உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு; கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு; கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் 2 வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை ஆவணங்களை மொழி பெயர்த்து கவர்னருக்கு தமிழக அரசு அனுப்ப வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ரூ.3 கோடி மோசடி செய்துவிட்டார் என்ற புகாரின் பேரில் விருதுநகர் மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து, பின்னர் கைதான அவர், ஜாமினில் விடப்பட்டார். பிறகு இந்த வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்துள்ளது. இதை எதிர்த்து ராஜேந்திர பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீது இன்று (மார்ச் 17) விசாரணை நடைபெற்றது. அப்போது தமிழக அரசு தரப்பில், வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை கொடுத்தால் போதும் என்று கவர்னர் தரப்பில் முதலில் கேட்கப்பட்டது. தற்போது 400 பக்கத்துக்கும் அதிகமான ஆவணங்களை மொழி பெயர்த்து கேட்பதாக வாதிடப்பட்டது.இதையடுத்து. 2 வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை ஆவணங்களை மொழி பெயர்த்து கவர்னருக்கு தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும்.அதன் பின்னர், ராஜேந்திர பாலாஜி மீதான நடவடிக்கைக்கான அனுமதி தருவது தொடர்பாக கவர்னர் முடிவு எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Kasimani Baskaran
மார் 18, 2025 04:04

உச்சப்பஞ்சாயத்தார் கள்ளன் மந்திரியாக ஆட்சியில் இருக்கலாம் என்பது போல செயல்பட்டு மானத்தை வாங்குகிறது.


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 17, 2025 23:04

உச்ச கோர்ட்டுக்கும் ராஜேந்திர பாலாஜியைப் பிடிக்காது .... செந்தில் பாலாஜியைப் பிடிக்கும் .....


Rajeev Murugan
மார் 17, 2025 21:59

ரவியை பிஹாருகே அனுப்பி வைக்க வேண்டும். அவர் அங்கு உள்ள மக்களுக்கு அறிவை புகட்டினால் போதும். தமிழகம் போல் அறிவார்ந்த நாட்டுக்கு அவர் தேவை இல்லை.


S.Martin Manoj
மார் 17, 2025 21:41

எங்கள் வரி பணம் சம்பளமாக கொடுக்கப்படுகிறது.


rama adhavan
மார் 17, 2025 21:21

கவர்னருக்கு அவரது அலுவலில், அதிகாரத்தில் சுப்ரீம் கோர்டோ வேறு எந்த கோர்டோ உத்தரவு போடவே முடியாது. அப்படி போட்டிருந்தால் உத்தரவு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. செல்லாது. பாராளுமன்றம் கண்டனம் செய்யலாம்.


K.n. Dhasarathan
மார் 17, 2025 20:57

கவர்னருக்கு முக்கிய உத்தரவு போடவில்லை உச்ச நீதி மன்றம், கண்டித்திருக்கு அதை ஏன் தினமலர் சரியாக வெளியிடவில்லை ? கவர்னர் ஏன் தாமதம் செய்கிறார் என்றும் இப்போது திடீரென்று மொழி பெயர்ப்பு ஏன் கேட்கிறார் ? என்று தெளிவாக கேட்டிருக்கு?இவ்வளவு நாள் என்னதான் வேலை பண்ணினார்? ஆக குற்றம் சாற்றப்பட்டவர்களுக்கு சாதகமாக செயல்படுகிறார், மக்கள், நீதி, எதைப்பற்றியும் கவலை இல்லை, எனக்கு அதிகாரம் இருக்கு, என்னவேனாலும் பண்ணுவேன் என்கிற தோரணை தான் தெரிகிறது. கவர்னர் பதவிக்கு முற்றிலும் பொருத்தமில்லாத வேலை செய்கிறார் .


srinivasan
மார் 17, 2025 23:03

அப்போது செந்தில் பாலாஜியை அமைச்சர் ஆக பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று சொன்ன போது நீதிமன்றம் தூங்கிக கொண்டு இருந்ததா? இப்போது அவர் அமைச்சர். இப்படி குற்றவாளிகளுக்கு சப்போர்ட் செய்தால் திமுக காரன் சொன்னது போல நீதிபதிகளாக இருப்பது திமுக காரன் போட்ட பிச்சை தான் போல் இருக்கிறது


K.Ramakrishnan
மார் 17, 2025 20:34

பா.ஜ. ஆதரவாளர் என்றாலே அந்த வழக்கின் கதி என்ன என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிந்து விட்டது.


Dharmavaan
மார் 17, 2025 19:35

ஆளுநருக்கு ஆணையிட உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை


Velan Iyengaar
மார் 17, 2025 20:17

இவனுங்க அறிவை மாட்டு கோமியத்துக்கு அடகு வெச்சவனுங்க


Ray
மார் 18, 2025 07:59

அப்படி நீதி மன்றங்களுக்கே அப்பாற்ப்பட்ட எத்தனை சர்வாதிகாரிகள் இந்த நாட்டில்? மாநிலத்துக்கு ஒருவனென்றால் இவங்களுக்கு மேலாக ஒருத்தன் பிரதம சர்வாதிகாரியா மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்களோ?


தாமரை மலர்கிறது
மார் 17, 2025 18:59

ராஜேந்திர பாலாஜி அதிமுகவில் உள்ள பிஜேபி விசுவாசி. அவர் மீது நடவடிக்கை எடுத்து அரசியல்பழிவாங்கலில் திமுக இறங்குகிறது. கவர்னர் அனுமதி கொடுக்க மாட்டார். சுப்ரிம் கோர்ட் கவர்னர் பக்கம் தான் விரைவில் தீர்ப்பு சொல்லும் என்பதில் சந்தேகமில்லை. மத்தியில் பிஜேபி இருக்கும்வரை, தமிழகத்தில் அரசியல் பழிவாங்கல் நடக்க வாய்ப்பில்லை. இப்படித்தான் சீமான் மீது திமுக வழக்குபோட்டது. சுப்ரிம் கோர்ட் விடுவித்தது.


hariharan
மார் 17, 2025 18:59

உச்ச நீதிமன்றம், உச் ... ராஜேந்திர பாலாஜி.


சமீபத்திய செய்தி