உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திராவில் நக்சல் ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்; நக்சலைட்டுகள் 50 பேர் கைது

ஆந்திராவில் நக்சல் ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்; நக்சலைட்டுகள் 50 பேர் கைது

அமராவதி: ஆந்திராவில் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்ட தீவிர நடவடிக்கையில் நக்சலைட்டுகள் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் உள்ள நக்சல்களை ஒழிக்கும் பணியை பாதுகாப்புப் படையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திரா - சத்தீஸ்கர் எல்லையில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆந்திராவில் அல்லுரி சீதாராம ராஜு மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சண்டையில், நக்சலைட்டுகள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.மறுபுறம், ஆந்திராவின்விஜயவாடா, காக்கிநாடா உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் நக்சலைட்டுகள் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிபொருட்கள், ரூ. 13 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.சத்தீஸ்கரில் உள்ள சுக்மா, பிஜாப்பூர், நாராயண்பூர் மற்றும் மேற்கு பஸ்தர் மாவட்டங்களிலிருந்து பல நக்சலைட்டுகள் தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் தற்போது ஆந்திராவில் நடத்தப்பட்டு வரும் தீவிர சோதனையில் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி