஏப் 07, 2025 11:09

170 கிலோ மீட்டர் நடப்பதற்கு சாத்தியமே இல்லை ஸ்போர்ட்ஸ் man நடக்கலாம்


Barakat Ali
ஏப் 07, 2025 09:43

டாக்டர் வெயிட்டைக் குறைக்கச் சொல்லியிருப்பாரு .....


Sampath Kumar
ஏப் 07, 2025 09:13

இதுக்கு பேரு தான் ஸ்டண்ட் இவர் நடந்து வந்த பாதை வேண்டும் ஆனால் பள்ளம் ஆகி இருக்கலாம் இவரு டயீடை குறையாது இம்மாம் தூரத்தை நல்ல இருக்கிறவனே கடக்கவே இந்த நாட்கள் பாதத்தை இவரு கடந்து விட்டாராம் அதுவும் குறிகிய காலத்தில் போவியா


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஏப் 07, 2025 03:45

எந்த செய்திகளையும் தீர விசாரிக்காமல் கருத்துக்களை பதிவிடுவதில் சூரர்கள் நம் தமிழகத்தினர்..... ஜாம்நகரிலிருந்து - துவாரகீஸ் கோவிலின் தூரம் 140கிமி.....


V Venkatachalam
ஏப் 07, 2025 10:22

கோபாலகிருஷ்ணன் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. திருட்டு திராவிடனுங்க எதையும் முழுசா தெரிஞ்சுக்க மாட்டானுங்க.‌ ஆனா முந்திரி கொட்டை வேலையை செய்வானுங்க..


Mediagoons
ஏப் 06, 2025 22:16

இந்து மதவாத மூடர்களை ஏமாற்றி கொள்ளையடிக்கும் முயற்சி


M R Radha
ஏப் 07, 2025 05:22

சொரியார் மூட சிகாமணிகள் இத பத்தி கருத்து போடக் கூடாது, மிஸ்டர் கூன்ஸ்.


Muguntharajan
ஏப் 06, 2025 20:49

நம்புற மாதிரி இல்லையே. தினமும் 12-15 கி.மீ தூரம் 9 நாளில் எப்படி 170 கி.மீ கடக்க முடியும்? அதிகபட்சம் 9×15=135 கி.மீ தூரம் தான் வருகிறது. எதுக்கு இந்த ஏமாற்று வேலை?


Ramesh Sargam
ஏப் 06, 2025 20:35

என்னாதான் தான் ஒரு கோட்டீஸ்வரர் என்றாலும், அவருக்கு இருக்கும் பக்தி மிகவும் பாராட்டவேண்டிய விஷயம். சினிமா நட்சத்திரங்கள் பலர் ஒரு சில படங்களில் நடித்து, ஒரு சில கோடியை கண்டதும் ஆடுகிறார்கள் பாருங்கள் ஆட்டம், அப்பப்பா தாங்கமுடியாது.


டுபாக்கூர்
ஏப் 06, 2025 20:18

9 நாளில் தினமும் 12 முதல் 15km நடந்தால் எப்படி 170km நிறைவு செய்ய முடியும்?


V Venkatachalam
ஏப் 07, 2025 19:40

நிஜமான டுபாக்கூர் நீர் தான்.. கவுல் பிராமணன் ரவுளு பொழுது போகாம பாத யாத்திரை ன்னு ஒரு கூத்து கட்டியது மாதிரி இதையும் நினைச்சுட்டியே... டுபாக்கூர் க.உ.பி..


மீனவ நண்பன்
ஏப் 06, 2025 19:57

கலியாணம் பண்ணியும் பிரம்மச்சரியம்


Mypron
ஏப் 07, 2025 09:20

இது ஆன்மீகம், பிரம்மச்சர்யம் இல்லை


சமீபத்திய செய்தி