வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இது கார் வைத்திருப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும்
மிகவும் அற்புதமான திட்டம். இவ்வளவு கம்மியான விலையில் வருடாந்திர அனுமதி உலகில் எங்குமே கிடையாது. உலகத்திற்கே இந்தியா எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஆனால் இதைவிட பெட்டெர் ஐடியா உள்ளது. ஒவ்வொரு கார் ஓனரும் வருடா வருடம் ஆயிரம் ரூபாய் சொத்து வரி கட்ட வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால், அனாவசிய சுங்கச்சாவடிகள், அதற்கு பாஸ் தேவை படாது.
எங்கள் பகுதியில் 8 மாதங்களாக குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருகிறது. அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. டாங்கர் நீர் வாங்கும் நிலைமை. ஆனாலும் குடிநீர் வரி, கட்டணம் வசூலிக்கிறார்கள். இது சுங்கச் சாவடி மோசடியைவிட அநியாயம்.
மேலை நாடுகளில் சுங்கம் வசூலித்தாலும், அருகே வாகனங்கள் நிறுத்த வசதி தூய கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, எரிபொருள் வசதி என அனைத்தும் இருக்கிறது கட்டணமும் குறைவே ஆனால் இந்தியாவில் அப்படியில்லை வரிகள், அதற்கு அதிகமாக சேவைக்கட்டணம் எனக் காட்டினாலும் சுங்கக் கட்டணமும் காட்டுகிறோம் அதுவும் அதிகம். எதெதற்கெல்லாம் எதிராக ஆங்கிலேயரிடம் போராடினோமோ அவை அனைத்துக்கும் கப்பம் காட்டுகிறோம் .
தினமும் தேசிய நெடுஞ்சாலை , மின் விளக்கு, மரங்கள் பாலங்கள் பராமரிப்பு அவசியம். சுங்க வரி வசூலும் அவசியம். நிர்வாக செலவு, நிர்வாக குறையை சரிசெய்ய வேண்டும். ஆண்டுக்கு 3 ஆயிரம் கட்டணத்தில் கார் பாஸ். 200 நாளா ?முறையா. ? சுங்க சாவடியா. ?மாநிலங்கள் வாகன பதிவு கட்டணம் மட்டும் வசூல். மாநில சாலைகள் படு மோசம். சாலை வரி வசூல் மாநிலங்கள் நிறுத்த வேண்டும். அல்லது மாநில சாலை மேம்படுத்தி கட்டணம் வசூலிக்க வேண்டும். லாரி, டிரக்குகள், பஸ் போன்றவை நீண்ட தூரம் செல்வதால், மத்திய அரசு மட்டும் பதிவு செய்ய வேண்டும்.
வண்டி வாங்கும்போது சாலை வரி எதற்காக ? சுங்கவரி இல்லாத சாலைகளுக்கா ??
நான் தமிழகம் முழுதும் பயணித்து வருகிறேன். மதுரை – துாத்துக்குடி போன்ற ஓரிரு ரோடுகள் தவிர மற்ற டோல் ரோடுகள் அனைத்துமே சிறப்பாக உள்ளன. ஆனால் பரமக்குடி – ராமநாதபுரம் போன்ற ஒரு சில இடங்களில் இரட்டை ரோட்டுக்கும் டோல் வசூலிப்பது ஏற்கக்கூடியதாக இல்லை.
All toll gates , which have completed contact tenure shall be closed forthwith.
இப்பொழுது மாதம் 350 ரூபாய்க்கு அன்லிமிடெட் முறையில் பயணிக்கலாம். இது வெறும் 5.8 ரூபாய்தான். புதிய திட்டம் புதிய கொள்ளை.
சுங்கச்சாவடி மற்றும் அதில் நடக்கும் மகா ஃப்ராடுகள் பற்றிய எனது அனுபவம். தயவுசெய்து வெளியிட கேட்டுக்கொள்கிறேன். மற்றவர்களுக்கு உபயோக தகவலாகும். சமீபத்தில் என் புதிய காரில் சென்னையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் பயணித்தேன். முதலில் பரனூர் அடுத்ததா திண்டிவனம் இரண்டு இடத்திலும் ஃபாஸ்டேக் பணம் டெபிட் ஆகலை... சாவடியில் இருந்த நபர் சற்றே வெயிட் செய்து போபோன்னு சொல்லிட்டார். ஆனால் விக்ரவாண்டியில் பாச்சா பலிக்கலை... உங்க டேக் ப்ளாக் ஆகியிருக்குன்னு அருகில் இருந்த பேங்க் முகவர்ட்ட அனுப்பி சரிபார்க்க சொன்னாங்க... இல்லைன்னா டபுள் சார்ஜ் கட்ட சொன்னாங்க... எனக்கும் அவசரம் இல்லாததால் ரிவர்ஸ் எடுத்து அங்கே நின்றிருந்த பேங்க் முகவர்ட்ட போனேன். அவர் சிஸ்டம் செக் பண்ணிட்டு நீங்க கார் வாங்கிய அறுபது நாட்களுக்குள் டேக் உடன் கார் ரிஜிஸ்டர் நம்பரை இனைக்கனும்...செய்யலை அதனால் பேலன்ஸ் இருந்தும் ப்ளாக் ஆகிவிட்டது என்றார். இது கார் வாங்கும் போது ஃபாஸ்டேக் சப்ளை சேர்த்து செய்த டீலர் தெரிவிக்கலை... நானும் செஞ்சிட்டேன்... அனைவரும் தெரிஞ்சிக்கங்க.. அடுத்ததா இம்பார்டண்ட் ஃப்ராடு மேட்டர். நான் அந்த முகவரிடம் பரணூர் மற்றும் திண்டிவனம் சாவடியில் எப்படி பாஸ் ஆனதுன்னு கேட்டதுக்கு அவர் சொன்னது... அந்த சாவடிகள் காண்ட்ராக்ட் முடிந்து வந்தவரை லாபம்னு இயங்குபவை... நீங்க வண்டி காசு குடுத்து நம்பர் போட்டு ரிசீப்ட் கேட்டால் போக சொல்லிடுவாங்கன்னார்.. உண்மைதான். அவர் மேலும் சொன்னது... விஷயம் தெரிஞ்சவங்க தென் மாவட்டங்களில் இருந்து வரும் போது விக்ரவாண்டி வரை மட்டுமே வர்ற மாதிரி ரீசார்ஜ் பண்ணிட்டு வருவாங்கலாம். இந்த இல்லீகல் கலெக்சன் எங்க யாருக்கு போகுதுன்னு தெர்ல... மக்களே உஷார். திரும்ப சொல்றேன் நான் கம்பெனியை குத்தமா சொல்லலை... அதனால் என் கருத்து முழுவதும் வரனும்... டீலா...