உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேலும் ஒரு இதய நோய் நிபுணர் மரணம்: தொடரும் மாரடைப்பு மரணங்களால் மருத்துவத்துறையினர் அதிர்ச்சி

மேலும் ஒரு இதய நோய் நிபுணர் மரணம்: தொடரும் மாரடைப்பு மரணங்களால் மருத்துவத்துறையினர் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுச்சேரி: சென்னையைச் சேர்ந்த மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த இதய நோய் மருத்துவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது மருத்துவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சமீபகாலங்களில் மாரடைப்பால் இறக்கும் மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில் பணிபுரிந்த, 39 வயது இதய நோய் சிறப்பு மருத்துவர் கிராட்லின் ராய், இதய நோயாளிக்கு சிகிச்சை அளிக்கச் சென்ற போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இது மருத்துவத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மாரடைப்பால் மருத்துவர்கள் உயிரிழப்பது அதிகரிப்பது குறித்தும், அதில் இருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றியும், மருத்துவர்களிடையே விவாதமே எழுந்தது. இந்த நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த 42 வயதே ஆன இதய நோய் நிபுணர் தேவன் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் மணக்குள விநாயகா மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்து மருத்துவர் பட்டம் பெற்றுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே வாரத்தில் இதய நோய் நிபுணர்கள் அடுத்தடுத்து மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் மருத்துவர்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Jeganathan Sundararajan
செப் 06, 2025 15:47

No rest. They behind money. If they run behind money. It will happen. They are working more than 15 hours. They dont spend time with their family. You require money, but money is not everything.


Jeganathan Sundararajan
செப் 06, 2025 15:44

எல்லாம் பணம் படுத்துகிறபடு நோ ரெஸ்ட். பணமா panam


Padmasridharan
செப் 05, 2025 13:43

கொரோனா தடுப்பூசிகள் எடுத்துள்ளனரா இவர்கள்..


mohan
செப் 02, 2025 06:32

எல்லாம் பணம் படுத்தும் பாடு. சுமார் எழுபது வருடங்களுக்கு முன்னர், டீ, காபி என்பது அவ்வளவாக கிடையாது. எல்லோரும், காலையில் எழுந்து புளித்த தண்ணீர் குடிப்பர். இது குடலுக்கும், ரத்த ஓட்டத்திற்கும், மிக நன்று.. என்றைக்கு டீ, காபியாக மாறியதோ, அன்றே, எல்லா வியாதிகளும், ஒட்டி கொண்டன. விலங்குகள், என்னை பயன்படுத்துவதில்லை. பொறித்த உணவுகள் சாப்பிடுவதில்லை. ஆனாலும் அதன் உடலில் கொழுப்பு, சிறிய அளவில் சேர்க்கிறது.. எப்படி... விலங்குகள் குழந்தை பருவம் தாண்டி பால் சாப்பிடுவதில்லை. மனித இனம் மட்டும் ஏன் சாப்பிடுகிறது. இதில் நிறைய விஷயங்கள் உள்ளன... கடந்த பத்து ஆண்டுகளாக, இறக்குமதி செய்ய பட்ட என்னை வகைகள் அதிகம் பயன்படுத்த படுகின்றன. இவை எல்லாம் உடல் நலத்திற்கு கேடு... பல மருத்துவமனைகளில் பார்க்கிறோம், மருத்துவர்கள், பணியாளர்கள், பேப்பர் கப்பில் டீ குடிக்கின்றனர். இது தான் மிக பெரிய கேடு. என்னை பலகாரங்கள் ஆகவே ஆகாது. தினசரி வடை, காபி என்பது மிக கேடு.. மருத்துவ வியாபாரம் கருதி இதை யாரும் சொல்வதில்லை.


Sangi Mangi
செப் 01, 2025 17:02

கொரோனா ஊசியின் மகிமை,, நமக்கு கொடுத்த கிபிட்... கிப்ட்


Jeyavel
செப் 01, 2025 15:32

விதி வலியது யாராக இருந்தாலும் விதி முடியும் பொழுது போய் சேர வேண்டியதுதான்.


rama adhavan
செப் 01, 2025 08:47

அதிக பணத்தாசை. அதனால் ஓயாத உழைப்பு. சோர்வு. உடலை சரிவர பராமரிக்காதது. பரிசோதனை செய்யாதது முடிவு மரணம். இது பிற மருத்துவர்களுக்கு பாடம்.


RASIPURAM VIJAYAKUMAR
ஆக 31, 2025 22:18

இன்றைய தலைமுறைஉணவு பழக்க வழக்கத்தால் 2000 ஆண்டு தொடங்கும் முன்பே மாரடைப்பு தொடர்ந்து வருகிறது சிறு வயதினற்கே இதயத்துடிப்பு நின்று விடுகிற அபாயம் உள்ளது அது இதய மருத்துவர்களையும் விட்டு வைக்கவில்லை!!! இறைவன் செயலா அல்லது வேறு காரணங்களா என்பதை கண்டறிய முடியவில்லை என மருத்துவர்களே விவாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்


Suppan
ஆக 31, 2025 22:02

பல ஆண்டுகளுக்கு முன் மும்பையில் இதய அறுவை சிகிச்சையில் பெயர் பெற்ற பிரபல டாக்டர் நீத்து மாண்ட்கே என்பவரின் விரிவுரை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அவர் சொன்னமுக்கிய வார்த்தைகள் ஓயாத உழைப்பு அமைதி இன்மை, பதற்றம் போன்றவை இதயநோய்க்கு வித்திடும். அவரே ஒரு நாளைக்கு 15 மணி நேரம் உழைக்கக்கூடியவர். அவர் பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் ஒரு பெரிய இதய நோய் சிறப்பு மருத்துவ மனை திறக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். அவர் சிவசேனா தலைவர் பால் டாக்கரேவுக்கு சிகிச்சை அளித்தவர் . ஆனாலும் மருத்துவமனைக்கு வேண்டிய அனுமதிகள் கிடைப்பதில் தாமதம் . வட்டி ஏறிக்கொண்டே போய் அந்தக்கவலையிலேயே 52 வயதிலேயே மாரடைப்பில் காலமானார். எல்லோருக்கும் அறிவுரைகள் வழங்கி தானே அதன் படி நடக்காமல் இருந்ததன் விளைவு. தற்பொழுது கோகிலாபென் அம்பானி மருத்துவமனையாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறது.


Tamilan
ஆக 31, 2025 21:55

நாடு கற்காலத்தை நோக்கி பின்னோக்கி செல்கிறது . பேப்பரில் பிரச்சாரத்தில் மட்டும்தான் முன்னோக்கி செல்கிறது


Artist
செப் 01, 2025 06:32

அல்சரில் அவதிப்பட்டு காலத்தை கழி


முக்கிய வீடியோ