உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெளிநாட்டில் படிக்க போகிறீர்களா ? 2000+ பல்கலைக்கழக முழுவிவரம் இதோ !

வெளிநாட்டில் படிக்க போகிறீர்களா ? 2000+ பல்கலைக்கழக முழுவிவரம் இதோ !

உணவு, உடை, இருப்பிடம் இவை மூன்றும் மனிதனில் அத்தியாவசிய தேவைகள். இவை மூன்றையும் பெற கல்வி மிக முக்கியம். கல்வி இருந்தால் இவை மூன்றையும் எளிதில் பெற முடியும்.என்னதான் நம் நாட்டில் கல்வி கற்க ஏராளமான வசதி, வாய்ப்பு இருந்தாலும், சிலருக்கு அவர்கள் விரும்பிய பாடப்பிரிவு கிடைப்பதில்லை; அப்படியே கிடைத்தாலும் அவர்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் அல்லது ஊரில் கிடைப்பதில்லை. அதனால் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்க மாணவர்கள் விரும்புகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் வெளிநாடுகளில் படிப்பதற்கு இதுதான் முக்கிய காரணம்; இருப்பினும் ஒரு சிலர் வெளிநாட்டில் படித்தோம் என்று பெருமைப்பட்டு கொள்வதற்காக வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களை நாடுகின்றனர்.

அடுக்கடுக்கான கேள்விகள்

எது எப்படி இருப்பினும் எந்த நாட்டில் எந்த பல்கலைக்கழகத்தில் என்னென்ன பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன? அதற்கான செலவு எவ்வளவு? அந்த பல்கலைக்கழகங்களின் இணையதள முகவரி என்ன? அந்த நாட்டிற்கு படிக்கச் செல்வதற்கான விசா அனுமதியை எப்படி பெறுவது? அந்த விசா எந்த அளவுக்குப் பயன்படும்? அந்த விசா மூலம் படித்துக் கொண்டே அந்த நாட்டில் வேலை செய்ய வாய்ப்பு இருக்கிறதா' படிப்பிற்கான விசா காலத்தை நீட்டித்துக் கொள்ள முடியுமா? விசா பெறுவதற்கான ஆவணங்கள் என்னென்ன ? பல்கலை.,யில் என்ன என்ன பாடங்கள் உள்ளது ?படிப்பை முடித்தபிறகு அந்த நாட்டில் வேலை தேட விரும்பினால் அதற்கு என்ன செய்வது?

இது போன்ற சந்தேகங்கள் மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோருக்கு எழுவது இயற்கையே.மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோரின் சந்தேகங்களைப் போக்கும் வகையில் ஒவ்வொரு நாட்டிலும் என்னென்ன பல்கலைக்கழகங்கள், இது தொடர்பான அனைத்து தகவல்களும் நமது இணைய தளபக்கத்தில் விலாவாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

700 பல்கலைக்கழக விவரம்

வெளிநாடு சென்று கற்க விரும்புவோர்க்கும் அவர்களுடைய பெற்றோர்க்கும் இந்த பகுதி ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும். நமது இணையதளத்தில் ' உலகத் தமிழர் செய்திகள் ' பிரிவில், ' வெளிநாட்டுத் தகவல்கள்' என்ற தலைப்பில் இதுவரை 69 நாடுகளைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் முழு விவரம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இதற்கான இணையதள முகவரி கீழே தரப்பட்டுள்ளது. அனைவரும் இதைப்படித்து பயன்பெற விரும்புகிறோம்.

கிளிக் செய்யுங்கள்

https://www.dinamalar.com/world-news-nri-ta/educational-and-tours-informationsமேலும் மீதமுள்ள 122 நாடுகளை சேர்ந்த ஆயிரத்து 200 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் முழுவிவரம் விரைவில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

RAMAKRISHNAN NATESAN
மே 05, 2025 06:21

சில நாடுகளைத் தவிர பெரும்பாலான நாடுகளில் கல்வித்தரம் சுமார் ரகம் .... அதற்கு நமது கல்வி நிலையங்களே பரவாயில்லை .... கனடா சராசரி இந்தியர்களுக்கு டார்கெட்டாக இருந்தாலும் அங்கே புதிய அரசின் செயல்பாடு எப்படி இருக்குமோ ? முன்புபோல வெளிநாடுகளில் படிப்பது சாதாரணம் இல்லை .... ஒருவேளை இங்கே கூலிக்கு மாரடிக்கும் ஊ ஊ பீ ஸ் க்கு மன்னர் குடும்பம் செலவு செய்கிறதோ என்னவோ ?


Barakat Ali
மே 05, 2025 05:42

மேலும் மீதமுள்ள 122 நாடுகளை சேர்ந்த ஆயிரத்து 200 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் முழுவிவரம் விரைவில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. அதற்காக வலைப்பக்கத்தை மாற்றவேண்டாம் .... இதிலேயே அப்டேட் பண்ணுங்க ..... ரொம்ப நன்றி .....


R Dhasarathan
மே 04, 2025 18:40

இங்கு நிறைய படிக்க வேண்டும், மார்க் மற்றும் நுழைவு தேர்வு மதிப்பெண்கள் தேவை.


Balasubramanyan
மே 04, 2025 14:31

Pl.tell the ranking order of universities in TamilNadu.


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 04, 2025 16:59

You can search to get the details. Many sources are there.


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 04, 2025 10:56

வலைப்பக்க முகவரியைக் கொடுத்ததற்கு நன்றி .....


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 04, 2025 10:54

கருத்துக்கள் வாயிலாக இணையதள முகவரிகளைக் கொடுத்தால் அவை வெளிவரா .... ஆனால் நீங்கள் கொடுப்பீங்க ......


GMM
மே 04, 2025 10:11

இஸ்ரேல் முதல் அல்ஜிரியா வரை பல்கலை விவரம் லிங்க் மூலம் கிடைத்தது.


anbu
மே 04, 2025 09:51

இந்தியாவிலேயே படிக்கலாம் நல்ல கல்லூரி இல்லையா


Chess Player
மே 04, 2025 14:16

ஆனால் இடஒதுக்கீடு கட்டுப்பாடுகள் போன்றவற்றுடன், தகுதி உள்ள மாணவர்கள் இந்தியாவுக்கு வெளியே செல்லலாம். இறுதியில், நாம் வாழ்க்கையில் மேலே வர வேண்டும் இல்லையா?


பாமரன்
மே 04, 2025 09:45

மிகவும் நல்ல முயற்சி.. இந்த முன்னெடுப்பு செய்த மலரை வெகுவாக பாராட்டலாம்... என் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க நிறையவே ஆராய்ச்சிகள் செய்ய வேண்டியிருந்தது ... இது போன்ற தகவல்கள் அப்போது போதுமான அளவு இல்லை... ரெண்டு ரிக்வஸ்ட்கள்... சில வெளிநாட்டு பல்கலையின் தனியார் ஏஜென்டுகள் போல ஒரு நாட்டின் ஒரு சில கமிஷன் குடுக்குற பல்கலை விவரங்கள் மட்டுமே தராமல் எல்லாவற்றையும் நிறைகுறைகளுடன் பட்டியலிடுங்கள்... வரும் சில வாரங்களுக்கு மலர் சமூக வலைத்தள பக்கத்தில் முதல் பக்கத்தில் நாள் முழுவதும் வருமாறு செய்யவும்... மீண்டும் வாழ்த்துக்கள்


Kasimani Baskaran
மே 04, 2025 06:45

லிங்க் வேலை செய்யவில்லை...


பாமரன்
மே 04, 2025 09:39

வலைத்தள பக்கம் போய் க்ளிக் பண்ணுங்க காசி... வேலை செய்கிறது ... ஆப் மூலம் நீங்கள் ஓப்பன் செய்திருந்தால் வராது...


Kasimani Baskaran
மே 04, 2025 10:42

காலையில் வரவில்லை. இப்பொழுது வேலை செய்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை