உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்ஜினியர் தற்கொலையில் தேடப்பட்டவருக்கு முன்ஜாமின்

இன்ஜினியர் தற்கொலையில் தேடப்பட்டவருக்கு முன்ஜாமின்

பெங்களூரில் உ.பி., இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது உறவினருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கி உள்ளது.உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அதுல் சுபாஷ், 34. பெங்களூரு மாரத்தஹள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை செய்தார்.கடந்த 9ம் தேதி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்பு அவர் பேசிய 90 நிமிட வீடியோவில் மனைவி நிகிதா, மாமியார் நிஷா, மைத்துனர் அனுராக், மனைவியின் மாமா சுஷில் உள்ளிட்டோர் தனக்கு தொல்லை கொடுத்ததாக கூறியிருந்தார்.இதனால் அவர்கள் நான்கு பேர் மீதும் மாரத்தஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நிகிதா, நிஷா, அனுராக் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஆனால், சுஷில் தலைமறைவாக இருந்தார். கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமின் கேட்டு, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.மனுவை நீதிபதி அசுதோஸ் ஸ்ரீவத்சவா நேற்று விசாரித்தார். சுஷில் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் மணீஷ் திவாரி வாதாடுகையில், “எனது மனுதாரருக்கு 69 வயதாகி விட்டது. நாள்பட்ட உடல்நல பிரச்னைகளால் அவதிப்படுகிறார். அதுலை தற்கொலைக்கு துாண்டியதில் இவரது பங்களிப்பு எதுவும் இல்லை. ஆனாலும் அவர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது. அவருக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும்,” என்று வாதிட்டார்.இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, சுஷிலுக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ