உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தினமும் 3.5 லட்சம் புதிய பயனர்கள்; அரட்டை செயலிக்கு அதிகரிக்கும் மவுசு

தினமும் 3.5 லட்சம் புதிய பயனர்கள்; அரட்டை செயலிக்கு அதிகரிக்கும் மவுசு

நமது நிருபர்சுதேசி சமூக வலைதளமான அரட்டைக்கு நாளுக்கு நாளுக்கு நாள் மவுசு அதிகரிக்கிறது.ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக, இந்தியா மீது அமெரிக்கா அநியாய வரி விதிப்பு செய்ததை தொடர்ந்து, உள்நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும் என்று எண்ணம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.வெளிநாடுகளை சேர்ந்த சமூக வலைதளங்களை தவிர்த்து, உள்நாட்டு தயாரிப்பான 'அரட்டை' சமூக வலைதளத்தை பயன்படுத்த வேண்டும் என்று பலரும் எண்ணம் கொண்டு அதை டவுண்லோடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால், இவ்வளவு காலமாக தினமும் சராசரியாக 3500 பேர் வரை இருந்த புதிய பயனர்கள் சேர்க்கை, இப்போது தாறுமாறாக அதிகரித்துள்ளது.தினமும் மூன்றரை லட்சம் பேர் வரை புதியதாக அரட்டை செயலி டவுண்லோடு செய்து கணக்கு தொடங்குகின்றனர்.அதற்கு தகுந்தபடி, அதன் உட்கட்டமைப்பை மாற்றும் பணியில் அரட்டை செயலியின் உரிமையாளரான ஸோகோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதை அந்நிறுவன உரிமையாளர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: நாங்கள் அடிப்படை கட்டமைப்பை அதிகரித்து வருகிறோம். செயலியை நல்ல முறையில் மேம்படுத்தி, குறைகளை சரி செய்து வருகிறோம். வரும் நவம்பர் மாதம் பெரிய அளவில் இந்த செயலியை அறிமுகம் செய்ய இருக்கிறோம். இன்னும் பல புதுமையான அம்சங்கள் அதில் இடம் பெறச் செய்ய இருக்கிறோம்.இன்னும் பல செயல் திட்டங்கள் அரட்டைக்காக உள்ளன. இன்னும் எங்களுக்கு கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுகிறது. உங்கள் பொறுமைக்கு நன்றி. இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

இதுக்கு பெருமை அடைகிறேன்!

அரட்டை செயலிக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: சுதேசி தயாரிப்பை பயன்படுத்தும் நல்லுணர்வை வெல்ல வேறு எதுவும் கிடையாது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயலியான 'அரட்டை' பயன்படுத்துவதில் பெருமை அடைகிறேன். நானும், எனது சகாக்களும் அதில் இருக்கிறோம். அதில் உங்களையும் காண ஆவலுடன் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Jones
செப் 30, 2025 09:15

இந்தியாவின் தயாரிப்பவை ஏற்றுக்கொள்ளலாம். அதேபோல் அமெரிக்காவின் தயாரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்பவர்கள். அந்த நாட்டில் இருக்கும் இந்தியர்கள் அனைவரும் இந்தியா திரும்பவேண்டும் என்று சொல்லுங்கள் பிறகு பார்க்கலாம்


KavikumarRam
செப் 30, 2025 21:42

You do what you want to use as an American


பெரிய குத்தூசி
செப் 29, 2025 21:35

தேசபக்தரான உங்கள் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ள இந்திய முப்படை தளபத்திய ஒருங்கிணைப்பு சிஸ்டம், ஆபரேஷன் சிந்தூர் வெற்றி அடைய முக்கிய காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜைஹிந்த் Shri ஸ்ரீதர் வேம்பு சார்.


KR india
செப் 29, 2025 20:11

ஈமெயில் பாஸ்வேர்ட் மறந்து விட்டால், Rediffmail, Gmail, Microsoft Outlook போன்றவை, நாம் பதிவு செய்திருந்த மொபைல் நம்பர்-க்கு, Reset OTP அனுப்புகிறது சில email service providers மட்டும், சற்று கூடுதலாக, Answer for Secret Question கேட்கிறது. நாம் முதன்முதலில் E-mail registration செய்திருந்த சமயத்தில், அந்த Secret Question Secret Answer கொடுத்திருப்போம். இதெல்லாம், மிகவும் சரி ஏற்றுக் கொள்ளக் கூடியது. ஆனால், இந்த Zoho நிறுவனம் மட்டும், zoho email பாஸ்வேர்ட் மறந்து விட்டால், password RESET செய்ய, முதன்முதலில், Zoho Email பதிவு செய்யும் போது கொடுத்த, Secondary / Recovery Email -க்கு மட்டுமே OTP அனுப்புகிறது. அதே சமயத்தில், பதிவு செய்யப் பட்ட மொபைல் நம்பர்-க்கு reset OTP அனுப்ப மாட்டார்களாம். வங்கிகளின் இணையதள வங்கி சேவைக்கே, மொபைல் நம்பர்- OTP பயன்படுத்தக் கூடிய இந்த காலகட்டத்தில், இந்த Zoho Mail Joke Mail மட்டும், நாம் அவர்களிடம் பதிவு செய்திருந்த மொபைல்-ஐ நம்ப மாட்டார்களாம். முதன்முதலில், zoho mail பதிவு செய்தபோது, Skip Recovery Email என்று இருந்ததை Click செய்து விட்டேன். உலகம் முழுவதும் ஈமெயில் சேவை வழங்கும் நிறுவனங்கள் Registered Mobile OTP-ஐ செய்ய அனுமதிக்கும் போது, இந்த zoho mail "அறிவுக் கொழுந்துகள்" மட்டும், பதிவே செய்யாத , recovery email ஐ- கொடு என்று கேட்டால் நியாயமா ? இதை விட கொடுமை, Zoho mail Reset Password System, மானது, நீங்கள் Reset Password செய்ய விரும்பும் , zoho mail id Enter செய்யுங்கள் என்றது Zoho Email ID பதிவு செய்தவுடன், O.K.We sent Reset OTP to this Email.Kindly enter OTP என்று கேட்கிறது. அந்த Email password தெரிந்தால், நான் ஏன் தங்களிடம் Reset Password கேட்கிறேன் ? Solution for this issue: zoho mail password reset OTP may be sent to Registered Mobile Number instead of Recovery mail id


Modisha
செப் 29, 2025 18:46

ஸ்ரீதர் வேம்பு யார் , என்ன மதம், என்ன ஜாதி என்று பார்த்த பிறகு தான் ஆதரவு அல்லது எதிர்ப்பு தெரிவிக்கப்படும் -


Field Marshal
செப் 29, 2025 17:23

200 வாங்கி கருத்து போடற உளுத்தம்பருப்புகளுக்கு இன்னும் ஒரு சந்தோஷமான செயலி


கோபகுமார். K
செப் 29, 2025 16:36

இதில் ரெஜிஸ்டர் செய்ய இந்தியா மொபைல் நம்பர்களையே மட்டும் ஏற்றுக்கொள்கிறது. வெளிநாட்டு நம்பர்க்கு OTP வரவில்லை


KavikumarRam
செப் 29, 2025 20:54

உண்மை.


பெரிய குத்தூசி
செப் 29, 2025 21:39

நீங்கள் சொல்வது உண்மையில்லை, வெளிநாடு என்னிலிருந்து எனது உறவினர்கள் சிங்கப்பூர், அமெரிக்கா , துபாயிலிருந்து அரட்டை ஆப் மூலம் தொடர்பு கொள்கிறார்கள். country code சரியாக தேர்வு செய்து வெளிநாட்டு எண்ணை போட்டு OTP வாங்கி செட்டப் செய்யவும்


KavikumarRam
செப் 29, 2025 16:07

எங்கள் கல்லூரி வட்டம் இந்த செயலியை ஏற்கனவே பதிவிறக்கி பயன்படுத்தி வருகிறோம். சிறப்பாகத்தான் இருக்கிறது.


முக்கிய வீடியோ