உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண்கள் பணிபுரிய விரும்பும் மாநிலங்கள் முந்தியது ஆந்திரா; தமிழகத்திற்கு 4வது இடம்

பெண்கள் பணிபுரிய விரும்பும் மாநிலங்கள் முந்தியது ஆந்திரா; தமிழகத்திற்கு 4வது இடம்

புதுடில்லி : நம் நாட்டில் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிப்பதுடன், பணிபுரிய ஏற்ற மாநிலமாக ஆந்திரா முதலிடம் வகிக்கிறது. தனியார் அமைப்பு வெளியிட்ட இந்தப் பட்டியலில் தமிழகம், நான்காவது இடத்தைப் பிடித்து பின்னடைவை சந்தித்துள்ளது.சர்வதேச கல்வி மற்றும் திறனை அடையாளம் காணும், 'விபாக்ஸ்' என்ற தனியார் அமைப்பு, 'நம் நாட்டின் திறன்கள் - 2025' என்ற அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.இதில், நம் நாட்டில் பெண்களின் வேலைவாய்ப்பு, பணிபுரியும் இடம் உள்ளிட்டவற்றை பற்றிய ஆய்வு முடிவுகளை வெளியிட்டது.வேலைவாய்ப்பு இந்த ஆய்வில் பாலின சமத்துவம், தொழில் சார்ந்த வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட காரணிகள் பெண்களை ஈர்த்து வருவதால், கடந்த ஏழு ஆண்டுகளில் நம் நாட்டில் பெண்களின் வேலைவாய்ப்பு பன்மடங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்து உள்ளது.கடந்த 2019ல், 45.6 சதவீத பெண்கள் பணியாற்றி வந்த நிலையில், தற்போது 47.53 சதவீதமாக அதிகரித்துள்ளது.பணிபுரியும் பெண்கள் அதிகம் விரும்பும் மாநிலமாக ஆந்திரா திகழ்கிறது. அடுத்ததாக கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்கள் இடம்பிடித்துள்ளன. நான்காவது இடத்தில், தமிழகமும், ஐந்தாவது இடத்தில் மஹாராஷ்டிராவும் உள்ளன. கர்நாடகா, எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.இந்த தரவரிசை, அந்தந்த மாநிலங்களின் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பிரதிபலிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.அளவீடு இந்த ஆய்வில், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் நிலவும் பாதுகாப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில் வளர்ச்சி ஆகியவை வாய்ப்புகளின் அடிப்படையில் பெண்களை கவரும் வகையில் அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது என்பதை ஓர் அளவீடாக மட்டும் பார்க்கக்கூடாது எனவும், இது அந்தந்த மாநிலங்களின் அணுகு முறை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிரதிபலிக்கும்.இதுதவிர, பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பதன் வாயிலாக, நம் நாட்டின் தொழில்முறை எதிர்காலத்தை வடிவமைக்கும் இடத்தின் அடையாளங்களாக, இந்த மாநிலங்கள் தனித்து நிற்பதாகவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.முதல் 10 மாநிலங்களின் பட்டியல்: ஆந்திரா, கேரளா, குஜராத், தமிழகம், மஹாராஷ்டிரா, டில்லி, உ.பி., கர்நாடகா, ம.பி., ஹரியானா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை