உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொரோனா தடுப்பூசியால் வாதம்? வழக்கு தொடர கோர்ட் அறிவுரை

கொரோனா தடுப்பூசியால் வாதம்? வழக்கு தொடர கோர்ட் அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கொரோனா தடுப்பூசி போட்டதால், கீழ்மூட்டு வாதம் ஏற்பட்டதாக மனு தாக்கல் செய்தவரிடம், நஷ்டஈடு வழக்கு தொடரும்படி உச்ச நீதிமன்றம் நேற்று அறிவுறுத்தியது. கடந்த 2020-ல் கொரோனா பரவியபோது, அதை கட்டுப்படுத்துவதற்காக, 'கோவிஷீல்டு, 'கோவாக்சின்' தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. நம் நாட்டில் கோடிக்கணக்கானோர், இரண்டு தவணைகளாக அவற்றை போட்டுக் கொண்டனர்.

இழப்பீடு

அவர்களில் சிலர், தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படுவதாக கூறி வருகின்றனர். இந்த நிலையில், 100 சதவீதம் அளவுக்கு கீழ்மூட்டு வாத குறைபாடு ஏற்பட்ட ஒருவர், கொரோனா தடுப்பூசியால் பாதிக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.அதில், 'கோவிஷீல்டு தடுப்பூசி முதல் தவணை போட்ட பின், பக்க விளைவுகளால் அவதிப்பட்டு கீழ்மூட்டு வாத குறைபாடு ஏற்பட்டது.'எனவே, சிகிச்சை செலவு, எதிர்கால மருத்துவ செலவுகளுக்கு பொறுப்பேற்கும்படி தடுப்பூசியை தயாரித்த, 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' மற்றும் தடுப்பூசி மையத்துக்கு உத்தரவிட வேண்டும்.'என் உடல் ஊனத்துக்கு சிகிச்சையே அளிக்க முடியாத நிலை ஏற்பட்டால் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்டு வரும் பக்க விளைவுகள், அது தொடர்பான பிரச்னைகளை தீர்க்கும் வகையில் பொருத்தமான வழிகாட்டுதல்களை வகுக்கும்படி உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டது.இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இதற்கு ரிட் மனுவை எப்படி தாக்கல் செய்ய முடியும்? நஷ்டஈடு வழக்கை தாக்கல் செய்யுங்கள். வழிகாட்டுதல்களை வழங்கக் கோரும், உங்களுடைய ரிட் மனுவை இங்கேயே நிலுவையில் வைத்தால், 10 ஆண்டுகளுக்கு எதுவும் நடக்காது.

நஷ்ட ஈடு

'குறைந்தபட்சம் வழக்காக தொடர்ந்தால், ஓராண்டு அல்லது இரண்டு - மூன்று ஆண்டுகளுக்குள்ளாவது உங்களுக்கு சிறிது நிவாரணம் கிடைக்கும்' என, மனுதாரரின் வழக்கறிஞரிடம் நீதிபதிகள் தெரிவித்தனர். அதற்கு மனுதாரரின் வழக்கறிஞர், 'ஏற்கனவே இதே விவகாரம் தொடர்பாக இரண்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன' என்றார்.உடனே நீதிபதிகள், 'மனுதாரர் விரும்பினால், இதையும் நிலுவையில் வைக்கலாமா?' என கேள்வி எழுப்பினர். இதையடுத்து, நஷ்டஈடு வழக்கு தாக்கல் செய்வது குறித்து மனுதாரருடன் ஆலோசித்து ஒரு வாரத்தில் தெரிவிப்பதாக வழக்கறிஞர் தெரிவித்தார். இதனால், வழக்கு விசாரணை ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ram pollachi
ஏப் 22, 2025 15:48

கடந்த ஆறு மாதங்களாக கோவை மாவட்டத்தில் பலருக்கு வாத நோய் ஏற்பட்டு வீட்டில் படுத்துக் கொண்டு உள்ளார்கள்.... சிலர் வீதிகளில் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறார்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை போல்... அறிகுறி தெரிந்த மூன்று மணி நேரத்திற்குள் சிகிச்சை அளித்தால் தப்பித்து விடுவர் இல்லை என்றால் படுத்த படுக்கை தான்.... இவர்கள் நாம் சொல்வதை கேட்க மாட்டார்கள் ஆக பார்த்துக் கொள்ள வேலைக்கு ஆட்களை போட்டால் மாதம் ரூபாய் இருபத்து ஐந்து ஆயிரம் கேட்கிறார்கள், இவர்களின் சேவையும் மகா மட்டம்.. தற்போதைய வேலை வாய்ப்பு இது தான்... கொரோனா ஊசியா? நெஞ்சு வலியா? சிறுநீரக பாதிப்பா? முழங்கால் வலியா என்ன காரணம் என்று புரியாத புதிர் போல் உள்ளது.


ஆரூர் ரங்
ஏப் 22, 2025 11:08

தடுப்பூசி போட்டதால்தான் இத்தனை கோடி மக்களைக் காப்பாற்ற முடிந்தது. AYUSH உட்பட எல்லா வகை மருத்துவத்திலும் பக்க விளைவுகள் இருக்கலாம். அதற்காக உலகையே அழிக்கக்கூடிய ஒரு பெருந்தொற்றைத் தவிர்க்க தடுப்பூசி போடாமல் இருக்க முடியாது


Padmasridharan
ஏப் 22, 2025 08:21

பெண்களுக்கு வராத heart attack வந்து இறக்கிறார்கள். மருந்துகள் கொடுக்கும் முன் B.P, Diabetes இருக்கா என்று கேட்பவர்கள், கேட்காமலேயே கட்டாயப்படுத்தி தடுப்பூசிகள் பெரியவர்களுக்கு போடப்பட்டிருக்கின்றன. இதனால் தடுப்பூசி போட்டவர்கள் Blood Pressure யை கட்டுக்குள் வைத்திருங்கள்.


Kasimani Baskaran
ஏப் 22, 2025 04:00

கோவிட் தடுப்பூசி ஒவ்வொன்றும் கூடுதலான சேதத்தை ஏற்படுத்தியவை - ஆனால் உயிர் போகாத அளவுக்கு பார்த்துக்கொள்ளும் என்பது ஆறுதல்.. சர்வதேச அளவில் ஜனத்தொகையை குறைக்க கம்முனிச விஞ்ஞானம் பயன்படுத்திய வைரஸ் தொழில் நுணுக்கத்தில் சிக்காமல் தப்பியது தடுப்பூசியின் வரப்பிரசாதம் - ஆனால் அதை ஒரு சாபமாக நினைப்பது ஒரு வகை திராவிட விஞ்ஞானம்.


kalyan
ஏப் 22, 2025 02:55

ஆளுநரும் ஜனாதிபதியும் எல்லா முடிவுகளையும் 3 மாதத்திற்குள் தெரிவிக்க வேண்டும் . அதற்கு பல நாட்டு சட்டங்களையும் உச்சநீதி மன்றம் மேற்கோள் காட்டுகிறது சிங்கப்பூர் உட்பட . ஆனால் அந்நாடுகளில் வழக்குகளின் தீர்ப்பை வழங்கும் அவகாசத்திற்கும் நீதிமன்றங்கள் உட்பட வேண்டிய சட்டங்கள் உள்ளன. அவற்றை நம் நீதி மன்றங்கள் ஏற்குமா? துணை ஜனாதிபதி கூறுவதில் சில உண்மைகள் உள்ளன