உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் வாக்காளராக மீண்டும் பெயரைச் சேர்க்க ஆதாரை ஆவணமாக பயன்படுத்தலாம்: தேர்தல் ஆணையம்

பீஹாரில் வாக்காளராக மீண்டும் பெயரைச் சேர்க்க ஆதாரை ஆவணமாக பயன்படுத்தலாம்: தேர்தல் ஆணையம்

புதுடில்லி: பீஹாரில் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தங்கள் பெயரை சேர்க்க ஆதார் அட்டையின் நகலை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது; பீஹார் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட 65 லட்சம் வாக்காளர்கள் சார்பில் சமர்ப்பிக்கப்படும் ஆட்சேபங்கள், பெயர் சேர்க்க கோரும் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலகர் பரிசீலனை செய்து தீர்வளிக்க, 7 நாட்கள் அவகாசம் இருக்கிறது. இந்த அவகாசத்துக்கு முன்பாக எந்த விண்ணப்பமும் நிராகரிக்கப்படாது.வாக்காளர் பட்டியலில் இருந்து விடுப்பட்டவர்கள் தங்களின் பெயர் சேர்க்க போதிய நியாயமான வாய்ப்பு அளிக்கப்பட்டு, உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னர் வாக்காளர் பதிவு அலுவலரால் வாய்மொழி உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படாத சூழலில், ஆக.1ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து எந்த வாக்காளர் பெயரையும் நீக்க முடியாது.பீஹார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் பீஹார் மாநிலத்தில் உள்ள கலெக்டர்களின் வலை தளங்களில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த பட்டியல் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனை தெரிவிக்க அல்லது வாக்காளர் பட்டியலில் மீண்டும் பெயரை சேர்க்க கோருபவர்கள் தங்கள் விண்ணப்பத்தை ஆதார் அட்டை நகலுடன் சமர்ப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்தை அளிக்க செப்.1, 2025 கடைசி நாளாகும்.ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திற்காக வாக்காளர் பட்டியல்கள் அனைத்து சட்டத்தை பின்பற்றி தான் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன.இவ்வாறு தேர்தல் ஆணையம் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

pakalavan
ஆக 19, 2025 11:08

என்ன? தேர்தல் ஆணையத்தில் இருக்கறவனெல்லாம் என்ன என்னவோ பேசுனீங்க இப்போ ராகுல் வச்சார் பாரு ஆப்பு, இனிமேலு பிஜேபிக்காரனுங்க திருட்டுத்தனம் எல்லாம் இந்தியாவில் பலிக்காது,


Sundar R
ஆக 19, 2025 10:00

65 LAKHS IS SMALL FOR BIHAR


புதிய வீடியோ