உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயில் டிக்கெட்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ.56,993 கோடி மானியம்; அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

ரயில் டிக்கெட்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ.56,993 கோடி மானியம்; அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

புதுடில்லி: ரயில் டிக்கெட்டுகளுக்கு ஆண்டுதோறும் ரூ.56,993 கோடி மானியம் வழங்கப்படுவதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது, ரயில்வே துறை குறித்து எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்களில் பயணிக்க டிக்கெட் பெறுபவர்களுக்கு ரயில்வே துறை மூலம் ஆண்டுக்கு ரூ.56,993 கோடி மானியம் வழங்கப்படுகிறது. அதாவது, ஒரு டிக்கெட்டின் விலை ரூ.100 என்றால், அதில் ரூ.54 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எஞ்சிய ரூ.46 தள்ளுபடி செய்யப்படுகிறது. பூஜ் மற்றும் அகமதாபாத் இடையே நமோ பாரத் ரேபிட் ரயில் சேவை ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. சிறப்பான சேவையினால், பயணிகள் ரொம்ப திருப்தியடைந்துள்ளனர், எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

RAMAKRISHNAN NATESAN
டிச 04, 2024 19:08

ஒரு டிக்கெட்டின் விலை ரூ.100 என்றால், அதில் ரூ.54 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எஞ்சிய ரூ.46 தள்ளுபடி செய்யப்படுகிறது. ....... இருக்கலாம் ....... இது அரசின் புள்ளி விபரம் ..... அதற்குத் தகுந்த தரம் கூட பயணிகளுக்கு ரெயில்வே வழங்கும் சேவையில் இல்லையே ????


V Gopalan
டிச 04, 2024 16:57

Instead of running Vande Bharat train, where the occupancy is not full, at least 10 to 20% seats are vacant. Instead, can run Mail, Fast Passenger trains which will be affordable for the middle class to below poverty. Train full of cockroaches, there is no hand wash, besides in the toilet no proper faucet in the III AC and not to speak about the sleeper and general coaches. When the complaint was made to TTE, just ignored. both the directions from KSR Bengaluru to Cuddalore Port Even in the sleeper class, lot of cockroaches, no water in toilet. The linen especially blanket supplied in 3rd AC is full of stench unbearable. Railway Minister cannot inspect the trains, what about the concerned General Managers and his sub-ordinates? The worst service is being experienced. Better to convert all passenger trains into goods wagon.


முக்கிய வீடியோ