உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அன்னம்மாள் கோவில் 5ம் ஆண்டு திருவிழா

அன்னம்மாள் கோவில் 5ம் ஆண்டு திருவிழா

ஸ்ரீராமபுரம்; ஸ்ரீராமபுரத்தில் அன்னம்மாள் கோவில் ஐந்தாம் ஆண்டு திருவிழா இன்று முதல் பிப்., 2ம் தேதி வரை நடக்கிறது.பெங்களூரு ஸ்ரீராமபுரம் ராமகிருஷ்ணா சேவா நகரில் அமைந்து உள்ளது அன்னம்மாள் கோவில். இக்கோவிலில் 5ம் ஆண்டு திருவிழா, இன்று துவங்குகிறது.இன்று காலை 9:00 மணிக்கு மஹா கணபதி, நவக்கிரஹம், மிருதுஞ்செய ஹோமம், துர்கா தேவி ஹோமம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு சென்னை 'வரதா மாஸ்டர்' குழுவினரின் கலை நிகழ்ச்சி நடக்கிறது.நாளை (பிப்., 1ம் தேதி) மதியம் 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. கோவில் சார்பில் பொங்கல் திருவிழாவில், பல்வேறு நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.பிப்., 2ம் தேதி மாலை 4:00 மணிக்கு பூப்பல்லக்கில் அம்மன் ஊர்வலம், முக்கிய வீதிகளில் நடக்கிறது. இதில், சிலம்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உட்பட பல வாத்தியங்களுடன் ஊர்வலம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, ஹரிஷ், சதீஷ், ஜோசப் மற்றும் நண்பர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை