உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அனில் அம்பானியை தொடர்ந்து மகன் ஜெய் அன்மோலுக்கு சிக்கல்; ரூ.1 கோடி அபராதம் விதித்தது செபி அமைப்பு

அனில் அம்பானியை தொடர்ந்து மகன் ஜெய் அன்மோலுக்கு சிக்கல்; ரூ.1 கோடி அபராதம் விதித்தது செபி அமைப்பு

புதுடில்லி: ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் இயக்குனர்களின் முடிவுக்கு மாறாக நிறுவன கடன்களுக்கு ஒப்புதல் அளித்த புகாரில், தொழில் அதிபர் அனில் அம்பானி மகன் ஜெய் அன்மோலுக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்து செபி அமைப்பு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.சமீபத்தில், முதலீட்டாளர்களின் நிதியை அனில் அம்பானி தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, இந்திய பங்கு சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் செபி அமைப்பு தடை விதித்தது. அனில் அம்பானிக்கு ரூ.25 கோடி அபராதமும், அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு ரூ.6 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது.இந்நிலையில், இன்று(செப்.,24) ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் இயக்குனர்களின் முடிவுக்கு மாறாக நிறுவன கடன்களுக்கு ஒப்புதல் அளித்த புகாரில், தொழில் அதிபர் அனில் அம்பானி மகன் ஜெய் அன்மோலுக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்து செபி அமைப்பு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. ரூ.1கோடி அபராதத்தை 45 நாட்களுக்குள் ஜெய் அன்மோல் அம்பானி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ