ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
அமராவதி : ஆந்திரா மதுபான ஊழல் மோசடி விவகாரத்தில் நடிகை தமன்னாவின் பெயரும் அடிபடுகிறது. இதில் அவரும் விசாரணை வளையத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழகத்தில் டாஸ்மாக்கில் நடந்த ஊழல் புகார் தொடர்பாக நடந்த ரெய்டில் திரைப்பட துறையை சார்ந்த சிலரும் சிக்கினர். இதேப்போன்ற சம்பவம் தற்போது தெலுங்கு சினிமாவிலும் நடந்துள்ளது. ஆந்திராவில் 2019 முதல் 2024 வரை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்., ஆட்சி நடந்தது. அப்போது, மதுபான விற்பனையில், 3,500 கோடி ரூபாய் ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை கண்டுபிடித்து எப்ஐஆர் வழக்கு போட்டது யார் என்றால் நடிகை ரம்பாவின் சகோதரர் வெங்கடேஸ்வர ஸ்ரீனிவாசராவ். இவரோடு முகேஷ் குமார் என்ற ஐஏஎஸ் அதிகாரிகள் பலரும் இந்த குழுவில் உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4fwl5q1g&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0