உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லேயின் ஹைடு அண்டு சீக் குக்கீஸ் விளம்பர துாதராக அனன்யா பாண்டே

பார்லேயின் ஹைடு அண்டு சீக் குக்கீஸ் விளம்பர துாதராக அனன்யா பாண்டே

மும்பை:'பிஸ்கட் மற்றும் கன்பெக் ஷனரி' துறையில் முக்கிய இடத்தை பிடித்துள்ள பார்லே புராடக்ட்ஸ் நிறுவனம், தன் பிரீமியம், ஹைடு அண்டு சீக் குக்கீஸ் விளம்பர துாதராக, அனன்யா பாண்டேவை அறிவித்துள்ளது.'ஸ்டார்ட் யுவர் ஸ்டோரி' என்ற பெயரில் புதிய பிரசாரத்தை துவக்கியுள்ள பார்லே புராடக்ட்ஸ் நிறுவனம், அனன்யா பாண்டே மற்றும் லக் ஷ்யா இணைந்து நடித்துள்ள புதிய விளம்பரத்தையும் வெளியிட்டு உள்ளது.இதுகுறித்து, பார்லே புராடக்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் மாயங்க் ஷா கூறும் போது, ''ஹைடு அண்டு சீக் குடும்பத்திற்குள் அனன்யா பாண்டே மற்றும் லக் ஷ்யா ஜோடியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இருவரிடமும் இருக்கும் இளமை ததும்பும் சக்தி, அழகு, வலுவான பிணைப்பு போன்றவை, எங்கள் பிராண்டுக்கு வெற்றி தரும் ஜோடியாக அமையும்,'' என்றார்.'ரீடிப்யூஷன் பிராண்ட் சொல்யூஷன்ஸ்' விளம்பர நிறுவனத்தின் கிரியேட்டிவ் இயக்குநர் பிரமோத் சக்சேனா, ''பார்லேயின் ஹைடு அண்டு சீக் குக்கீஸ், எப்போதுமே பெஞ்ச்மார்க் தான். ''அந்த குக்கீசின் விளம்பரம், சிறப்பாக அமைந்துள்ளது. இரண்டு சிறந்த நடிகர்களான அனன்யா பாண்டே மற்றும் லக் ஷ்யா ஜோடியால் ஹைடு அண்டு சீக் புதிய சிகரத்தை அடையும் என நம்புகிறோம்,'' என்றார்.அனன்யா பாண்டே கூறும் போது, ''நான் எப்போதுமே ஹைடு அண்டு சீக் குக்கீஸ்களை தான் விரும்பி சாப்பிடுவேன். இப்போது அந்த புராடக்ட்டிற்கான விளம்பர படத்தில் நானே நடித்துள்ளேன். அது, என்னை புல்லரிக்க வைத்துள்ளது,'' என்றார்.அதுபோல, நடிகர் லக் ஷ்யா கூறும் போது, ''ஹைடு அண்டு சீக்கின், ஸ்டார்ட் யுவர் ஸ்டோரி பிரசாரத்தில் பங்கெடுப்பது எனக்கு ஒருவித புதிய அனுபவத்தை கொடுத்துள்ளது. ''மகிழ்ச்சியான தருணங்களுக்கான அந்த குக்கீஸ் விளம்பரத்திற்காக, அனன்யா பாண்டேயுடன் இணைந்து நடித்துள்ளது எனக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்துள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை