உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடுக்குமாடி குடியிருப்பில் தீ ஹரியானாவில் 4 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பில் தீ ஹரியானாவில் 4 பேர் பலி

குருகிராம்: ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், பீஹாரைச் சேர்ந்த முகமது முஸ்தாக், 28, நுார் ஆலம் 27, சஹில், 22, ஆமன், 17, ஆகியோர் வாடகைக்கு வசித்து வந்தனர்.நேற்று முன்தினம் இரவு, நால்வரும் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. புகை சூழ்ந்ததால் நால்வருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது; தீயில் சிக்கிய அவர்கள் உடல் கருகி பலியாகினர். இது பற்றி அறிந்த அக்கம் பக்கத்தினர் தீ அணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ