உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசின் அமுதசுரபி ஆகிறது அந்தமான்; துவங்கியது மத்திய அரசின் எரிவாயு தேடல்

அரசின் அமுதசுரபி ஆகிறது அந்தமான்; துவங்கியது மத்திய அரசின் எரிவாயு தேடல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அந்தமானை பாருங்கள் அழகு... என அந்த அழகிய தீவை எட்டியிருந்து அரசு பார்த்து வந்த நிலை மாறிவிட்டது. மாறாக, அந்தமான் நிகோபார் தீவுகளை, இந்திய எரிசக்தி தேவையில் முக்கிய பங்களிக்கக்கூடிய முன்னணி இடமாக மாற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.நாட்டின் எரிசக்தி தேவையில், பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் நிலையை மாற்ற, அந்தமானின் ஆழ்கடல் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தேடலில் அரசு இறங்கியிருக்கிறது. இதற்காக, ஓ.என்.ஜி.சி., நிறுவனம், எண்ணெய் மற்றும் எரிவாயுவை கண்டுபிடித்து வெளிக்கொண்டு வர, ஆழ்துளையிடும் பணியை துவங்கியிருக்கிறது.ஆசியான் நாடுகள் மொத்த எரிசக்தி தேவையில் ஓரளவை சமாளித்து, இறக்குமதி செலவை குறைப்பது மட்டுமின்றி, துாய்மையான எரிசக்தி உற்பத்தியில் தன் உறுதியை உலகுக்கு நிலைநாட்டவும் அந்தமானை ஆர்வத்துடன் பார்க்கிறது அரசு. ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்புடன் இணைந்து, மாசுபடுத்தும் நிலக்கரி மின்சார உற்பத்தியில் இருந்து திரவநிலை இயற்கை எரிவாயுவான எல்.என்.ஜி., மற்றும் ஹைட்ரஜன் ஆகிய எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்க இந்தியா விரும்புகிறது.இதில், உள்நாட்டு கவனம் மட்டுமின்றி, தென்கிழக்கு ஆசியாவில் தன்னை துாய எரிசக்தி கூட்டாளியாக நிலை நிறுத்தும் நோக்கத்தை நிறைவேற்ற தீவிரம் காட்டுகிறது. நிலக்கரி மின்சாரத்தை கைவிட இயலாத ஆசியான் மண்டலத்தில், அந்தமான் கடல் பகுதியில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு படிமத்தை, அவசியமான எரிசக்திக்கு பாலமாக இந்தியா பயன்படுத்த வாய்ப்புள்ளது.இது, ஆசியான் நாடுகளின் எரிசக்தி பரவலாக்கலுக்கு மட்டுமின்றி; கிழக்கு நாடுகள் மீதான கொள்கை மற்றும் மண்டல ஒருங்கிணைப்பில் தன் நோக்கத்தை இந்தியா அடையவும் ஆதரவாக அமையும். பிரகாசமான எதிர்காலம் கொரோனா காலத்துக்கு பின் மாறியுள்ள பொருளாதார மாற்றங்களால், ஏசியானின் ஜி.டி.பி., 3 சதவீதம் சரிவு கண்டுள்ளது. 2022ல் ஆசியான் நாடுகளின் எரிசக்தி பயன்பாடு, 15.20 சதவீதம் அதிகரித்து 43.20 கோடி டன்களானது.2023ல் பெரும்பாலான ஆசியான் நாடுகள், இயற்கை எரிவாயு இறக்குமதியை அதிகரித்ததால், ஏற்றுமதி 13 சதவீதம் சரிந்தது. 2027ல் ஆசியான் நாடுகளின் எரிவாயு ஏற்றுமதி முற்றிலும் நின்று போய், இறக்குமதி நாடுகளாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் தென்கிழக்கு ஆசியாவின் எரிசக்தி தேவை, உலகின் மொத்த தேவையில் 25 சதவீதமாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மியான்மர், வங்கதேசம் நாடுகளுக்கு, திரிபுரா வழியாக குழாய் வாயிலாக என்.எல்.ஜி., வினியோகிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதனால், என்.எல்.ஜி., ஏற்றுமதியில் முன்னணி நாடாக இந்தியா உருவாகும். வியட்னாம், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகியவையும் நிலக்கரியில் இருந்து, சுற்றுச்சூழலுக்கு ஆதரவான எரிசக்திக்கு மாற விரும்புவதால், இந்தியாவுக்கான எதிர்காலம் பிரகாசமாக அந்தமான் துரப்பண பணிகள் கைகொடுக்கும்.நம்பிக்கை முயற்சி அந்தமான் கடல் பகுதியில் இந்தியாவின் எண்ணெய் தேடல் இன்று, நேற்றல்ல; 1980களிலேயே 'இந்திரசாஸ்த்ரா' என்ற பெயரில் துவங்கியது. அப்போதே, 1.80 லட்சம் கியூபிக் மீட்டர் அளவுக்கு இயற்கை எரிவாயு கிடைத்ததாக கூறப்படுகிறது. அதன்பின், 2016ல் 'ஹைட்ரோகார்பன் எக்ஸ்புளோரேஷன் அண்டு லைசென்சிங் பாலிசி' சுருக்கமாக 'ஹெல்ப்' என்ற பெயரில் மீண்டும் தேடல் துவங்கியது.கயானாவின் கச்சா எண்ணெய் தேடலுக்கு கிடைத்த வெற்றியுடன் இதை ஒப்பிட்டுள்ள பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, இந்தியாவின் 80 சதவீத கச்சா எண்ணெய், 50 சதவீத இயற்கை எரிவாயு இறக்குமதியை குறைக்கக்கூடிய அளவில், 1.84 லட்சம் கோடி லிட்டர் கச்சா எண்ணெய், அந்தமான் கடல் பகுதியில் கிடைக்கக்கூடும் என்றார். நம்பிக்கை தரும் இந்த முயற்சியை துவங்க, ஏன் இவ்வளவு காலதாமதம் என அவர் கேள்வி எழுப்பினார்.உள்நாட்டின் எரிசக்தி தேவை கணிசமாக அதிகரிப்பதை சமாளிக்கவும், அந்தமானின் பங்களிப்பு உதவும். நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதுடன், தன் ராஜாங்கரீதியான கூட்டணியை விரிவுபடுத்தவும், எரிசக்தி ஏற்றுமதியில் கணிசமான வருவாய் ஈட்டுவதன் வாயிலாக, கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி செலவை குறைக்கவும், அந்தமானை அமுதசுரபியாக பயன்படுத்த திட்டமிடுகிறது மத்திய அரசு.துாய்மையான எரிசக்தி உற்பத்தியில் தன் உறுதியை உலகுக்கு நிலைநாட்ட திட்டமிடுகிறது அரசு. அந்தமான் கடல் பகுதியில் இந்தியாவின் எண்ணெய் தேடல் இன்று, நேற்றல்ல; 1980களிலேயே 'இந்திரசாஸ்த்ரா' என்ற பெயரில் துவங்கியது. அப்போதே, 1.80 லட்சம் கியூபிக் மீட்டர் அளவுக்கு இயற்கை எரிவாயு கிடைத்ததாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Varadarajan Nagarajan
ஆக 24, 2025 15:18

எண்ணை எரிவாயு தேடுதல் மற்றும் உற்பத்தியில் புதிய உத்திகளை புகுத்தவேண்டியது மிக மிக அவசியம். தற்பொழுதுள்ள தொழில்நுட்பத்தில் நமது எண்ணை நிறுவனங்களின் வெற்றி விகிதம் மேலைநாடுகளை ஒப்பிடும்போது மிக குறைவாக உள்ளது. உதாரணத்திற்கு 10 கிணறுகளை தோண்டினால் அவற்றில் எத்தனை கிணறுகள் உற்பத்திசெய்யக்கூடியவையாக உள்ளது. மற்றொன்று அப்படி உற்பத்திசெய்க்கூடிய கிணறுகளிலிருந்து எஸ்டிமேட் செய்யப்பட்ட அளவிற்கும் உண்மையாக கிடைக்கக்கூடிய அளவிற்கும் இடைப்பட்ட நஷ்ட்டம் போன்றவைகளில் மிகுந்த வித்யாசம் உள்ளது. கடந்தகாலங்களில் உள்ள கிருஷ்ணா கோதாவரி, ஹஸீரா, அசாம் படுகைகளின் புள்ளிவிவரங்களை ஆராய்ந்தால் இவை விளங்கும். எனவே தற்பொழுதுள்ள தொழில்நுட்பத்தை மேம்படுத்தவேண்டியது மிக மிக அவசியம். இல்லையேல் முதலீடுகள் விரயம்தான் ஆகும்


ராஜா
ஆக 24, 2025 11:44

எவ்வளவு எரிபொருள் இறக்குமதி செய்தாலும் உற்பத்தி செய்தாலும் அதனால் ஏற்படும் பயன்கள் அந்த அந்த மாநிலங்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது , மற்ற மாநிலங்களுக்கு உபயோகமாக இருக்க வாய்ப்பில்லை அய்யா


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 24, 2025 11:57

அப்படியென்றால் ஜார்க்கண்ட், ஒரிசா நிலக்கரி, அசாம், மகாராஷ்டிரா பெட்ரோல், அரேபியா, ஈரான், ரஷ்யா எண்ணெய்லாம் எப்படி தமிழகம் வருகிறது? கிடைக்கும் அளவில் பகிர்ந்து கொள்வதுதான் நாட்டிற்கு அழகு. எல்லாம் எனக்கே என்ற சுயநலன் அழிவையே தரும்.


PR Makudeswaran
ஆக 24, 2025 14:04

இந்த கருத்து தவறு என அபிப்பிராயப்படுகிறேன்.


G Mahalingam
ஆக 24, 2025 10:06

இறக்குமதி செய்து செய்து டாலர் மதிப்பு இப்போது 90 ரூபாயாக இருக்கு. இறக்குமதியை குறைப்பதற்கு உள் நாட்டு உற்பத்தி தேவை படுகிறது. இந்தியா சொந்த காலில் நிற்பதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பிடிக்க வில்லை. அமெரிக்க நேரடியாக அதிக வரிவிதிப்பு மூலமாக எதிர்க்கிறது.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 24, 2025 10:05

நமது காவிரிப் படுகையில் ஒரு ஆயிரம் ஏக்கர் ஒதுக்கி, மீத்தேன் எடுப்பதில் கவனம் செலுத்தலாம். எளிதான செயல். கட்டுமர விஷநரி கும்பலை கட்டங்கட்டும் வேலையை முடித்தால் எளிதில், விரைவில் சாதிக்கலாம்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 24, 2025 10:02

அரச மரத்தை சுற்றிவந்து அடிவயிற்றை தொட்டுப் பார்த்த கதை. இன்னும் ஆரம்பிக்கவே இல்லை அதற்குள் ஆசியான் கூட்டணிக்கு அச்சாரம் போடும் கற்பனைப் புனைவு. முதலில் கண்டு பிடிக்கட்டும். பின்னர் உற்பத்தி துவங்கட்டும். பின்னர் கூட்டணி, பிரியாணி எல்லாம் தானே வரும்.


Jack
ஆக 24, 2025 10:09

கருமமே கண்ணாயினார் மாதிரி பாலு ஜகத் தாயாருக்கும் மதுவை விற்கும் பணியில் ஸ்டாலின் அரசு ..


ஆரூர் ரங்
ஆக 24, 2025 09:30

உல்லாச வாழ்க்கைக்காக ஏராளமான எரிபொருட்களை பயன்படுத்துவதைக் குறைத்தால் இது போன்ற திட்டங்கள் தேவைப்படாது. மினிமலிஸம் மட்டுமே அடுத்த தலைமுறைகளை பிழைக்க வைக்கும். . ஆனால் இதெல்லாம் இன்றைய தலைமுறைக்கு வேப்பங்காயாக கசக்கும்.


pmsamy
ஆக 24, 2025 08:54

பூமியை சுரண்டுவது தற்கொலைக்கு சமம் பேரழிவுக்கு வழிவகுக்கும்


Pandi Muni
ஆக 24, 2025 09:19

அதை மத்த நாட்டுக்காரன்கிட்ட போய் சொல்லு. நாம மட்டும் என்ன மாட்டு வண்டியிலயா பயணிக்க முடியும் இல்ல விறகடுப்பிலேயே சாகணுமா


ஆரூர் ரங்
ஆக 24, 2025 09:26

அப்போ கடக்கால் அஸ்திவாரம் போடாம வீடு கட்டுங்கள். போர்வேல் நீரைப் பயன்படுத்தகூடாது. மெட்டல் பொருட்களை வாங்காதீர்கள். முடிஞ்சா வனவாசம் போங்க.


Jack
ஆக 24, 2025 10:13

நதியை சுரண்டி மணல் அள்ளுவது மலைகளை வெட்டி க்ராநைட் சுரண்டவது நிலங்களை வெட்டி கனிம வளங்களை சுரண்டுவது திராவிட கலாச்சாரம்


vivek
ஆக 24, 2025 10:20

ஆற்று மணலை கொள்ளையடிப்பது போலவா


Raghavan
ஆக 24, 2025 08:18

பாராட்டப்படவேண்டிய செயல். பெட்ரோலிய இறக்குமதியை வெகுவாக குறைக்க வாய்ப்புள்ளது. மேலும் நிலக்கரி மின்சார உற்பத்தி சுற்று சூழலுக்கு கெடுவிளைவிக்கிறது. எரி வாயு மற்றும் ஹைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் மின்சார உற்பத்தியில் சுற்று சூழலுக்கு எந்தவிதமான தீங்குகளும் இல்லை.


முக்கிய வீடியோ